Home /News /lifestyle /

நகங்களை கஷ்டப்பட்டு வளர்த்தும் உடைந்து போகுதா..? இந்த நெயில் மாஸ்க் அப்ளை பண்ணி பாருங்க...

நகங்களை கஷ்டப்பட்டு வளர்த்தும் உடைந்து போகுதா..? இந்த நெயில் மாஸ்க் அப்ளை பண்ணி பாருங்க...

நெயில் மாஸ்க்

நெயில் மாஸ்க்

சிலருக்கு நகங்கள் வலிமையாக இருக்காது, உடனே உடைந்து போகும். சிலருக்கு எதிர்பார்க்கும் நீளத்திற்கு வளராது. இந்த அனைத்து நக வளர்ப்பு பிரச்சனைகளுக்கும் இந்த நெயில் மாஸ்க் உதவும்.

நகங்களை பராமரித்து அழகுப்படுத்துவதும் இன்று டிரெண்டாகி வருகிறது. சிலர் இதற்கு அடிக்டாகவும் இருக்கிறார்கள். அதுவும் நகங்களை பார்த்து பார்த்து வளர்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென உடைந்து போனால் அது தரும் கவலை அன்றைய நாள் முழுவதும் இருக்கும். சிலருக்கு நகங்கள் வலிமையாக இருக்காது, உடனே உடைந்து போகும். சிலருக்கு எதிர்பார்க்கும் நீளத்திற்கு வளராது. இந்த அனைத்து நக வளர்ப்பு பிரச்சனைகளுக்கும் இந்த நெயில் மாஸ்க் உதவும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

வாழைப்பழம் மாஸ்க் : அடிக்கடி நகங்கள் உடைந்து போகின்றன. வறட்சி அடைகிறது எனில் இந்த மாஸ்க் உங்களுக்கு உதவும்.

செய்முறை : 1 tsp தேன், 1 வாழைப்பழம், 1 tsp தயிர். இவை மூன்றையும் சேர்த்து பேஸ்ட் போல் கலந்துகொள்ளுங்கள். பின் அதை உங்கள் நகங்களில் தடவுங்கள். இந்தக் கலவையானது 10 நிமிடங்களுக்கு ஊற வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடுங்கள். இதை வாரம் 2 முறை செய்யுங்கள்.



ஷீ பட்டர் மாஸ்க் : உங்கள் நகங்கள் பளபளப்பாக இல்லை, ஆரோக்கியமான நகங்களாக இல்லை என நினைத்தால் இந்த மாஸ்க் அப்ளை செய்யுங்கள்.

கொத்து, கொத்தா முடி கொட்டுதா..? காரணங்களும்... சரி செய்யும் வழிகளும்...

செய்முறை : 2 tsp ஷீ பட்டர், 1 tsp தேங்காய் எண்ணெய் , எசன்ஷியல் எண்ணெய் 2 ட்ராப் ( தேவைப்பட்டால் ) இவை மூன்றையும் நன்கு கலந்துகொள்ளுங்கள். பின் இந்தக் கலவையை நகங்களில் தடவி மசாஜ் செய்யுங்கள். பின் கை கிளவுஸ் இருந்தால் மாட்டிக்கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுங்கள். இதை வாரம் ஒரு முறை செய்தால் போதும்.



ஆலிவ் எண்ணெய் மாஸ்க் : உங்கள் நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறது எனில் இந்த மாஸ்க் அதற்கான தீர்வாக இருக்கும். இது நகங்களை உறுதியாக்கும். ஆரோக்கியமாக வளரவும் உதவும்.

செய்முறை : 2 tbspa ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை ஜூஸ் 1 tbsp, 1 tbsp நறுக்கிய பூண்டு இவை மூன்றையும் பேஸ்ட் போல் கலந்துகொள்ளுங்கள். பின் அவற்றை நகங்களில் தடவி 10 -15 நிமிடங்களுக்கு ஊற வையுங்கள். இதை வாரம் மூன்று முறை செய்யலாம்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Nail care

அடுத்த செய்தி