உடலின் அந்தரங்க பகுதிகள், கை அக்குள் போன்ற இடங்களில் முடிகளை அவ்வப்போது நீக்கி சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். இல்லை என்றால் அங்கு வியர்வையின் ஊடாக சேரும் கிருமிகள் நமக்கு நோய்களைக் கொண்டு வந்துவிடும். அதேபோல, பெண்கள் தங்களுடைய சருமம் பொலிவாகக் காட்சியளிக்க வேண்டும் என்பதால் கை, கால்களில் உள்ள முடிகளை நீக்குவதைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர்.
பெண்களைப் பொருத்த வரையில் பெரும்பாலும் முடிகளை நீக்குவதற்கு வேக்சிங் ஒன்றே சிறந்த தீர்வாக இருக்கிறது. மார்க்கெட்டில் எண்ணற்ற வேக்சிங் க்ரீம்கள் இருக்கும் நிலையில், எதைத் தேர்வு செய்வது என்பதில் நமக்குக் குழப்பம் ஏற்படுகிறது.
ஒட்டகப் பால் வேக்ஸ்
ஒட்டகப் பால் வேக்ஸ் என்ற ஒரு பொருளை இதற்கு முன்பு கேள்விப்பட்டுள்ளீர்களா? முடிகளை அகற்றுவதில் உடனடி தீர்வு கிடைக்கும் என்ற விளம்பரத்துடன் இது வருகிறது. உண்மையில் இது பயனளிக்குமா என்பதைத் தெரிந்து கொள்ள நீங்களும் ஆச்சரியமாக இருக்கிறீர்கள் அல்லவா?
ஆம், ஒட்டகப் பால் வேக்ஸ் என்பது வலி இல்லாததாகவும், பக்க விளைவுகள் இல்லாததாகவும் இருக்கிறது. வெறுமனே முடிகளை மட்டும் அகற்றாமல் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் இதர வடுக்களையும் சேர்த்தே இது அகற்றுகிறது.
ரசாயனம் இல்லாதது
இந்த வேக்ஸில் சல்ஃபேட், அமோனியா அல்லது சிலிகா போன்ற ரசாயனங்கள் இதில் கிடையாது. ஆரஞ்சு தோல் பவுடர், ஒட்டகப் பால் பவுடர், தேங்காய் பால் பவுடர், கற்றாழை பவுடர், எலுமிச்சை தோல் பவுடர், காஃபி பவுடர் போன்ற இயற்கையான பொருட்களால் இந்த வேக்ஸ் தயார் செய்யப்பட்டுள்ளது.
Also Read : ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இத்தனை பலன்களா..?
எவ்வளவு நேரத்தில் முடிகளை அகற்றும்
பொதுவாக உடலில் எந்தப் பகுதியில் உள்ள முடிகளை அகற்றுவது என்றாலும், இது 10 முதல் 12 நிமிடங்களில் அதைச் சாத்தியப்படுத்துகிறது. கை, கால்கள், அந்தரங்கப் பகுதியில் என எங்கு வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதை எப்படி அப்ளை செய்வது
ஒட்டகப் பால் வேக்ஸ் எடுத்து ரோஸ் வாட்டர் அல்லது சாதாரண தண்ணீரில் கலக்கவும். நல்ல பேஸ்ட் போல தயார் செய்து, இதைச் சருமத்தின் மீது அப்ளை செய்யவும். ஒரு 10 நிமிடம் கழித்து, துணியை வைத்து வழித்து எடுக்க வேண்டும். பியூட்டி பார்லர் செல்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால், நிச்சயமாக இந்தப் பொருள் உங்களுக்கு உதவிக்கரமாக இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Beauty Tips, Waxing