நக அழகு பராமரிப்புக் கடைகளில் வேலை செய்யும் பெண்களுக்கு புற்றுநோய் வருமா?

அவர்களின் உடல் நலனுக்குப் பாதுகாப்பு அளிக்கும் விதமாக ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம்

news18
Updated: May 9, 2019, 2:10 PM IST
நக அழகு பராமரிப்புக் கடைகளில் வேலை செய்யும் பெண்களுக்கு புற்றுநோய் வருமா?
நக அழகுப் பராமரிப்பு
news18
Updated: May 9, 2019, 2:10 PM IST
இன்று நக அழகை பராமரிக்க மனிகியூர் கடைகள் ஏராளம் உருவாகிவிட்டன. ஆனால் அது அங்கு பணிபுரியும் பெண்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. அதிகபட்சமாக புற்றுநோய் ஏற்படும் என்று வாஷிங்டனில் நடத்திய ஆய்வில் கூறியுள்ளனர்.

அமெரிக்க கலரோடா பல்டர் பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளது. அதாவது நெயில் பாலிஷில் கலக்கப்படும் ஃபார்மல்டிஹைட், பென்சீன், கார்சினோஜெனிக் கெமிக்கல்களை அதிகமாக சுவாசிப்பது உடல்நலனை பாதிக்கும். இதுபற்றி பல ஆய்வுகளும் வெளியாகியுள்ளன.

இப்படி நெயில் ஆர்ட் செண்டர்கள் குளுகுளு ஏசி பொருத்தப்பட்டு காற்று புகாதவாறும், வெளியேறாதவாறும் அறைகள் வடிவமைக்கப்படிருக்கும். அங்கு இந்த நெயில் பாலிஷ்களை தொடர்ந்து திறந்து பயன்படுத்தும்போது நச்சு கலந்த கெமிக்கல்கள் வாயுக்கள் உள்ளுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கும். அதை அவர்கள் தொடந்து சுவாசிக்கும்போது புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, “ இதுபோன்ற சுற்றுச்சூழல், அங்கு பணிபுரியும் பெண்களுக்கு ஆபத்து நிறைந்தது. அவர்களின் உடல் நலனுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம்” என்று கூறினர்.

இந்த ஆய்வில் பங்கேற்ற பணியாளர்கள் தினமும் தலைவலி, கண்களில் எரிச்சல், தோல் அரிப்பு போன்ற பிரச்னைகளை சந்திப்பதாகக் கூறுகின்றனர். அவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் 100 மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருந்தது என அந்த ஆய்வு கூறுகிறது.

Loading...

இந்த கெமிக்கல்கள் கர்ப்பிணிகள் மற்றும் ஆஸ்துமா பிரச்னை கொண்டவர்களை எளிதில் தாக்கும் என்றும் எச்சரிக்கின்றனர்.

இதையும் படிக்க : அழகாக, ஆரோக்கியமாக நகங்களைப் பராமரிக்க எளிய குறிப்புகள் இதோ!


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...