நகங்களில் ஓவியம்... இனி வரைய வேண்டாம் ஒட்டினால் போதும்..!

"இதனால் நேரச் செலவும் மிச்சம். பொருட் செலவும் மிச்சம். பார்லர் சென்று நெயில் ஆர்ட் செய்துகொள்ளும் பணச்செலவும் மிச்சம்"

நகங்களில் ஓவியம்... இனி வரைய வேண்டாம் ஒட்டினால் போதும்..!
நெயில் ஆர்ட்
  • News18
  • Last Updated: February 8, 2020, 3:09 PM IST
  • Share this:
இன்று எதற்கும் சிரமப்பட வேண்டாம். அமர்ந்த இடத்தில் உலகை அசைக்கலாம். இது மனித செயல்பாடுகளை தடை செய்கிறது என்றாலும் நேரத்தையும்.. உழைப்பையும் மிச்சமாக்குகிறது என்கிற கோணத்திலேயே இவற்றின் வெற்றிச் சூத்திரம் அடங்கியிருக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் பியூட்டி உலகின் பெரும் சந்தையைப் பிடித்தது இந்த ’மெனிகியூர்’. அதில் நெயில் ஆர்ட் மிகப்பெரும் டிரெண்ட். மக்களை ஈர்க்க வெகுவாக சந்தைப்படுத்தப்பட்ட இந்த நெயில் ஆர்ட் இன்று அதையும் சுலபமாக்கிவிட்டது.




நெயில் ஆர்ட் ?

கை விரல்களில் நெயில் பாலிஷ் மட்டும் வைத்த காலம் போய்..அதிலேயே டிசைன்கள் வரைந்து டிரெண்டானது நெயில் ஆர்ட். அப்படி அதில் எண்ணற்ற வகைகள் ஆச்சரியப்படும் படி வெளியாகின. இந்த நெயில் ஆர்ட் என்பது ஒருவரால் சுயமாக தனக்குத் தானே போட்டுக்கொள்ள முடியாது. யாராவது விரல்களைப் பிடித்துக் கொண்டு டிசைன்கள் போட வேண்டும். அதுவும் நகத்தில் நுணுக்கமான டிசைன்கள் போட அதிகம் தேவை பொறுமை. தானாக போட்டுக்கொள்ள நினைத்தாலும் சரியான பர்ஃபெக்‌ஷன் கிடைக்காது. இப்படி இத்தனை வேலைபாடுகள் அடங்கிய இந்த நெயில் ஆர்ட் டிசைனும் தற்போது ரெடிமேடாக ஒட்டிக் கொள்வது போல் வந்துவிட்டது.

 

நெயில் எக்ஸ்டென்ஷன்ஸ் என்று நகம் வளர்க்க முடியாதோருக்காக வெளிவந்ததுதான் செயற்கை நகங்கள். இவை நகங்களுக்கு மேல் ஒட்டிக் கொண்டு அதன் மேல் நெயில் பாலிஷ் போட்டுக்கொண்டால் இயற்கையான நகங்களைப் போல் இருக்கும். இது பல பெண்களுக்கும் பேருதவியாக இருந்தது. அலுவலகப் பெண்கள், கல்லூரிப் பெண்கள் என தினசரி அல்லது அக்கேஷன்களில் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்கின்றனர்.

ஒட்டினால் போதும்..!

இந்த செயற்கை நகங்களுக்கு மேல் நெயில் ஆர்டும் செய்து கொண்டனர். தற்போது இதற்கும் அட்வான்ஸாக வந்திருக்கிறது ’பிரெஸ் ஆன் நெயில்’. அதாவது டிரான்ஸ்பிரண்டாக வந்த இந்த நெயில் எக்ஸ்டென்ஷனிலேயே நெயில் ஆர்ட் செய்யப்பட்டதைப் போன்ற செயற்கை நகங்கள் வந்துவிட்டன. இனி அவற்றை பிடித்த உடை, செல்ல வேண்டிய நிகழ்ச்சி, பிடித்த டிசைன்களுக்கு ஏற்ப வாங்கி ஒட்டிக் கொண்டால் போதும். இனி இதற்கு யாரும் தேவையில்லை. நேரச் செலவும் மிச்சம். பொருட் செலவும் மிச்சம். பார்லர் சென்று நெயில் ஆர்ட் செய்துகொள்ளும் பணச்செலவும் மிச்சம்.



இந்த பிரெஸ் ஆன் நெயில் அமேசானிலேயே 100 ரூபாயிலிருந்து அழகழகான டிசைன்களில், வண்ணங்களில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி நகத்தில் ஒட்டிக் கொள்ளலாம்.

இவற்றில் ஸ்டிக்கர் போல் பிரித்து ஒட்டுவது மற்றும் குளூ வைத்து ஒட்டுவது என இரு வகைகள் உள்ளன. 6 மணி நேரம் வரை தாங்கும் ஒடும் நகங்கள் பார்ட்டி, ரிசப்ஷன் போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது பயன்படுத்தலாம். குளூ கொண்டு பயன்படுத்துவது ஒரு வாரத்திற்கு மேல் வரை தாங்கும். அந்த சமயங்களில் தண்ணீரில் கை வைக்காமல் பார்த்துக்கொள்வது அவசியம்.



இவற்றை வாங்குவதும் கால்களுக்கு செருப்பு வாங்குவது போல்தான். சைஸ் பார்த்து , கையில் ஃபிட்டாக உள்ளதா எனப் பார்த்து வாங்க வேண்டும். இல்லையென்றால் செயற்கை என்பது அப்பட்டமாக தெரிவதுடன், கை விரல் அழகையும் கெடுத்துவிடும்.

பார்க்க :  உதட்டுச் சாயம், நெயில் பாலிஷ் , டாட்டூ பயன்படுத்தலாமா..? 

 

 

 
First published: February 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading