Home /News /lifestyle /

ஜொலிக்கும் சருமம் வேண்டுமா..? பிங்க் சால்டுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து அப்ளை செய்து பாருங்க

ஜொலிக்கும் சருமம் வேண்டுமா..? பிங்க் சால்டுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து அப்ளை செய்து பாருங்க

பியூட்டி டிப்ஸ்

பியூட்டி டிப்ஸ்

பிங்க் உப்பில் கால்சியம், குளோரைடு, இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற சருமத்திற்கு நன்மை செய்யும் பல தாதுக்கள் உள்ளன. மறுபுறம், ரோஸ் வாட்டரில் குணப்படுத்துதல், ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன.

மேலும் படிக்கவும் ...
மாசு மருவற்ற ஜொலி ஜொலிக்கும் சருமம் வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது. அப்படி பிரகாசமான சருமத்தை பெற வேண்டும் என்றால், எக்ஸ்போலியேட் எனப்படும் சரும பராமரிப்பு செயல்முறை பலன் தரும். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் முகத்தை ஸ்க்ரப் செய்வது உங்கள் சருமத்தின் தோற்றத்தை பெரிதும் மேம்படுத்தும்.

உண்மையில், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், சரியான பொருட்களை கலந்து, ஸ்க்ரப் செய்தாலே போதும், அது சரும ஆரோக்கியத்தை உறுதி செய்வதோடு, முகப்பரு, எண்ணெய் பிசுபிசுப்பு மற்றும் வடுக்கள் போன்ற பொதுவான பிரச்சனைகளை நீக்கவும் உதவுகிறது.

எனவே, பிங்க் சால்ட் எனப்படும் இளஞ்சிவப்பு நிற உப்பு மற்றும் ரோஸ் வாட்டர் ஆகிய இரண்டு பொருட்களை மட்டுமே கொண்டு எளிமையான முறையில் வீட்டிலேயே ஸ்க்ரப் தயாரிப்பது எப்படி என்றும், அதனை பயன்படுத்துவதால் என்னென்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என்றும் விளக்கமளித்துள்ளோம்.

பிங்க் உப்பு என்பது உலகில் கிடைக்கும் கடல் உப்பின் தூய்மையான வடிவம். உணவு உலகில் டிரெண்டிங்கில் இருக்கும் இத்துடன், சில துளிகள் ரோஸ் வாட்டரை கலக்கும்போது இது சருமத்திற்கு நிறைய நன்மைகளை தரும் கலவையாக மாற்றமடைகிறது.

ஏனெனில் பிங்க் உப்பில் கால்சியம், குளோரைடு, இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற சருமத்திற்கு நன்மை செய்யும் பல தாதுக்கள் உள்ளன. மறுபுறம், ரோஸ் வாட்டரில் குணப்படுத்துதல், ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. DIY ஸ்க்ரப் தயாரிப்பில், அவற்றை ஒன்றாக பயன்படுத்துவது ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற உதவும்.



பிங்க் உப்பு மற்றும் ரோஸ் வாட்டர் கொண்டு ஸ்க்ரப் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:

பிங்க் உப்பு - 1 தேக்கரண்டி
ரோஸ் வாட்டர் - 7 முதல் 8 துளிகள்
தேன் - 1 டீஸ்பூன்

தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் முறைகள்:

ஒரு கிண்ணத்தில், பிங்க் உப்பு, தேன் மற்றும் சில துளிகள் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். இந்த ஸ்க்ரப்பை உங்கள் முகத்தில் தடவி, உங்கள் விரல் நுனியை பயன்படுத்தி சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் வரை மெதுவாக மசாஜ் செய்யவும். அதன் பின்னர் சுத்தமான நீரில் முகத்தை கழுவவும். உங்கள் முகத்தை சுத்தம் செய்ய லேசான ஃபேஸ் வாஷையும் பயன்படுத்தலாம்.

சருமத்திற்கான அத்தனை பிரச்சனைகளுக்கும் சமையலறையிலேயே பலன் இருக்கு... அவை என்னென்ன தெரியுமா..?

பிங்க் உப்பு மற்றும் ரோஸ் வாட்டரை ஸ்க்ரப் நன்மைகள்:

1. பிங்க் சால்ட் ஒரு சிறந்த நச்சு நீக்கியாகும். இது உங்கள் தோலில் இருந்து நச்சுகளை நீக்கி, சரும துளைகள் ஈசியாக சுவாசிக்க வைக்கிறது.

2. இளஞ்சிவப்பு உப்பின் குறைவாக அறியப்பட்ட நன்மை என்னவென்றால், அது துர்நாற்றத்தை நீக்குகிறது. வாய் துர்நாற்றம் அல்லது உடல் துர்நாற்றம் எதுவாக இருந்தாலும், ரோஸ் வாட்டருடன் கலக்கும் போது பிங்க் சால்ட் சருமத்திற்கு மேலும் பல நன்மைகளை கொடுக்கிறது.



3. இந்த ஸ்க்ரப் சீரம் உற்பத்தியை குறைக்க உதவுகிறது மற்றும் தோல் தடிமனாவதை கட்டுப்படுத்துகிறது, இது கறைகள் மற்றும் முகப்பருவை குறைக்கவும் உதவுகிறது.

4. பிங்க் உப்பு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்த ஸ்க்ரப் சோர்வான கண்கள் மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

5. இது உங்கள் சருமத்திற்கு கூடுதல் நீரேற்றத்தை வழங்குவதோடு, நம்ப முடியாத அளவிற்கு பளபளப்பையும் கொடுக்கிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Pink salt, Rose water

அடுத்த செய்தி