கடுகு எண்ணெய் எண்ணற்ற ஆரோக்கியத்தை தரக்கூடிய மருத்துவ குணம் கொண்டது. அதில் ஒன்றுதான் தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் பண்பு. தலையில் எண்ணெய் வைத்துக் குளிக்க வேண்டாம் என்று சொல்லும் மருத்துவர்கள் கூட கடுகு எண்ணெயில் மசாஜ் செய்து குளிப்பதை ஊக்குவிக்கின்றனர்.
காரணம் இது தலை முடி வளர்ச்சிக்கு உதவும் பிட்டா கரோட்டின்( beta-carotene) என்ற ஊட்டச்சத்து உள்ளதாம். இதனால் தலை முடி வேர்கள் ஆரோக்கியமடைந்து முடி உதிராமல் இருக்கும் என்று கூறியுள்ளார். இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து சீராவது வேர்களில் தேங்கியிருக்கும் நச்சுகளையும் நீக்கக் கூடியது என்கிறார்.
அதுமட்டுமன்றி இந்த ஒட்டுமொத்த செயல் மூளையின் சுறுசுறுப்பிற்கும், ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இதை ஆய்விலும் நிரூபித்துள்ளனர்.
கடுகு எண்ணெய்யில் இருக்கும் ஃபேட்டி ஆசிட் மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவும் ஒமேகா 3 இருப்பது கூடுதல் வலிமையை அளிப்பதாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே கடுகு எண்ணெய்யை உணவில் சேர்த்துக்கொள்வது மட்டுமன்றி தலையில் தேய்த்து மசாஜும் செய்யலாம்.
பயன்படுத்தும் முறை
கடுகு எண்ணெயை பயன்படுத்தும்போது நேரடியாக அப்படியே தலையில் தேய்க்கக் கூடாது. கடுகு எண்ணெய்க்கு சமமாக தேங்காய் எண்ணெய்யும் கலந்து தலையில் தேய்த்து குளிப்பது நல்லது.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.