ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

NewYear resolution 2022 : இந்த ஆண்டு உங்கள் சருமத்தை பராமரிக்க நீங்கள் எடுக்க வேண்டிய உறுதிமொழிகள்

NewYear resolution 2022 : இந்த ஆண்டு உங்கள் சருமத்தை பராமரிக்க நீங்கள் எடுக்க வேண்டிய உறுதிமொழிகள்

வெயில் காலம் வந்துவிட்டாலேஎ நம் சருமத்தை கொஞ்சம் கூடுதலாகவே பராமரிக்க வேண்டும். ஏனெனில் வெயிலின் தாக்கம் எளிதில் முகப் பொலிவை நீக்கிவிடும். எனவே நீங்கள் வெயில் காலத்திலும் நாள் முழுவதும் ஃபிரெஷாக இருக்க இந்த சருமப் பராமரிப்பு பொருட்களை கட்டாயம் பயன்படுத்துவது அவசியம். அவை என்னென்ன பார்க்கலாம்.

வெயில் காலம் வந்துவிட்டாலேஎ நம் சருமத்தை கொஞ்சம் கூடுதலாகவே பராமரிக்க வேண்டும். ஏனெனில் வெயிலின் தாக்கம் எளிதில் முகப் பொலிவை நீக்கிவிடும். எனவே நீங்கள் வெயில் காலத்திலும் நாள் முழுவதும் ஃபிரெஷாக இருக்க இந்த சருமப் பராமரிப்பு பொருட்களை கட்டாயம் பயன்படுத்துவது அவசியம். அவை என்னென்ன பார்க்கலாம்.

ஆரோக்கியமான சருமத்திற்கு முதல் படி நீங்கள் எடுத்து கொள்ளும் உணவுகள் சீராக அதே சமயம் சத்தானதாக இருக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

2022-ஆம் ஆண்டை வரவேற்க இன்னும் 2 வாரங்களே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டின் போது பலர் முக்கிய உறுதிமொழிகள் மற்றும் தீர்மானங்களை கேட்பது வழக்கம். அந்த வகையில் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக பேணுவதற்காக வரும் புத்தாண்டில் நீங்கள் உறுதி எடுக்கலாம். நல்ல பளபளப்பான மற்றும் ஆரோக்கிய சருமத்தை பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானம் செய்யுங்கள்.

நீங்கள் விரும்பிய சரும நிலையை அடைய பின்வரும் குறிப்புகள் பெரிதும் உதவும். இவற்றின் முக்கிய கருத்தை எழுதி வைத்து கொண்டு அவற்றை உங்கள் கண்ணில் படும் இடத்தில் ஒட்டி வைக்கவும். ஏனென்றால் மாதங்கள் செல்ல செல்ல உறுதிப்பாடு குறையலாம். எழுதி வைத்துள்ளதை பார்க்கும் போது கட்டாயம் இவற்றை செய்தக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் ஆழமாக பதியும்.

* ஆரோக்கியமான சருமத்திற்கு முதல் படி நீங்கள் எடுத்து கொள்ளும் உணவுகள் சீராக அதே சமயம் சத்தானதாக இருக்க வேண்டும். சுவைக்காக சாப்பிடும் அதே நேரத்தில் வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்கள் அடங்கிய உணவுகளை தவறாமல் உங்கள் டயட்டில் இடம்பெற செய்யுங்கள். வயது மற்றும் பாலினத்திற்கு ஏற்ப வைட்டமின்களின் தேவை மாறுபடும். 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் காப்ஸ்யூல் வடிவில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் தயாரிப்புகளை பயன்படுத்தலாம்.

* குறைந்தபட்சம் 20 SPF அளவு உள்ள சன்ஸ்கிரீன்களை தினமும் உங்கள் சருமத்தில் பயன்படுத்த வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு 20 நிமிடங்களுக்கு முன் சன்ஸ்கிரீனை ஸ்கின்னில் பயன்படுத்த வேண்டும். பெண்கள் சன்ஸ்கிரீன் செய்த பிறகு மேக்கப் போட்டு கொள்ளலாம்.

