• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பிம்பிள் வராம இருக்கணுமா? டிஷு யூஸ் பண்ணவே கூடாதாம்..அன்பே வா பூமிகா டிப்ஸ்!

பிம்பிள் வராம இருக்கணுமா? டிஷு யூஸ் பண்ணவே கூடாதாம்..அன்பே வா பூமிகா டிப்ஸ்!

அன்பே வா சீரியல் பூமிகா

அன்பே வா சீரியல் பூமிகா

பிம்பிள் சைஸ் குறைந்து விடுவாம். நகத்தை மட்டும் அதில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமாம்.

  • Share this:
    அன்பே வா சீரியலில் பூமிகா ரோலில் நடிக்கு நடிகை டெல்னா டேவிஸ், பிம்பிளுக்கு சொல்லும் சூப்பரான டிப்ஸை நோட் பண்ணிக்கோங்க.

    சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பறந்த நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர் டெல்னா டேவிஸ். சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் அன்பே வா சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுமாகியுள்ளார். முதல் சீரியலிலே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுவிட்டார். இவருக்காவே இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள் தனி கூட்டம். சோஷியல் மீடியாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டுள்ளார். சீரியலில் இவரின் காஸ்ட்யூம்களுக்கு பயங்கர ஃபேன்ஸ். கல்லூரி பெண்கள் மத்தியிலும் இவரின் காஸ்ட்யூம், மேக்கப் குறித்த பேச்சு பரவலாக உண்டு. டஸ்கி ஸ்கீன் டோனில் இருந்தவர்  இப்போது பயங்கர கலராக மாறிவிட்டார். அதற்கு ஏற்றார் போல் ஃபுட் மற்றும் டயட்களை ஃபாலோ செய்கிறார்.

    முகத்திற்கு இவர் சொல்லும் அழகு குறிப்புகளை இப்போது பார்க்கலாம். முகத்திற்கு எப்போதுமே மேக்கப் போடுவதால் அதை கட்டாயம் தேங்காய் எண்ணெய் கொண்டு தான் ரிமூ செய்வாராம். குறிப்பாக முகத்தில் வெட் டிஷுவை யூஸ் பண்ண மாட்டாராம். அதே போல் பிம்பிள் முகத்தில் வந்தால் அதை ஐஸ்கட்டி கொண்டு தான் கிளீன் செய்வாராம். ஐஸ்கட்டி மட்டுமே வைத்தால் போதுமாம் பிம்பிள் சைஸ் குறைந்து விடுவாம். நகத்தை மட்டும் அதில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமாம்.

    பியூட்டி பாலர் போக மாட்டேன்.. முடி சூப்பரா இருக்க இது தான் காரணம்- தமிழும் சரஸ்வதியும் கோதை அம்மா

    எப்போதுமே முகத்தில் பிம்பிள் வந்ததும் தேனை அந்த இடத்தில் அப்ளை செய்தால் அது மற்ற இடத்திற்கு பரவாமல் இருக்குமாம். அதே போல் ஆலோவேரா ஜெல்லை முகத்திற்குபயன்படுத்துவது அவ்வளவு நல்லதாம். இப்படி ஏகப்பட்ட டிப்ஸ்களை ஃபலோ செய்கிறார் டெல்னா.



    நேரம் கிடைக்கும் போதெல்லாம் நெல்லிக்காய் சாப்பிடுவது நல்ல பழக்கமாம். தலையில் அதிகம் பொடுகு சேராமல் பார்த்துக் கொண்டாலும் பிம்பிள் வராதாம். இப்படி முகத்திற்கு தனி கேரிங் எடுத்து பார்த்துக் கொண்டாலே போதுமாம். பிம்பிள் முகத்தில் எட்டி கூட பார்க்காதாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: