• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஒரு நாளைக்கு 5 லிட்டர் தண்ணீர்.. பிக் பாஸ் நமீதா மாரிமுத்து சொல்லும் அழகு பாடம்!

ஒரு நாளைக்கு 5 லிட்டர் தண்ணீர்.. பிக் பாஸ் நமீதா மாரிமுத்து சொல்லும் அழகு பாடம்!

நமீதா மாரிமுத்து

நமீதா மாரிமுத்து

நமீதா எப்போதுமே ஒரு வாட்டர் பாட்டலுடனே சுற்றி கொண்டிருப்பார். அதற்கு காரணம் இந்த 5 லிட்டர் தண்ணீர் தான்

  • Share this:
    பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரின் கவனத்தையும் பெற்ற நமீதா மாரிமுத்துவின் பியூட்டி சீக்ரெட்ஸ் பற்றி தான் பார்க்க போகிறோம்.

    தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து அதே பார்முலாவை தமிழிலும் உபயோகித்து தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக களம் இறக்கப்பட்டவர் தான் நமீதா மாரிமுத்து. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு இவரை பற்றி பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் பிபிக்கு பிறகு நமீதா மாரிமுத்து பற்றி தெரியாதவர்களே இல்லை எனலாம் பல சாதனைகளுக்கும் சொந்தக்காரர். மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேசினல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டிருக்கிறார்.

    சினிமாவில் பாடல்களும் பாடியுள்ளார். தமிழ் சினிமாவில் சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். மாற்று பாலினத்தை சேர்ந்த இவர் தற்போது மாடலிங் துறையில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர்.2015 மிஸ் கூவாகம், 2018 மிஸ் இந்தியா போன்றவற்றை வென்றுள்ளார். ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய நமீதா மாரிமுத்து சர்ஜரிக்கு பின்பு சந்தித்த கஷ்டங்கள் பற்றி பலமுறை பகிர்ந்துள்ளார். பல கஷ்டங்களை அனுபவித்து தான் இந்த இடத்திற்கு அவர் வந்துள்ளார்.

    நமீதாவை பார்க்கும் பலரும் அவரிடம் கேட்கும் முதல் கேள்வி, சருமம் எப்படி இப்படி பளபளப்பாக இருக்கிறது ? என்று தானாம். அதற்கு அவர் சொல்லும் டிப், பியூட்டி புராக்ட்டோ, ஃபேஸ் வாஷோ கிடையாது. வெறும் தண்ணீர் தான். ஒருநாளைக்கு சரியாக 5 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமாம். முகத்தில் அப்படி ஒரு ஜொலி ஜொலிப்பு தெரியுமாம்.



    முகப்பருக்கள், ட்ரை ஸ்கின், எண்ணெய் பசை என எந்த பிரச்சனைகள் இருந்தாலும் கஷ்டப்பட்டு 5 லிட்டர் தண்ணீரை குடித்தால் போதுமாம் செலவே இல்லாமல் முகத்தை அழகாக்கி விடலாம் என்கிறார் நமீதா. பிக் பாஸ் வீட்டில் அவர் இருந்த முதல் வாரத்தில் நன்கு கவனித்து இருந்தால் தெரிந்து இருக்கும். நமீதா எப்போதுமே ஒரு வாட்டர் பாட்டலுடனே சுற்றி கொண்டிருப்பார். அதற்கு காரணம் இந்த 5 லிட்டர் தண்ணீர் தான்.,



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: