Home /News /lifestyle /

உங்கள் பாதங்களை அழகாக்க பெடிக்யூர் செய்வற்கு முன்னர் இதை மறக்காமல் செய்துவிடுங்கள்.!

உங்கள் பாதங்களை அழகாக்க பெடிக்யூர் செய்வற்கு முன்னர் இதை மறக்காமல் செய்துவிடுங்கள்.!

பெடிக்யூர்

பெடிக்யூர்

Pedicure | உங்களது பாதங்களை அழகாக வைத்துக்கொள்ள பெடிக்யூர் மேற்கொள்வதற்கு முன்னர் உங்களது நகங்களை நேராக வெட்டிக்கொள்வது, நெயில் பாலிஸ் போடுவது போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள் என்கின்றனர் அழகு கலை நிபுணர்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
பெண்கள் தங்களது முகத்தைப் பாராமரிக்கும் அளவிற்கு தம்மைத் தாங்கும் பாதங்களை அவர்கள் முறையாகப் பராமரிப்பதில்லை. வேலை, குழந்தைகளைக் கவனிப்பது போன்ற பல காரணங்களால் இதெல்லாம் நமக்குத் தேவையா? என நினைப்பதோடு, இதுப்போன்ற பாதங்களைப் பராமரிக்கும் பெடிக்யூர் சிகிச்சை மேற்கொள்ள அழகுநிலையங்களுக்குத் தான் செல்ல வேண்டும் என்று முற்றிலும் தவிர்த்து விடுவார்கள். ஆனால் ப்யூட்டி பார்லர்களுக்குச் செல்லாமல் ஒரு ப்ரஷ், நெயில் கட்டர், நெயில் பாலிஷ் இருந்தால் வீட்டிலேயே நீங்கள் பெடிக்யூர் மேற்கொள்ளலாம். ஆனால் பெடிக்யூர் செய்வதற்கு முன்னர் இதையெல்லாம் நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் அழகு கலை நிபுணர்கள். அப்படி என்னென்ன விஷயங்கள் தெரியுமா?

பெடிக்யூர் செய்வதற்கு முன்னர் முதலில் கால்களில் உள்ள நகங்களை வெட்டிக்கொள்ள வேண்டும். கார்னர்களில் உள்நோக்கி வெட்டினால் வலி ஏற்படும் என்பதால் இதனைத் தவிர்க்க வேண்டும். தொடர்ந்து நெயில் பாலிஷ் ரிமூவர் மூலம் பழைய நெயில் பாலிஷை அகற்றி, நகங்களை நன்றாகச் சுத்தம் செய்யவும். முன்னதாக உங்களுக்குப் பிடித்த U வடிவம் அல்லது Round வடிவில் உங்களது நகங்களை ஷேப் செய்துக்கொள்ளவும்.

மேலும் உங்களது நகங்களில் நேரடியாக நெயில் பாலிஸ் அடிக்காதீர்கள். இது உங்களது நகங்களில் நிரந்தக் கறையை உங்களுக்கு ஏற்படுத்தக்கூடும். எனவே இதனை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.



உங்களது நகங்களில் ஏதேனும் சிறிய புண் எதுவும் இருந்தால், அவற்றை வெட்டாமல் க்யூட்டிகல் ஆயில் அப்ளிகேஷனை நீங்கள் வழக்கமாகப் பின்பற்ற வேண்டும். இது உங்களது புண் ஆறுவதற்கு உதவியாக இருக்கும். ஒருவேளை உங்களால் இதனை வாங்க முடியவில்லை என்றால் வீட்டில் உள்ள ஆமணக்கு எண்ணெயை நீங்கள் பயன்படுத்தலாம்.

உங்களது பாதங்களை அழகாகவும், நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க பதினைந்து நாள்கள் அல்லது மாதத்திற்கு ஒருமுறையாவது நீங்கள் பெடிக்யூர் செய்ய வேண்டும்.

Also Read : மழை சீசனில் பளபளப்பான சருமத்தை பெற உதவும் பயனுள்ள தோல் பராமரிப்பு டிப்ஸ்கள்..!

பெடிக்யூர் செய்வதால் ஏற்படும் நன்மைகள்:

உங்களது விரல் நகங்களையும், பாதங்களையும் அழகுப்படுத்துவதற்கு மட்டுமில்லாமல், சுத்தமாக வைத்திருக்கவும் பெடிக்யூர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இது உங்களது உடல் ஆரோக்கியமாகவும், தசைகளை புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது.



கால்களில் பூஞ்சை, தொற்று, கிருமிகள் போன்றவற்றை முன்கூட்டியே அறிந்துக்கொள்ளவும் இந்த சிகிச்சை முறை உதவுகிறது. மேலும் கிருமிகளை அவ்வப்போது சுத்தம் செய்து வந்தாலே பாதங்கள் ப்ரைட்டாகவும் இருக்கும்.

குறிப்பாக கை நகங்கள் வழியாக மட்டுமில்லை கால் நகங்கள் வழியாகவும் உடலுக்குள் கிருமிகள் நுழைகிறது.எனவே பெடிக்யூர் சிகிச்சை முறை மூலம் உங்களது பாதங்களில் உள்ள அழுக்கை நீக்கி சுத்தமாக வைத்திருப்பதால் பூஞ்சை தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.

Also Read : எந்த கெமிக்கலும் இல்லாமல் கண்களை ஐலைனரால் அலங்கரிக்க வேண்டுமா.? இதோ உங்களுக்கான ப்யூட்டி டிப்ஸ்.!

அழகு என்பது முகத்தில் மட்டும் இல்லை உச்சி முதல் பாதம் வரை அனைத்தையும் பராமரிப்பதில் தான் உள்ளது என்பதால் இதுப்போன்ற சிகிச்சை முறைகளை நீங்கள் மேற்கொள்ள மறந்துவிடாதீர்கள்.
Published by:Selvi M
First published:

Tags: Beauty Tips, Lifestyle, Pedicure

அடுத்த செய்தி