• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சீரியலில் காட்டுவது ரியல் முடி தான்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் முடி ரகசியம்!

சீரியலில் காட்டுவது ரியல் முடி தான்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் முடி ரகசியம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்

முக பராமரிப்பை காட்டிலும் கூந்தல் பராமரிப்பை கவனமாக பின்பற்றுவாராம்.

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் ரோலில் நடிக்கும் நடிகை சுஜிதா அழகான முடிக்கு சொந்தக்காரர் ஆவார். இவரின் முடி ரகசியம் என்ன தெரியுமா?

    ஆண், பெண் என இரு பாலருக்கும் இருக்கும் முக்கியமான பிரச்சனை முடி உதிர்வு. அதிலும் முடி உதிர்வு குறித்து கவலைப்படாத பெண்களே இல்லை எனலாம். எப்போதுமே பெண்களுக்கு முடி அழகாகவும், நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. கோரை முடி, சுருள்முடி, வறண்ட முடி, மென்மையான முடி, அலையலையான முடி என்ற ஒவ்வொருவரின் தலைமுடியும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும்.அதிலும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் வரும் நடிகைகளின் பளபளப்பான முடியை பார்த்து பொறாமைப்படும் பெண்கள் இங்கு ஏராளம்.

    அந்த வகையில் சின்னத்திரையில் சீரியல் நடிகைகளில் தனித்துவமான முடி அழகை பெற்றவர் நடிகை சுஜிதா. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் ரோலில் நடிக்கிறார். இந்த சீரியலில் அவருக்கு காட்டப்படும் முடி அவரின் நிஜ முடி தான். ஜவுரி முடி அவருக்கு தேவையே படாதாம். அவ்வளவு நீளமான அடர்த்தியான முடியை பெற்றிருக்கிறார் சுஜிதா. முக பராமரிப்பை காட்டிலும் கூந்தல் பராமரிப்பை கவனமாக பின்பற்றுவாராம்.

    இளைஞர்கள் , கர்ப்பிணிகள், தாய்மார்கள், ஆண்கள் என்று அனைவருக்குமே இந்த முடி கொட்டும் பிரச்சினை அதிகளவு காணப்படுகின்றது. இந்த பிரச்சனைக்கு இந்த காலத்தில் வயது வரம்பு கிடையாது. அதற்கான காரணத்தை பொதுவான சில டிப்ஸ்களை சுஜிதா ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார். குறிப்பாக அவர் தனது முடிக்கு பயன்படுத்தும் டிப்ஸ்களை குறிப்பிடுகிறார்.



    தலைக்கு வெங்காயச்சாறு அவசியமான ஒன்று. இந்த சாறை 10 நாட்களுக்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக தலையில் தடவி மசாஜ் செய்ய வேண்டுமாம். அதாவது முதலில் சின்ன வெங்காயத்தை மிக்சியில் நன்கு அரைத்து சாறை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்தது தேங்காயை அரைத்து அந்த பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது இரண்டையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ் செய்து தலையில் தடவில் 30 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டுமாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இப்படி செய்தால் முடி உதிர்வது நின்று தலைமுடி பளபளப்பாக இருக்குமாம். சுஜிதா தவறாமல் இதை வாரத்திற்கு 1 முறை செய்து விடுவாராம். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: