Home /News /lifestyle /

முடி கொட்டாமல் இருக்க கல் உப்பு போதுமாம்.. பாவம் கணேசன் சித்ராவின் டிப்ஸ்!

முடி கொட்டாமல் இருக்க கல் உப்பு போதுமாம்.. பாவம் கணேசன் சித்ராவின் டிப்ஸ்!

பாவம் கணேசன் சித்ரா

பாவம் கணேசன் சித்ரா

கல் உப்பை சேர்த்தால் உடலுக்கு மட்டும் நல்லது இல்லையாம் முடிக்கும் நல்லதாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    சின்னத்திரை நடிகைகளில் அடர்த்தியான கருமையான முடியை பெற்றிருக்கும் நடிகை ஹாசினியின் முடி பராமரிப்பு டிப்ஸ் குறித்து தான் பார்க்க போகிறோம்.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாவம் கணேசன் சீரியலில் கணேசனின் மூத்த அக்கா சித்ராவாக நடிப்பவர் நடிகை ஹாசினி . இவர் இசைஞானி இளையராஜவின் உறவுக்கார பெண் ஆவார். இளையராஜா இவருக்கு மாமா முறை.இது தவிர ஹாசினி ரேடியோ ஸ்டேஷனில் ரேடியோ ஜாக்கியாவும் இருந்து இருக்கிறார். சினிமாவில் ஸ்ரீவித்யாவுக்கு பிண்ணனியும் பேசியுள்ளார். சினிமாவில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தனக்கென தனி அடையாளத்தை தேடி கொண்டவ்ர் தற்போது விளம்பரங்கள், சீரியலில் பிஸியாக்வுள்ளார். இவருக்கு இயற்கையிலேயே கருமையான நீளமான முடி. அதை சற்று மெனகெடுத்து பராமரித்து வருகிறார்.

    இவர் கூந்தலுக்கு எடுத்துக் கொள்ளும் டிப்ஸ்களை பற்றி பார்க்கலாம். கறிவேப்பிலை, சீரகம், கல் உப்பு இதை மிக்ஸியில் நன்கு பொடி போல் அரைத்து கொண்டு தேவைப்படும் போது மோரில், வெறும் சாதத்தில் சேர்த்து சாப்பிடுவாராம். இது முடி வளர்ச்சியை நன்கு தூண்டுவதுடன் முடி கொட்டாமல் இருக்கவும் உதவும். கல் உப்பு முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது என்கிறார் சித்ரா. சால்ட் சேர்ப்பதை விட குழம்பில், பொடியில் கல் உப்பை சேர்ந்தால் உடலுக்கு மட்டும் நல்லது இல்லையாம் முடிக்கும் நல்லதாம்.

    எந்தெந்த காரணத்திற்காக முடி அதிகளவில் கொட்டும் என்பதை சித்ரா பகிர்ந்துள்ளார். பெண்கள் கொண்டை போடுவது நடைமுறையான ஒரு விஷயம். அப்படி கொண்டை போட்டால் அதிகளவில் முடி கொட்டுமாம். முடி வளரவே வளராதாம். டீனேஜ் பெண்கள் பெரும்பாலும் கொண்டை போடும் பழக்கத்தை விட சொல்கிறார்.



    அதுமட்டுமில்லை ஹேர் கலரிங் செய்வதும் முடி கொட்டுவதற்கு வழி வகுக்குமாம். ஹேர்ஸ்ப்ரே பயன்படுத்தினால் பொடுகு வருமாம். அதனால் எப்போதுமே ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்தினால் கட்டாயம் தலைக்கு குளிக்க வேண்டுமாம்.எனவே முடி வளர வேண்டும் என நினைப்பவர்கள், முடி கொட்டாமல் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் இதை ஃபாலோ செய்தாலே போதுமாம் முடி பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடுமாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Hair growth

    அடுத்த செய்தி