Home /News /lifestyle /

நயன்தாராவின் பிரைடல் மேக்கப்பில் இத்தனை விஷயங்களா..? திருமணமாகப்போகும் பெண்களுக்கான டிப்ஸ்..!

நயன்தாராவின் பிரைடல் மேக்கப்பில் இத்தனை விஷயங்களா..? திருமணமாகப்போகும் பெண்களுக்கான டிப்ஸ்..!

நயன்தாராவின் பிரைடல் மேக்கப்

நயன்தாராவின் பிரைடல் மேக்கப்

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் தொடங்கி நண்பர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வரை எங்கு திரும்பினாலும், எங்கு பார்த்தாலும் கல்யாண கோலத்தில் ஜொலிக்கும் நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான் தெரிகிறார்.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் தொடங்கி நண்பர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வரை எங்கு திரும்பினாலும், எங்கு பார்த்தாலும் கல்யாண கோலத்தில் ஜொலிக்கும் நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான் தெரிகிறார்.

பல ஆண்டுகள் நீடித்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் காதல் ஒருவழியாக திருமணத்தில் முடிந்தது. கடந்த ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் இவர்களின் திருமணம், சினிமா நட்சத்திரங்கள் சூழ, பலே பாதுகாப்புடன் நடந்து முடிந்தது.

திருமணத்தின் போது நயன்தாரா சமகால மற்றும் பாரம்பரிய திருமண தோற்றத்தை ஏற்கும் முனைப்பின் கீழ் முற்றிலும் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஒரு சிவப்பு நிற புடவையில் ஜொலித்தார். அதற்கு மேட்சிங் ஆக அவர் தேர்வு நகைகள் இன்னொரு ஹைலைட்! சரி வாருங்கள் நயன்தாராவின் மொத்த பிரைடல் மேக்கப்பையும் டிக்கோட் செய்து பார்த்து விடலாம்!

தன் திருமணத்தின் போது நயன்தாரா மிகவும் கனமான நகைகளை அணிந்து இருந்தார். நயன்தாரா ஒரு மாங் டிக்கா மற்றும் இயர் ரிங்ஸ்களுடன் மூன்று விரிவான நெக்லஸ்களை அணிந்து இருந்தார். நயன்தாராவின் திருமண நகைகள் கோயங்கா இந்தியா என்கிற பிராண்டிலிருந்து வந்தவை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நயன்தாராவின் திருமண நகைகள் குறித்த பல தகவல்களை, குறிப்பிட்ட பிராண்ட் அதன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.



நயன்தாரா அணிந்தது ஒரு மோனோடோன் வெட்டிங் அவுட்பிட் ஆகும். அவர் அணிந்த நகைகளில் மரகதங்களே அதிகம். ரத்தினக் கற்களைக் கொண்ட ஒரு ஜாம்பியன் எமரால்டு சோக்கரையும் அவர் அணிந்து இருந்தார். உடன் போல்கி மற்றும் பெரிய ரஷ்ய டம்பிள் நெக்லஸையும் அவர் தனது திருமண நகைகளின் பட்டியலில் சேர்த்தார். அவ்வளவு தானா? நிச்சயமாக இல்லை! ஒரு பாரம்பரியமான அமைப்பில் ஏழு வரிசை வைரங்கள், ரோஸ் கட்ஸ், போல்கி மற்றும் மரகதங்கள் ஆகியவற்றைக் கொண்ட பாரம்பரிய சட்லடாவுடன் நயன்தாரா ஒரு தேவதையை போல் ஜொலித்தார்.

இப்படி ஒரு அழகா! நயன்தாராவின் திருமண உடை, அணிகலன்கள் பற்றி ஒரு பார்வை..

காதுகளில் போல்கி மற்றும் கபோச்சோன் எமரால்டு ஸ்டட்ஸ் மற்றும் ஒரு மரகதம் மற்றும் வைர மாங் டிக்காவுடன் நயன்தாரா தன் திருமண கோலத்தை நிறைவு செய்தார். மற்ற பிரைடல் மேக்கப்களை பொறுத்தவரை, நயன்தாரா ஃபால்ஸ் ஐலேஷ்களை பயன்படுத்தினார். உதட்டு சாயத்தை பொறுத்தவரை, நயன்தாரா ஒரு ப்ரிக் ரெட் நிறத்தை தேர்வு செய்து உள்ளார்.



மருதாணி (பிந்தி) இல்லாமல் எப்படி ஒரு திருமணம் முடிவடையும்? முழுமையடையும்? இதற்காக நயன்தாரா மிகவும் எளிமையான பிந்தி டிசைனையையே தேர்வு செய்துள்ளார். இப்படியாக நயன்தாரா தன் திருமண நாள் முழுவதுமே முகத்தில் வெட்கம், மகிழ்ச்சி, பளபளப்பு என, தான் அணிந்திருந்த ஆடை, நகைகள் மற்றும் அலங்காரங்களை மீறிய அழகுடன் ஜொலித்தார் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Bride tips, Makeup, Nayanthara

அடுத்த செய்தி