ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தேசிய தேன் மாதம் 2022 : சரும அழகிற்கு தேனில் மறைந்திருக்கும் ரகசியங்கள்.!

தேசிய தேன் மாதம் 2022 : சரும அழகிற்கு தேனில் மறைந்திருக்கும் ரகசியங்கள்.!

National Honey Month | சருமத்திற்கு தேன் மூலமாக கிடைக்குக்கூடிய பயனுள்ள சில நன்மைகள் குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம்...

National Honey Month | சருமத்திற்கு தேன் மூலமாக கிடைக்குக்கூடிய பயனுள்ள சில நன்மைகள் குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம்...

National Honey Month | சருமத்திற்கு தேன் மூலமாக கிடைக்குக்கூடிய பயனுள்ள சில நன்மைகள் குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம்...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

புற ஊதாக்கதிர்வீச்சு, மாசுக்கள், தூசு, கெமிக்கல் கலந்த சரும பராமரிப்பு சாதனங்கள், உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றம், இரவு நேரத்தில் தாமதமாக உறங்குதல் என ஏராளமான சவால்கள் இருக்கும் போது, முக அழகை பராமரிப்பது இன்றைய வாழ்க்கை முறையில் மிகவும் கடினமான ஒன்றாக மாறி விட்டது. இதனால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள், கரு வளையங்கள், தழும்புகள் ஆகியவை உண்டாகுகின்றன. இது போன்ற பாதிப்புகள் அனைத்தையும் எளிதில் குணமாக்க ஆயுர்வேத மருத்துவ குணம்கொண்ட தேன் உதவுகிறது.

தேன் சருமத்திற்கும் உடலுக்கும் ஒரு சிறந்த மூலப்பொருள் என்று பல்வேறு ஆராய்ச்சிகள் மூலமாகவும், பண்டைய முன்னோர்களின் பயன்பாடு வழியிலும் நமக்கு தெளிவாகியுள்ளது. தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தை ஆரோக்கியமாகவும் பாதுகாக்கவும் வைக்க உதவுகிறது. எனவே தான் தேன் மற்றும் தேனீ வளர்ப்புத் தொழிலை ஊக்குவிக்க உலகம் முழுவதும் செப்டம்பர் மாதம் தேசிய தேன் மாதமாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஸ்பெஷலான நாளில் சருமத்திற்கு தேன் மூலமாக கிடைக்குக்கூடிய பயனுள்ள சில நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்...

சிறந்த எக்ஸ்ஃபோலியேட்டர்:

இயற்கையான மூலப்பொருட்களை கொண்டு சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்வது சரும துளைகளில் படித்திருக்கும் அழுக்கு மற்றும் இறந்த செல்களை அகற்ற பயன்படுகிறது. அந்த வகையில் சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்து இறந்த செல்களை அகற்றுவதில் தேன் முக்கிய பங்குவகிக்கிறது. கடைகளில் பயன்படுத்தும் தேனுக்குப் பதிலாக இயற்கையான தேனை முகத்தில் தடவி மசாஜ் செய்வதன் மூலமாக இறந்த சரும செல்களை நீக்கலாம், இதன் மூலம் சருமம் இயற்கையான பளபளப்பு பெறும்.

Also Read : சரும பராமரிப்பில் முக்கிய பங்காற்றும் வேம்பு மற்றும் கற்றாழை.!

முகப்பருவை அகற்றும்:

தேனில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது முகப்பரு மற்றும் முகப்பருவை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. முகத்தில் தேனை தடவி சுமார் 30 நிமிடங்கள் உலரவைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். சுத்தமான பசு நெய்யுடன் இயற்கையான தேனைக் கலந்து ஃபேஸ்பேக் அணிவது முகத்தில் உள்ள கட்டிகள், தழும்புகள், வீக்கம் போன்ற அழற்சிகளை சரி செய்ய உதவும்.

பளீச் சருமம் பெற:

மாசு மருவற்ற மென்மையான சருமத்தை எந்த பெண்ணுக்கு தான் பிடிக்காது, அதுவும் அதிக செலவில்லாமல் சில ஸ்பூன் தேனிலேயே கிடைத்தால் கசக்குமா என்ன?. ஆம், தேனில் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளன. எனவே இதனை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து கழுவினால், சருமம் பளீச் லுக்கைப் பெறுவதை நீங்களே கண்கூடாக பார்க்கலாம்.

Also Read : கண்ணுக்கு கீழ் கருவளையம் வராமல் தடுப்பது எப்படி.? எளிய டிப்ஸ்.!

இயற்கையான சன்ஸ்கிரீன்:

தேன் புற ஊதாக்கதிர்களின் வெப்பத்தால் சருமம் காயப்படுவதையும், சிவந்து போவதையும் சரிய செய்ய உதவும் சிறந்த அருமருந்தாகும். வெயிலில் அலைந்து திரிந்து வீட்டிற்கு வந்து கண்ணாடியை பார்க்கும் போது மொத்த பொழிவும் காணாமல் போனது போல் தோன்றினால், கற்றாழையுடன் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து முகத்தில் தடவுங்கள். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவினால் வெயிலால் ஏற்பட்ட பாதிப்புகள் மீது நல்ல பலனை காணலாம்.

Published by:Selvi M
First published:

Tags: Honey benefits, Skin Care