ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

செல்போனால் வரும் கரு வளையத்திற்கு இதை செய்தாலே போதுமாம்.. பாவம் கணேசன் சீரியல் நடிகையின் சீக்ரெட்!

செல்போனால் வரும் கரு வளையத்திற்கு இதை செய்தாலே போதுமாம்.. பாவம் கணேசன் சீரியல் நடிகையின் சீக்ரெட்!

பாவம் கணேசன் சீரியல் நடிகை

பாவம் கணேசன் சீரியல் நடிகை

டீன் ஏஜ் பெண்களுக்கு முகப்பருவுக்கு அடுத்தது இருக்கும் முக்கியமான பிரச்சனை கருவளையம்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சின்னத்திரையில் இளம் புயலாக கலக்கி வரும் விஜய் டிவி பாவம் கணேசன் சீரியல் நடிகை பிரனிகா டீன் ஏஜ் பெண்களுக்கு தரும் பியூட்டி டிப்ஸ்.

  இளைஞர்களின் ரீசண்ட் க்ரஷாக வலம் வருபவர் விஜய் டிவி புகழ் பிரனிகா. டிக் டாக், ஷார்ட் பிலிம், சீரியல் என படிப்படியாக மீடியாவில் நுழைந்து குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கி இருக்கிறார். எல்லா ரியாலிட்டி ஷோக்களிலும் இவரை பார்க்க முடிகிறது. இவரின் முழுப் பெயர் பிரனிகா தக்‌ஷூ. பாவம் கணேசன் சீரியல் மூலம் தனது கேரியரை சின்னத்திரையில் தொடங்கினார் பிரனிகா. திருச்சி பெண்ணான இவர் தற்போது சின்னத்திரையில் படு பிஸி.

  வித விதமான விளம்பர ஷூட்கள், பிரைடல் ஷூட் என கலர்ஃபுல் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். இவரின் இன்ஸ்டாகிராமில் ஃபாலோவர்ஸ் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இவர் தன்னுடைய பியூட்டி ஹாக் மற்றும் சீக்ரெட்ஸ் பற்றி ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

  இன்றைய டீன் ஏஜ் பெண்களுக்கு முகப்பருவுக்கு அடுத்தது இருக்கும் முக்கியமான பிரச்சனை கருவளையம். இது ஏற்பட பல காரணங்கள் கூறப்படுகிறது. அதிக நேரம் மொபைல் யூஸ் செய்வதும், இரவில் அதிக தூங்காமல் இருப்பது வேலை செய்பவர்கள் சிஸ்ட்ம் பார்பது என பல காரணங்கள் இருக்கிறது. ஒருவேளை நீங்களும் கருவளையத்தால் கவலை கொண்டிருந்தால் அவர்களும் இதை தாரளமாக ட்ரை செய்து பார்க்கலாம். நடிகை பிரனிகா கருவளையத்தில் என்ன மாதிரியான ரெமிடிகளை கையாள்வார் என்பதை அவரே ஷேர் செய்துள்ளார்.

  ' isDesktop="true" id="630403" youtubeid="CCVeUHcM9hA" category="beauty">

  உருளைக் கிழங்கு சாறு மற்றும் அதனுடன் கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து அதை கருவளையத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால் போதும் கருவளையம் சரி ஆகிவிடுமாம். அதே போல் பாலுடம் மஞ்சள் தூளை சேர்த்து நன்கு குழைத்து அதை தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால் போது கருவளையம் சரி ஆகிவிடுமாம். இதை கண்டிபாக தொடர்ந்து 1 மாதத்திற்கு செய்தால் கருவளையத்தில் இருந்து விடுதலை பெறலாம் என்கிறார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Beauty Tips