* ஒரு பொதுவான தோல் பராமரிப்பு முறையாக Cleansing இருக்கும் நேரத்தில், உங்கள் தோல் வகைக்கு ஏற்ற நல்ல ஸ்கின் கேர் மிகவும் அவசியம். உங்கள் சரும வகைக்கு ஏற்ற ஃபேஸ் வாஷ் பயன்படுத்த வேண்டும். அதே போல் மாய்ஸ்சரைசர் உங்கள் சருமத்தில் இரவில் கடைசியாக பயன்படுத்தப்பட வேண்டும். மாய்ஸ்சரைசரில் வளமான ஊட்டமளிக்கும் பொருட்கள் அடங்கி இருக்கிறதா என்று சரிபார்த்து பயன்படுத்துவது நல்லது.

* டிடாக்ஸிஃபிகேஷன் என்பது உடலில் இருந்து நச்சுகள் மற்றும் பிற கழிவுகளை நீக்குகிறது. கொத்தமல்லி இலைகள், புதினா மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றில் இவை ஒவ்வொன்றையும்ம் 1/3 என்ற வீதத்தில் கலந்து பேஸ்ட் தயாரித்து அதிகாலையில் எடுத்து கொள்வது ஒரு நல்ல டிடாக்ஸ் ஃபார்முலாவாக இருக்கும்.

குளிர்காலங்களில் பொடுகு தொல்லையில் இருந்து உங்கள் தலைமுடியை பாதுகாப்பது எப்படி?

* அனைத்து வயதினரும் வருடத்தில் இருமுறையாவது குடற்புழு நீக்கம் செய்து கொள்வது அவசியம். எனவே 6 மாதங்களுக்கு ஒருமுறை Tab Albendazole 400 mg எடுத்து கொள்வது ஒரு நல்ல ஆரோக்கிய பராமரிப்பு வழியாக இருக்கும்.

* சூரிய ஒளி உங்கள் சருமத்தை நிறமிகளை பாதிப்பதோடு முதுமை மற்றும் முன்கூட்டிய சரும சுருக்கங்களை ஏற்படுத்துகிறது. எனவே உங்கள் சருமத்தில் tanned-ஆக இருக்கும் ஏரியாவில் பழுத்த பப்பாளி அல்லது பழுத்த வாழைப்பழத்தை எடுத்து 15 நிமிடம் தேய்க்கவும். பின் அதை கழுவி விட்டு AHA அல்லது தேயிலை மர எண்ணெய் கொண்ட மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தவும்.

* தோல் பராமரிப்பு இருபாலருக்கும் பொதுவானது. எரிச்சலூட்டும் பொருட்கள் உள்ள ஆஃப்டர் ஷேவிங் லோஷனை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஷேவிங் ரேஷ் ஏற்பட்டால் கற்றாழை ஜெல் அல்லது கேலமைன் லோஷனை பயன்படுத்தவும்.

* மருத்துவ ரீதியாக பல மேம்பட்ட தோல் பராமரிப்பு விருப்பங்கள் இருக்கின்றன. போடோக்ஸ் ஷாட் அல்லது ஃபில்லர் இன்ஜெக்ஷன் அல்லது பிக்சல் லேசருக்கு வரும் 2022 ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். இவற்றை பற்றி உங்கள் தோல் மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொண்டு தேவைப்பட்டால் இந்த விருப்பங்களுக்கு செல்லுங்கள்.

குளிர்காலத்தில் சன்ஸ்கிரீன் அப்ளை செய்வது அவசியம் : ஏன் தெரியுமா..?

* முடி மற்றும் நகங்களும் சருமத்தின் ஒரு பகுதி என்பதால் இவற்றுக்கான பராமரிப்பு தோல் பராமரிப்பில் இருந்து தொடங்குகிறது. பயோட்டின் (வைட்டமின் எச்) தினமும் 10 மிகி அளவு உட்கொள்வது முடி மற்றும் நகங்களின் ஊட்டச்சத்திற்கு நல்லது.

* உலர்ந்த கூந்தலுக்கு வாரத்திற்கு ஒரு முறை சூடான ஆயில் மசாஜ் தேவை

* ஹேர் வாஷ் செய்ய சாதாரண ஷாம்பு மற்றும் நிறைய கண்டிஷனர் பயன்படுத்தவும். அதிக கலரிங் போன்ற கெமிக்கல்களை தவிர்க்கவும். உச்சந்தலையில் அரிப்பு அதிகமாக இருந்தால், வாரத்திற்கு ஒரு முறை sebowash ஷாம்பு பயன்படுத்தலாம்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Newyear resolution