ஆரஞ்சு பழம் வைட்டமின் சி நிறைந்தது. உடலுக்கு நன்மை சேர்க்கும் பழம், இதன் தோல், சரும அழகை பராமரிக்க உதவுகிறது. அதன் தோலில் கெட்ட கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டு. முகத்திற்கு ப்ளீச்சிங் போன்று செயல்பட்டு முகக் கருமையையும் நீக்க உதவும்.
ஆரஞ்சு பீல் பவுடன் தயாரிக்கும் முறை:
ஆரஞ்சு பழம் வாங்கினால் பழத்தை சாப்பிட்டுவிட்டு தோலை அடுத்த முறை தூக்கி வீசாமல் சூரிய ஒளியில் நன்றாக காயவைத்து, அதை மிக்ஸியில் மைய அரைத்து பவுடர் போல் டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். அதை ஃபேஸ்பேக்கிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். எவ்வாறு என்பதைக் கீழேக் காணலாம்.
முகக் கருமை நீங்க பேஸ்பேக்குகள்:
ஆரஞ்சு தோல் மற்றும் ஓட்ஸ்
தேவையான பொருட்கள் :
ஆரஞ்சு தோல் பவுடர் ( orange peel powder ) - 1 Tsp
ஓட்ஸ் - 1 Tsp
தக்காளி அல்லது வெள்ளரி சாறு - 2 Tsp
செய்முறை : மூன்றையும் பேஸ்ட் போல் கலந்து கொள்ளுங்கள். முகத்தை கழுவிய பின் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
ஆரஞ்சுத் தோல் மற்றும் தயிர்:
தேவையான பொருட்கள்:
ஆரஞ்சு பீல் பவுடர் - 1 Tsp
தயிர் - 2 Tsp
செய்முறை : இரண்டையும் நன்கு பேஸ்ட் போல், முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள். முகக் கருமை நீங்கி, முகம் பொலிவு பெறும்.
உங்க ஸ்கின் க்ளோவான தோற்றத்தை பெற வேண்டுமா..? இந்த 5 வகை ஃபேஸ் பேக்கை டிரை பண்ணுங்க..!
ஆரஞ்சுத் தோல், மஞ்சள் மற்றும் பாதாம் எண்ணெய்:
தேவையான பொருட்கள்:
ஆரஞ்சுப் பீல் பவுடர் - 1 Tsp
மஞ்சள் பொடி - 1 Tsp
பாதாம் எண்ணெய் - 1 Tsp
ரோஸ் வாட்டர் - 2 - 3 சொட்டுகள்
செய்முறை : குறிப்பிட மூலப்பொருட்களைப் பக்குவமாக பேஸ்ட் போல் கலக்கி முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்துக் கழுவிவிடுங்கள். முகம் பளபளப்பாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Beauty Tips, Face pack, Orange peel