முகப்பருவை போக்க வெங்காயத்தோல் போதும்.. தெரியுமா ?

காட்சி படம்

முகத்தில் இருக்கும் முகப்பருக்களை நீக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..

 • Share this:
  அழகு என்று வரும்போது, சருமத்தை கவனித்துக்கொள்வது மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது. உங்கள் தோல் ஆரோக்கியமாகவும், குறைபாடற்றதாகவும் தோன்றும் போது, உங்கள் முகத்திற்கு செய்யும் ஒப்பனையும், உடுத்தும் ஆடைகளும் புதுப்பாணியாகத் தோன்றும். இதற்காக பெண்கள் பல்வேறு ஒப்பனை பொருட்கள், பியூட்டி பார்லர் என காசை வாரி இறைப்பார்கள். ஏனெனில், ஒப்பனை அலங்காரங்கள் மற்றும் கடைகளில் கிடைக்கும் தோல் பராமரிப்பு பொருட்கள் ஒன்றும் மலிவானவை அல்ல. இதனால் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு தொகை ஒப்பனை பொருட்களுக்காக செலவாகிறது.

  ஆனால் அவற்றை தவிர்த்து வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே சருமத்தை பொலிவாக வைத்துக்கொள்ள முடியும். அதிலும், நம் வீட்டு கிச்சனில் வழக்கமாக அப்புறப்படுத்தும் பொருட்களை டஸ்ட்பின்னில் போடாமல் அவற்றை முகத்திற்கு பயன்படுத்தலாம். வீட்டு சமயலறையில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருள் என்றால் அது வெங்காயம். பொதுவாக வெங்காயத் தோலை நாம் குப்பைத்தொட்டியில் போட்டுவிடுவோம். ஆனால் அதனை அப்புறப்படுத்துவதற்கு பதிலாக கீழ்காணும் சில வழிகளை பின்பற்றி உங்கள் சருமத்தில் பயன்படுத்துங்கள். முகப்பருக்கள் மற்றும் வடுக்கள் எளிதில் மறைந்து விடும்.

  ஆனியன் பீல் ஃபேஸ் மாஸ்க் : இது எளிதில் செய்யக்கூடிய ஃபேஸ் மாஸ்க் ஆகும். ஒரு கப் அளவு வெங்காய தோலை எடுத்துக்கொண்டு பிளெண்டரில் அதை போட்டு நன்கு அரைக்க வேண்டும். பவுடர் பதத்திற்கு அரைத்துக்கொள்ளுங்கள். பின்பு அதில், 1 தேக்கரண்டி தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து, ஒரு தடிமனான பேஸ்ட் பதத்திற்கு நன்றாக கலக்குங்கள். பேஸ்ட் தயாரானதும், அதனை உங்கள் கண்களைத் தவிர்த்து முகத்தில் பிறபகுதிகளில் சமமாகப் தடவவும். சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் ஃபேஸ் பேக்கை உலர விட்டு பின்பு குளிர்ந்த நீரில் கழுவவும். இதனை வாரத்தில் ஒருமுறை செய்து வர முகப்பருக்கள் கட்டாயம் நீங்கும்.

  வெங்காயத் தோல் மற்றும் பேரிக்காய் ஃபேஸ் பேக் : சிறிதளவு வெங்காய தோல்களை சூடான நீரில் வேகவைத்துக் கொள்ளுங்கள். அதேபோல பேரிக்காயை அரைத்து பேஸ்டாக்கிக்கொள்ளவும். ஒரு நடுத்தர அளவிலான கிண்ணத்தை எடுத்து, அதில் பேரிக்காய் பேஸ்ட் சிறிதளவு சேர்க்கவும். அதனுடன் 3 தேக்கரண்டி பால், மற்றும் 3 தேக்கரண்டி வேகவைத்த வெங்காய தோல் தண்ணீரை சேர்த்துக்கொள்ளுங்கள். அனைத்தையும் ஒன்றாக கலந்து, உங்கள் முகத்தில் தடவவும். இதனை 5 நிமிடங்கள் உலர வைத்துவிட்டு பின்பு தண்ணீரில் முகத்தை கழுவுங்கள். பேரிக்காய்யின் நன்மை மற்றும் வெங்காயத் தோல்களின் ஊட்டச்சத்துக்கள் எந்த நேரத்திலும் முகப்பருக்களின் அடையாளங்களை கட்டாயம் அகற்றும்.

