ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

புத்தாண்டு இரவு கொண்டாட்டத்திற்கு தயாராகிட்டீங்களா..? இந்த அசத்தல் பார்ட்டி மேக்அப் டிரை பண்ணி பாருங்க...

புத்தாண்டு இரவு கொண்டாட்டத்திற்கு தயாராகிட்டீங்களா..? இந்த அசத்தல் பார்ட்டி மேக்அப் டிரை பண்ணி பாருங்க...

பார்ட்டி மேக்அப்

பார்ட்டி மேக்அப்

இரவு கொண்டாட்டம்…கேளிக்கைகளுக்கு திட்டங்களோடு இருக்கும் பெண்களே..ஜொலிக்கும் விளக்குகளுக்கு மத்தியில் நீங்களும் மிளிர வேண்டாமா..?

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு உலகமே தயாராகிக் கொண்டிருக்கிறது . இரவு கொண்டாட்டம்…கேளிக்கைகளுக்கு திட்டங்களோடு இருக்கும் பெண்களே..ஜொலிக்கும் விளக்குகளுக்கு மத்தியில் நீங்களும் மிளிர வேண்டாமா..? அதற்கு ஏற்ற அலங்காரம் செய்துகொள்ள இதோ வழிமுறைகள்.!

படி 1 : முகத்திற்கு ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும் ஃபேஸ் கிரீம், மாய்ஸ்சரைஸர் அப்ளை செய்யுங்கள்.

படி 2 : அடுத்ததாக முகத்தில் உள்ள கருவலையம், கரும்புள்ளிகளை மறைக்க உதவும் கன்சீலரை அப்ளை செய்யுங்கள். இதை கண்களுக்குக் கீழ், நெற்றி, மூக்கு, கரும்புள்ளி, கருமை போன்றவை இருக்கும் இடத்தில் மட்டும் அப்ளை செய்யுங்கள். இது சீரான நிறத் தோற்றத்தை அளிக்க உதவும்.

படி 3 : உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஃபவுண்டேஷனைத் தேர்வு செய்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். அப்ளை செய்ய ஃபவுண்டேஷன் பிரஷ் அல்லது ஸ்பாஞ்ச் பயன்படுத்துங்கள். திட்டு திட்டாக இல்லாமல் சீராக முகம் முழுவதும் அப்ளை செய்யுங்கள்.

படி 4 : தேவைப்பட்டால் காம்பேக்ட் பவுடர் அப்ளை செய்யுங்கள்.

படி 5 : முகத்தில் கிளிட்டர் ஷைனில் ஜொலிக்க கன்னத்தில் ஹைலைட்டர் பயன்படுத்துங்கள். ஒரு துளி எடுத்துக்கொள்வது போதுமானது. பின் மேல் நெற்றி, தாடை, மூக்கிலும் கொஞ்சமாக அப்ளை செய்யுங்கள்.

கண்களுக்கான மேக்அப் : கண்களின் மேல் ஐ பிரைமர் அப்ளை செய்யுங்கள். அப்படி இல்லை எனில் ஃபவுன்டேஷன் அல்லது கன்சீலர் அப்ளை செய்யலாம். இது ஐ மேக் அப் சீராக செட் ஆக உதவும்.

கருகரு கூந்தலுக்கு கொய்யா இலையில் உடனே பலன் கிடைக்குமா.? இன்னைக்கே டிரை பண்ணி பாருங்க..!

படி 2:  கிளிட்டர் ஷேட் கொண்ட ஐஷேடோவை கண்களில் அப்ளை செய்யுங்கள். அப்ளை செய்யும் முன் கொஞ்சம் கீழே டஸ்ட் செய்து விட்டு அப்ளை செய்யவும். இல்லையெனில் அவை முகத்தில், கண்களில் படும்.

படி 3 : தற்போது கண்களில் காஜல் இட்டுக்கொள்ளுங்கள். மேலே மஸ்காரா அப்ளை செய்யுங்கள். தேவைப்பட்டால் கண்களை இன்னும் அழகாக்க ஐ லாஷுகள் வைக்கலாம்.

உதட்டிற்கான மேக்அப் :  உதட்டில் முதலில் உதட்டை சுற்றிலும் லிப் லைனர் அப்ளை செய்யுங்கள்.

படி 2 : அடுத்ததாக பளீரென தெரியும் விதமாக சிவப்பு, ஊதா போன்ற பிரைட் நிறங்களாக தேர்வு செய்து லிப்ஸ்டிக் அப்ளை செய்யுங்கள். லிப்ஸ்டிக் தான் ஒட்டுமொத்த அழகையும் உயர்த்திக் காட்டும்.

இறுதியாக அப்ளை செய்த மேக் அப் களையாமல் அப்டியே நீண்ட நேரம் நிலைக்க மேக்அப் செட் ஸ்பிரே அப்ளை செய்யுங்கள்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Makeup, New Year, New Year 2022, New Year Celebration, Party