புத்துணர்ச்சி அளிக்கும் மஸ்க் மெலான் ஃபேஷியல்!

வெயிலின் தாக்கம் தொடங்கிவிட்ட நிலையில் இந்த மஸ்க் மெலான் ஃபேஷியன் சருமத்திற்கு ரெஃப்ரெஷாக இருக்கும்.

வெயிலின் தாக்கம் தொடங்கிவிட்ட நிலையில் இந்த மஸ்க் மெலான் ஃபேஷியன் சருமத்திற்கு ரெஃப்ரெஷாக இருக்கும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கோடை காலத்தில் அமிர்தமாக இருக்கும் மஸ்க் மெலான் (கிர்ணி பழம்) பழங்கள் உடலுக்கு மட்டுமல்ல முகப் பராமரிப்பிற்கும் புத்துணர்ச்சி அளிக்கும். இதன் பலன்களும் அதிகம். வெயிலின் தாக்கம் தொடங்கிவிட்ட நிலையில் இந்த மஸ்க் மெலான் ஃபேஷியல் சருமத்திற்கு ரெஃப்ரெஷாக இருக்கும்.காம்பினேஷன் சருமம்

காம்பினேஷன் சருமம் என்றாலே கொஞ்சம் சிக்கலானதுதான். எதை பயன்படுத்துவது, எது சருமத்திற்கு ஏற்றது என கண்டறிவதே பெரும் சிக்கல். கவலையே வேண்டாம். மிஸ்க் மெலான் நிச்சயம் உங்கள் சருமத்திற்கு ஏற்றதுதான். இது உங்கள் சருமத்தின் PH அளவை சீராக்கி புத்துணர்ச்சி அளிக்கும்.

தேவையான பொருட்கள்

மஸ்க் மெலான் - 2 tsp
பால் பவுடர் - 1 tsp

செய்முறை : இரண்டையும் நன்றாக பேஸ்ட் போல் கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். அரை மணி நேரம் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவி விடவும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால் சூரியனின் தாக்கம் சருமத்தை பாதிக்காது.எண்ணெய் சருமம்

எண்ணெய் சருமம் கொண்டோருக்கு கோடைக் காலம் என்றாலே பயம் தான். எத்தனை முறை முகத்தைக் கழுவினாலும் எண்ணெய் பிசு பிசுப்பு இருந்து கொண்டே இருக்கும். அதனால் எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்த மஸ்க் மெலான் ஃபேஸ் பேக் சிறந்தது.

தேவையான பொருட்கள் :

மஸ்க் மெலான் -2 tsp
எலுமிச்சை - 1/2 tsp
கடலை மாவு - 1 tsp

செய்முறை : மூன்றையும் நன்றாக பேஸ்ட் போல் கலந்து முகத்தில் சீராகத் தடவுங்கள். பேக் நன்கு காய்ந்து ஈரம் போகும் வரைக் காத்திருக்கவும். இறுதியாக குளிர்ந்த நீரில் கழுவி விடவும். வாரம் இரண்டு முறை செய்யலாம்.வறண்ட சருமம்

மஸ்க் மெலான் நீர் நிறைந்த பழம் என்பதால் வறண்ட சருமத்திற்கும் ஈரபதத்தைத் தக்க வைத்துக் கொள்ளும்.

தேவையான பொருட்கள் :

மஸ்க் மெலான் - 2 tsp
தேன் - 1 tsp

செய்முறை : இரண்டையும் மைய கலக்கிக் கொள்ளவும். அந்த பேஸ்டை முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடவும். முகத்தை துடைத்தபின் நீங்கள் பயன்படுத்தும் மாய்ஸ்சரைஸரை அப்ளை செய்து கொள்ளுங்கள். வாரம் 3 முறை செய்யலாம்.நார்மல் சருமம்

நார்மல் சருமம் என்றால் பெரிய அளவில் பயப்படத் தேவையில்லை. எப்போதும் போல் சருமத்தைப் பாதுக்காக்கும் செயல்களைப் பின்பற்றினாலே போதும்.முகம் பளபளக்கவும், சீரற்ற நிறத்தையும் மீட்டெடுக்க உதவும்.

செய்முறை :
மஸ்க் மெலான் - 2 tsp
ஆப்பிள் - 1 tsp

செய்முறை : இரண்டையும் நன்றாக மசித்து முகத்தில் தடவுங்கள். அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ முகப் பளபளக்கும். வாரம் மூன்று முறை செய்யலாம்.
Published by:Sivaranjani E
First published: