ஒவ்வொருவரின் சரும வகையும் மாறுபட்டது, அதில் எண்ணெய் பசை கொண்ட ஆயில் ஸ்கினை பராமரிப்பது மிகவும் கடினமானது. கடைகளில் கிடைக்கும் விலையுர்ந்த சரும பராமரிப்பு சாதனங்கள் மற்றும் மேக்கப் பொருட்களை பயன்படுத்தினாலும் எண்ணெய் பசை சருமத்திற்கு சிறிது நேரம் மட்டுமே அது சூட் ஆகும்.
குளிர்காலம், கோடை காலம் என எந்த பருவமாக இருந்தாலும் எண்ணெய் பசை கொண்டவர்களுக்கு சருமத்தில் இருந்து செபம் எனப்படும் எண்ணெய் உற்பத்தி ஆகும் அளவு குறையாது. இதனால் ஆயில் ஸ்கின் வகையைச் சேர்ந்தவர்களின் முகம் எப்போதும் சோர்வாகவும், பொலிவிழந்தும் காணப்படும்.
எனவே முகத்தில் உருவாகும் கூடுதல் எண்ணெய் பசையை குறைப்பதற்காக க்ரீம்கள், ஃபேஸ் பேக்குகள், பேஷியல் போன்ற பல விஷயங்களை முயற்சி செய்வார்கள். ஆனால் அவற்றில் உள்ள கெமிக்கல் பொருட்கள் உங்கள் சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி முகப்பரு, சருமம் சிவந்து போதல், வெடிப்பு, கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளைக் கொடுக்கலாம். எனவே சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்க வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களே போதுமானது அவை என்னென்ன, எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
எண்ணெய் பசையை எதிர்த்து போராடக்கூடிய 3 ஃபேஸ்பேக்குகள்:
கடலை மாவு + மஞ்சள் ஃபேஸ் பேக்:
நமது முன்னோர்கள் காலத்தில் இருந்தே கடலை மாவும், மஞ்சளும் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடிய ஆயுர்வேத பொருட்களாக விளங்குகின்றன. கடலை மாவு மற்றும் மஞ்சள் கொண்ட ஃபேஸ்பேக்கை ஒருநாள் விட்டு ஒருநாள் முகத்தில் தடவி வந்தால் சருமத்தில் உருவாகும் கூடுதல் எண்ணெய் பசையை அகற்றுவதோடு, மென்மையான சருமத்தை பெறவும் உதவும்.
வயதான தோற்றத்தை மறைக்க இந்த கிரீம் போதும்!
ஒரு கப் கடலை மாவுடன், ஒரு சிட்டிகை மஞ்சள், சிறிதளவு பால் கலந்து மென்மையான பேஸ்ட்டாக தயார் செய்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி, சுமார் 20 நிமிடங்கள் வரை காய விடவும். அதன் பின்னர் மென்மையான காட்டன் துணியை நீரில் நனைத்து முகம் மற்றும் கழுத்தில் உள்ள பேக்கை மெதுவாக துடைத்து எடுக்க வேண்டும். சருமத்தை மாய்ஸ்சரைஸ் செய்ய கற்றாழை ஜெல்லை தடவிக்கொள்ளலாம்.
கேரட்+ தேன் ஃபேஸ்பேக்:
மென்மையாக அரைத்து எடுத்துக்கொள்ளப்பட்ட கேரட் கலவையில் 2:1 என்ற விகிதத்தில் தேனைக் கலக்க வேண்டும். அதாவது இரண்டு கரண்டி கேரட் பியூரியுடன் ஒரு கரண்டி தேனைக் கலந்து நன்றாக கலக்கி கொள்ளவும். இதனை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 15 நிமிடங்கள் காய விடவும். பின்னர் தண்ணீரைக் கொண்டு முகத்தை கழுவிக் கொள்ளலாம். இந்த ஃபேஸ்பேக்கானது இறந்த செல்களை நீக்கி சருமத்திற்கு புத்துயிர் கொடுப்பதோடு, ஈரப்பதமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
நயன்தாரா எவ்வளவு வயதானாலும் இளமை மாறாமல் அழகா இருக்க இதுதான் விஷயமா..? உங்களுக்காக அந்த இரகசியம்...
தேன் + ஓட்ஸ் ஃபேஸ்பேக்:
நன்றாக அரைக்கப்பட்ட ஒரு கப் ஓட்ஸ் பவுடர் உடன், இரண்டு டேபிள் ஸ்பூன் தேன், சிறிதளவு அரைத்த பாதாம் பவுடர், 1 டேபிள் ஸ்பூன் தயிர் ஆகியவற்றை கலந்து மென்மையான பேஸ்ட்டை தயார் செய்து கொள்ளவும். இதனை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 15 நிமிடங்கள் காய விடவும். பின்னர் தண்ணீரைக் கொண்டு முகத்தை கழுவிக் கொள்ளலாம். இந்த ஃபேஸ்பேக் சரும துளைகளில் உள்ள அழுக்கை நீக்குவதோடு, ஈரப்பதமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இந்த கலவையில் சேர்க்கப்படும் தயிர், முகத்தில் உள்ள புள்ளிகள் மற்றும் தழும்புகளை குறைக்க உதவும். தேனில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்பும், பாதாமில் உள்ள வைட்டமின் ஈ சத்தும் சருமத்தை மென்மையாக உதவுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Beauty Tips, Face pack, Oily Skin