ஓணம் பண்டிகைக்கு என்ன மாதிரியான மேக்அப் மற்றும் ஹேர் ஸ்டைல் டிரை பண்ண போறீங்க..? முழுமையான ஸ்டைலிங் டிப்ஸ்

ஓணம் பண்டிகை

ஓணம் என்றாலே கசவு புடவைதான் பிரபலம். பெண்கள் அந்த புடவை அணிந்து கொண்டு ஒய்யார நடை போடும் அழகு பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும். தமிழ் பெண்களும் ஓணம் அன்று கசவு புடவை கட்டி அழகு பார்க்கின்றனர்.

  • Share this:
ஓணம் பண்டிகை கேரளாவின் மிகப்பெரும் கொண்டாட்டமாக நடைபெறும் 10 நாள் திருவிழாவாகும். இது ஆவணி மாதம் மகாபலி சக்கரவர்தியின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஓணம் பண்டிகையானது உலகம் முழுவதும் இருக்கும் கேரள மக்கள் கொண்டாடுவது மட்டுமன்றி மற்ற மாநில மக்களும் வெகு விமர்சையாகக் கொண்டாடுகின்றனர்.

ஓணம் என்றாலே கசவு புடவைதான் பிரபலம். பெண்கள் அந்த புடவை அணிந்து கொண்டு ஒய்யார நடை போடும் அழகு பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும். தமிழ் பெண்களும் ஓணம் அன்று கசவு புடவை கட்டி அழகு பார்க்கின்றனர். அலுவலகங்களிலும் ஓணம் விமர்சையாகக் கொண்டாடப்படுவதால் அன்று அனைவருக்கும் இந்த கசவு புடவைதான் யூனிஃபார்ம். அப்படி நீங்களும் வீட்டில், அலுவலகத்தில் ஓணம் கொண்டாட்டத்திற்கு தயாராகிறீர்கள் எனில் உங்களுக்கான முழுமையான ஸ்டைலிங் டிப்ஸ் இதோ....

முதலில் புடவை கட்டிக்கொண்டு மேக்அப் செய்யத்துவங்குங்கள். முதலில் முகத்தை எண்ணெய் பிசுக்கு இல்லாமல் சுத்தமாக கழுவி துடைத்து காய வையுங்கள்.

பின் முகத்தில் மாய்ஸ்சரைசர் அல்லது சன் ஸ்கிரீன் அப்ளை செய்து கொள்ளுங்கள்.

அடுத்ததாக முகத்தில் இருக்கும் கருமை திட்டுக்களை மறைக்க கன்சீலர் அப்ளை செய்யுங்கள். அடுத்ததாக முக ஷேடிற்கு ஏற்ப ஃபவுண்டேஷன் அப்ளை செய்யுங்கள்.

விஷேசத்துக்கு போறீங்களா ? அப்ப ஆல்யா மானசாவின் இந்த லுக் ட்ரை பண்ணுங்க..

உங்களுக்கு ஹெவி மேக் அப் பிடிக்காது எனில் சன் ஸ்கிரீன் அப்ளை செய்ததும் பொருத்தமான காம்ப் பேக் பவுடர் மட்டும் அப்ளை செய்து சிவப்பு அல்லது உங்களுக்கு பிடித்த நிற லிப்ஸ்டிக்கை அப்ளை செய்யுங்கள்.

அடுத்ததாக ஐப்ரோ பென்சிலால் புருவங்களை அடர்த்தி செய்யுங்கள்.

பின் உதட்டிற்கு கொடுத்த அதே லிப்ஸ்டிக் நிறத்தை கண்களிலும் அப்ளை செய்யுங்கள். பின் ஐலைனர் , காஜல் மஸ்காரா அப்ளை செய்யுங்கள். இறுதியாக பொட்டு வைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் மேக்அப் முடிந்துவிட்டது.இப்போது ஹேர் ஸ்டைல் செய்யுங்கள்...

உங்களுக்கு ஃபிரீ ஹெர் பிடிக்கும் எனில் வகிடு எடுத்து இருபுறமும் கொஞ்சம் முடி எடுத்து சுருட்டி ஹேர் பின் குத்துங்கள்.

பின் முடியை சீவி ஃபிரீயாக விடுங்கள். அதில் மல்லிகைப்பூ வைக்க இன்னும் கூடுதல் அழகாக இருக்கும். கொண்டை பிடிக்கும் எனில் கொண்டை போட்டு மல்லிகைப்பூவை சுற்றி வையுங்கள்.

அணிகலன்கள் : கசவு புடவைக்கு ஜிமிக்கி கம்மல் பொருத்தமாக இருக்கும். வலையல், ரிஸ்ட் கோல்ட் கோட்டிங் வாட்ச் பொருத்தமாக இருக்கும். ஃபிரீ ஹேர் விடுகிறீர்கள் எனில் பெண்டண்ட் கொண்ட லாங் செயின் பொருத்தமாக இருக்கும். கொண்டை அல்லது பின்னல் போட்டால் கழுத்தை ஒட்டிய நெக்லெஸ் பக்காவாக இருக்கும். அவ்வளவுதான் நீங்கள் ஓணம் கொண்டாட தயார். இந்த லுக்கில் செல்லுங்கள். அனைவரின் கண்களும் உங்கள் மீதுதான் இருக்கும்.

 

 

 
Published by:Sivaranjani E
First published: