பிக் பாஸ் புகழ் லாஸ்லியா முகப்பருக்கள் மறைய அவரே டிரை செய்த சூப்பர் ரெமிடி ஒன்றை பகிர்ந்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் லட்சணக்கான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த போட்டியாளர்களில் லாஸ்லியாவும் ஒருவர். இலங்கையில் இருந்து வந்தவர் கியூட் எக்ஸ்பிரஷன்கள், தமிழ் பேச்சு என இளைஞர்களை கவர்ந்து விட்டார். அதன் மூலம் கிடைத்த வரவேற்பால் இப்போது ஹர்பஜன் சிங் உடன் பிரண்ட்ஷிப் படத்திலும் நடித்து விட்டார். இன்னும் அவர் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா வாழ்க்கையில் ஏகப்பட்ட மாற்றங்கள். அவரின் தோற்றத்திலும் பல மாற்றங்கள். முன்பை விட வெயிட் லாஸ் செய்து, முகத்தில் முகப்பருக்களே இல்லாமல் கிளீஸ் ஸ்கீன்னை பெற்றுள்ளார். அதற்கு காரணமான சில ரெமிடிகளையும் அவர் ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
பெண்களுக்கு முகப்பரு பிரச்சனை என்பது ஒரு உலக நோய் போல. 16 வயதில் தொடங்கி 21 வயது வரை முகப்பருக்கள் பெண்களை பாடாய்ப்படுத்திவிடும். அதிலும் டீன் ஏஜ் பெண்கள் இதுக்குறித்து பெரிதும் கவலைப்படுவார்கள். சிலர் தன்னம்பிக்கை இழந்து வெளியில் முகத்தை காட்டவே விரும்ப மாட்டார்கள். ஆனால் உண்மையில் முகப்பரு அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லை. அதை ஆரம்பத்திலே கவனிக்க தொடங்கினால் முகத்தை காப்பாற்றிக் கொள்ளலாம். ஆன்லைனில் பல பிம்பிள்ஸ் தொடர்பான ஹோம் ரெமிடி வீடியோக்களை அதிகம் பார்க்க முடிகிறது. காரணம் அதுக்குறித்த தேடல்கள் தினமும் அதிகரிப்பதே. நடிகை லாஸ்லியாவும் இப்படி தான். அவரின் முகத்தில் அதிக முகப்பருக்களை பார்த்து இருப்போம். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே வனிதா அவருக்கு புதினா ரெமிடி பற்றி ஒருமுறை கூறி இருந்தார். இந்நிலையில் தற்போது லாஸ்லியா தனது முகப்பரு பிரச்சனைக்கு குட் பாய் சொல்லிவிட்டார். அதற்காக அவர் மேற்கொண்ட வழிமுறைகளை பார்க்கலாம் வாங்க.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
லாஸ்லியாவுக்கு pcod பிரச்சனை இருந்து இருக்கிறது. அதன் வெளிப்பாடு தான் அவரின் முகத்தில் இருந்த பருக்கள். அதற்காக தோல் மருத்துவரை சந்தித்த அவர் அதற்கான முறையான சிகிச்சைகளை எடுக்க தொடங்கினார். வெயிட் லாஸூம் செய்திருக்கிறார். அதற்கு அடுத்ததாக அவருக்கு பெரிதும் கைக்கொடுத்த ரெமிடி ஓட்ஸ் தான். ஓட்ஸ் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு, தயிர் சேர்த்து மாஸ்க் போல் 20 நிமிடம் முகத்தில் போட்டு எடுத்தால் பருக்கள் படிப்படியாக குறைந்ததாம். அதே போல் வாரத்திற்கு ஒருமுறை ஸ்கிரப். அதுவும் ஓட்ஸ் தான். ஓட்ஸை பொடியாக்கி அதில் எலுமிச்சை சாறு சேர்த்து ஸ்கிரப் போல் முகத்தில் போட்டு தேய்த்து முகத்தை கவுவாராம். இதனால் அவரின் பருக்கள் குறைவதே அவர் உணர்ந்தாராம்.
அவரை போலவே பருக்கள் இருப்பவர்கள் இதை ட்ரை பண்ணி பார்க்கலாம் என்றும் லாஸ்லியா தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Losliya