ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

”பிராய்லர் கோழியை தவிர்த்துட்டேன்” விஜே தீபிகாவின் முகப்பருக்கள் குறைஞ்சதுக்கு இதுதான் காரணமா..?

”பிராய்லர் கோழியை தவிர்த்துட்டேன்” விஜே தீபிகாவின் முகப்பருக்கள் குறைஞ்சதுக்கு இதுதான் காரணமா..?

விஜே தீபிகா

விஜே தீபிகா

இரவு தூக்கமும் அவசியம் என்கிறார். குறிப்பாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஆய்ஷா தூக்கம் சரியாக இல்லை என்றாலும் முகப்பருக்கள் அதிகமாகிவிடும் என கண்டிப்புடன் சொல்வார் என்று கூறியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் பிரபலமானவர் வி.ஜே தீபிகா. சீரியலில் நடிக்க தொடங்கிய சில நாட்களிலேயே அவர் சீரியலை விட்டு விலகுவதாக செய்திகள் வெளியாகின. என்ன காரணம் என்று கேட்ட போது முகப்பரு இருப்பதால் தன்னை சீரியலை விட்டு விலகச் சொல்லியதாக கூறிய செய்தி மிகவும் சர்ச்சையானது. முகப்பருவுக்கெல்லாம் வாய்ப்புகள் பறிக்கப்படுகிறதா என சலசலப்பும் ஏற்பட்டது. எனவேதான் அவரின் முகப்பரு இவ்வளவு பெரிய முக்கிய பொருளாக பேசப்படுகிறது.

  அந்த சர்ச்சைக்குப் பின் பல மீடியாக்களுக்கு பேட்டியளித்தார். அப்போது முகப்பருவுக்காக சிகிச்சை எடுத்துக்கொண்டு வருவதாகவும் கூறியிருந்தார். இப்போது அவரின் முகத்தில் இருந்த பருக்கள் மறைந்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அவரைப் போல் முகப்பருவால் பல வாய்ப்புகளை இழக்கும் பெண்கள், தன்னம்பிக்கை இழக்கும் பெண்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக இருக்கிறது. எனவே தனியார் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் முகப்பருக்கள் மறைய என்னவெல்லாம் செய்தார் என்று கூறியுள்ளார். அவற்றில் சில உங்களுக்காக...

  முகப்பரு அதிகமாக இருந்த போது பால், சர்க்கரை, கோதுமை என வெள்ளை நிற பொருட்கள் அனைத்தையும் தவிர்த்துள்ளார். அதோடு பிராய்லர் சிக்கனை முற்றிலுமாக தவிர்த்துள்ளார். வெள்ளை சாதம் கூட சாப்பிடுவது கிடையாதாம். பிரைவுன் ரைஸ்தான் பிரதான உணவாக உட்கொள்கிறார்.


  முகப்பருவை அகற்ற அவருக்கு பெரிதும் உதவியது எலுமிச்சை ஜூஸ் என்று குறிப்பிட்டுள்ளார். ஜூஸ் வகைகள் நிறைய எடுத்துக்கொண்டுள்ளார். ஆனால் எலுமிச்சை ஜூஸ்தான் அதிகம் எடுத்துக்கொண்டுள்ளார். முட்டையில் மஞ்சள் கருவை தவிர்த்துவிட்டு வெள்ளைக்கருவை மட்டும் உட்கொண்டுள்ளார்.

  Also Read : 10 நாட்களில் தொப்பையை கரைக்க உதவும் ஜப்பானிய டெக்னிக்..! எப்படி இது சாத்தியம்..?

  இதையெல்லாம் ஆரம்பத்தில் கடைப்பிடிக்க கடினமாக இருந்தாலும் 3-4 மாதத்திற்கு பின் பழகிவிட்டதாகவும் கூறியுள்ளார். குறிப்பாக அதன் பலன் முகத்தில் தெரியும்போது இன்னும் உற்சாகம் கிடைக்கும் என்கிறார்.

  அதேபோல் இரவு தூக்கமும் அவசியம் என்கிறார். குறிப்பாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஆய்ஷா தூக்கம் சரியாக இல்லை என்றாலும் முகப்பருக்கள் அதிகமாகிவிடும் என கண்டிப்புடன் சொல்வார் என்று கூறியுள்ளார்.


  சிகிச்சையின் ஆரம்பத்தில் மருத்துவர் பரிந்துரைத்த மாய்சரைஸரைத் தவிர எந்த கெமிக்கல் புராடெக்டுகளையும் அவர் பயன்படுத்தவில்லை. கொஞ்சம் குறைந்த பின்பே மருத்துவரின் பரிந்துரைப்படி புராடெக்டுகளை வாங்கி பயன்படுத்தி வருகிறாராம். இப்போது மேக்அப் கூட லைட்டாகவே போட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Acne, Pimple