  வெங்காய தோல் ஸ்க்ரப் : வேறு எந்த தோல் பராமரிப்பு வழக்கத்திற்கும் செல்வதற்கு முன், நீங்கள் உங்கள் சருமத்தில் படிந்திருக்கும் அழுக்கை வெளியேற்றுவது அவசியம். இருப்பினும், முடிந்தவரை உங்கள் சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் சருமத்தில் உள்ள அழுக்கு துளைகளை அழிக்க இந்த எளிய மற்றும் எந்தவித அழற்சியும் இல்லாத வெங்காயத் தோல் ஸ்க்ரப்பை பயன்படுத்துங்கள். சரி இந்த ஸ்க்ரப்பை எப்படி செய்யலாம். 2 தேக்கரண்டி ஓட்மீலை தண்ணீரில் வேகவைத்துக்கொள்ளுங்கள்.

  Also Read : பொலிவான முகத்திற்கு வீட்டிலேயே இப்படி சீரம் செய்து பயன்படுத்துங்கள்..

  அதேபோல வெங்காயத் தோல்களை ஒரு தனி பாத்திரத்தில் வேகவைத்து அதன் சாற்றை பிரித்தெடுத்துக்கொள்ளுங்கள். அவை குளிர்ச்சியான பிறகு, ஒரு கிண்ணத்தை எடுத்து ஓட்ஸ் மற்றும் 2-3 தேக்கரண்டி வெங்காய சாறு சேர்க்கவும். மேலும், அதனுடன் தேன் சேர்த்து நனவு கலக்கிய பிறகு அதனை தோலில் தடவவும். முகத்தில் அதனை தடவும் போது கிளாக் சுற்றுவது போல முகத்தில் வட்ட இயக்கத்தில் ஸ்க்ரப் செய்யவேண்டும். சிறிது நேரம் உலர விட்டு பின்னர் முகத்தை கழுவிக்கொள்ளுங்கள். இதன் பின்னர் நீங்கள் அலோவேரா ஜெல் போன்ற ஏதேனும் moisturizer-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.

  வெங்காய தோல் மற்றும் முட்டை ஃபேஸ் மாஸ்க் : உங்கள் சருமத்தில் முகப்பருக்கள் காரணமாக ஏதேனும் டார்க்ஸ்பாட் ஏற்பட்டிருந்தால், வெங்காயத் தோல் மற்றும் முட்டை ஃபேஸ் மாஸ்க் அவற்றைப் போக்க உதவும். இது மிகவும் பயனுள்ள வீட்டு மருந்தாக மாறும். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், ஒரு பிளெண்டரில், ஒரு முட்டையை உடைத்து ஊற்றி கால் கப் வெங்காயத் தோல்களை சேர்க்கவும். அதனுடன் 2 அல்லது 3 துண்டுகள் கேரட் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். பேஸ்ட் தயாரானதும். முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் உலர வைக்கவும். பின்பு முகத்தை கழுவிவிட்டு ஏதேனும் moisturizer-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.

  வெங்காய தோல் மற்றும் வெள்ளரி ஃபேஸ் பேக் : இது உங்கள் சருமத்திற்கு ஊட்டச்சத்து மற்றும் நீரேற்றத்தை வழங்குவதற்கான ஹைட்ரேட்டிங் ஃபேஸ் மாஸ்க் ஆகும். அதே நேரத்தில் இது பிடிவாதமான முகப்பரு அடையாளங்களையும் நீக்குகிறது. வெங்காய தோல்களை தண்ணீரில் 5 அல்லது 7 நிமிடங்கள் வேகவைக்கவும். இதற்கிடையில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் 1 முட்டையின் மஞ்சள் கருவை சேர்க்கவும். மேலும், 2 தேக்கரண்டி வெங்காயத் தோல் சாறு, மற்றும் 1 டேபிள்ஸ்பூன் வெள்ளரி சாறு சேர்க்கவும். அந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி 10 நிமிடங்கள் விடவும். அதை தண்ணீரில் கழுவவும். மிகவும் தெளிவான சருமத்தை நீங்கள் பெறலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: