உங்கள் சருமத்தை பராமரிப்பதற்கு நீங்கள் இயற்கையான பாதையை தேர்வு செய்துள்ளீர்கள் என்றால், உங்கள் சரும பராமரிப்பு வழக்கத்தில் ஆரஞ்சு பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக உள்ளது. இது தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுவதற்கும், வயதான அறிகுறிகளைக் குறைப்பதற்கும் உதவியாக உள்ளது.
குறிப்பாக ஆரஞ்சை ஃபேஸ் பேக் ஆக உபயோகிக்கும் போது, அது இன்னும் நல்ல பலன்களை கொடுக்கும். ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு கொண்ட ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கொண்டு சரும பொலிவுக்கு உதவும் பேஸ்பேக் ஒன்றினை வீட்டிலேயே எளிமையான முறையில் எப்படி செய்வது எப்படி என இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள் :
ஆரஞ்சு பழம் - 1.
கஸ்தூரி மஞ்சள் - அரை ஸ்பூன்.
ரோஸ் வாட்டர் - தேவையான அளவு.
பேஸ்பேக் செய்ய கிண்ணம் - ஒன்று.
செய்முறை :
> பேஸ் பேக் செய்வதற்கு முன்னதாக, முதலில் ஒரு முழு ஆரஞ்சு பழத்தின் தோலை உரித்து, நன்கு உலர வைக்கவும். சூரிய ஒளியில் வைக்காமல், நிழலில் வைத்து உலர்த்தவும்.
> பின்னர், ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைஸ் பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
> அரைத்த ஆரஞ்சு தோல் பொடியை ஒரு கோப்பையில் எடுத்துக்கொள்ளவும்.
> பின்னர், இதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் மற்றும் தேவையான அளவு ரோஸ் வாட்டர் சேர்த்து குழைத்துக்கொள்ளவும். இப்போது, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் பேஸ்பேக் ரெடி.
எப்படி பாயன்படுத்துவது?
முறையாக தயார் செய்த இந்த பேஸ்பேக்கினை ஒரு சுத்தமான பிரெஷ் கொண்டு, முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவவும்.
Also Read | பிறப்புறுப்பு முடியை முழுவதுமாக நீக்குவது நல்லதா?
தடவிய பின்னர் 15 முதல் 20 நிமிடங்களுக்கு நன்றாக உலர விடவும். பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு சுத்தம் செய்யவும்.. வாரம் 2 முறை இவ்வாறு செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும்.
பயன்கள்:
சருமத்தில் அதிகப்படியாக காணப்படும் எண்ணெய் பசையினை குறைக்க ஆரஞ்சு தோல் பொடி உதவுகிறது. அந்த வகையில், ஆரஞ்சு தோல் பொடி கொண்டு தயாரிக்கப்படும் பேஸ்பேக் அதிகப்படியான எண்ணெய் பசையினை குறைக்கிறது.
பேஸ்பேக்கில் நாம் பயன்படுத்தும் ரோஸ் வாட்டர் சருமத்தின் pH அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும், சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைத்து, மிருதுவான மற்றும் மென்மையான சருமம் பெறவும் உதவுகிறது.
ஆன்டி-பாக்டீரியல் பண்பு கொண்ட மஞ்சள், சரும துளைகளில் உள்ள மாசுகளை ஆழ்ந்து சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. இந்த வகையில் இந்த பேஸ்பேக், முகத்தில் காணப்படும் பருக்களை குறைக்கிறது.
மஞ்சள், ஆரஞ்சு தோல் பொடி கலவையில் தயாரிக்கப்படும் இந்த பேஸ்பேக், சருமத்தின் இறந்த செல்களை அகற்றி, புதிய திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. அந்த வகையில் இந்த பேஸ்பேக், பொலிவான மற்றும் பளபளப்பான சருமம் பெற உதவுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Beauty Tips, Face mask, Orange, Skin Care