• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • வயசானாலும் என் முடி கொட்டாமல் இருக்க காரணம் அரிசி தண்ணீர்.. ரகசியம் சொல்லும் லட்சுமி அம்மா!

வயசானாலும் என் முடி கொட்டாமல் இருக்க காரணம் அரிசி தண்ணீர்.. ரகசியம் சொல்லும் லட்சுமி அம்மா!

பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி

பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி

சர்க்கரை நோய் இருப்பதால் இயல்பாகவே அவருக்கு முடி கொட்டுமாம் காரணம் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ச் சீரியலில்  இறப்பது போல் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களை அழ வைத்த லட்சுமி அம்மாவின் முடி ரகசியம் பற்றி பார்க்கலாம்.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமி அம்மா மறைவு எபிசோடுகள் டி.ஆர்.பியை எகிற வைத்ததை சின்னத்திரை ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்து இருக்க மாட்டார்கள். இந்த காட்சிகள் இடம் பெற்ற எபிசோடுகளால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அந்த வார டி.ஆர்.பியில் முதலிடத்தை பிடித்தது. இறுதி காட்சியில் லட்சுமி அம்மா நடித்த காட்சிகள், அவர் நடிப்பு மீது கொண்ட மரியாதை என அவர் பற்றிய பல சுவாரசிய தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகின. நடிகர் விக்ராந்தின் அம்மாவான ஷீலா குறித்த தேடல்கள் சோஷியல் மீடியாவில் அதிகரித்தன. இந்நிலையில் லட்சுமி அம்மாவாக சீரியல் ரசிகர்களின் மனதில் பதிந்த ஷீலா, தனது முடியை எப்படி பராமரிக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது,

    ஷீலாவுக்கு நீளமான முடி. அவரின் வயதுக்கு இவ்வளவு நீளமான முடி இருப்பது உண்மையில் ஆச்சரியம். தான் அந்த முடியை அக்கறை எடுத்து பாதுக்காப்பாக பார்த்து கொள்கிறார். சர்க்கரை நோய் இருப்பதால் இயல்பாகவே அவருக்கு முடி கொட்டுமாம் காரணம் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது. ஆனாலும் இவற்றை எல்லாம் சமாளிக்க முடிக்கு சில விதமான டிப்ஸ்களை ஃபாலோ செய்கிறார். அது என்னவென்று இங்கே விரிவாக பார்க்கலாம்.

    முதலில் வெந்தயம். முதல் நாள் இரவு ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வாராம். அடுத்தது அரிசி கழுவிய தண்ணீர். அந்த தண்ணீரை ஒரு நாள் முழுவதும் தலையில் தேய்த்து மசாஜ் செய்து குளிப்பராம். பயங்கரமான ரிசல்ட் கொடுக்குமாம்.



    மூன்றாவது கறிவேப்பிலை, நெல்லிக்காய் ஜூஸ். இதை அரைத்து அந்த சாறை தண்ணீருடன் கலந்து எனர்ஜி டிரிங் போல் எடுத்து கொள்வாராம். இது அவரின் முடிக்கும் உதவுமாம் முகத்திற்கும் நல்ல ரிசலட் கொடுக்குமாம். இதை அவர் தொடர்ந்து பின்பற்றி வருகிறாராம். நீங்களும் ட்ரை பண்னி பாருங்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: