Home /News /lifestyle /

முகத்தில் எண்ணெய் வழியுதா..? இந்த 5 முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்குகளை டிரை பண்ணுங்க!

முகத்தில் எண்ணெய் வழியுதா..? இந்த 5 முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்குகளை டிரை பண்ணுங்க!

முல்தானி மிட்டி

முல்தானி மிட்டி

எண்ணெய் பசையை உறிஞ்சி சருமத்திற்கு பொழிவு தர வேண்டும் என்றால், முல்தானி மெட்டியைக் கொண்டு தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக்குகள் சிறந்த பலனைத் தரும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
“ஐந்தே நிமிடத்தில் பளீச் அழகைப் பெற” என டி.வி.யில் அடிக்கடி விளம்பரப்படுத்தப்படும் பல க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தும் பெண்கள் ஏராளம். குறிப்பாக ஆயில் சருமம் கொண்டவர்களை டார்க்கெட்டாக வைத்து ஸ்பெஷல் ஃபேஸ் பேக், ஃபேஸ் வாஷ், ஃபேஸ் க்ரீம், மாய்ஸ்சுரைசர் என விதவிதமாக வந்துவிட்டன. ஆனால் செலவே இல்லாமல் ஆயுர்வேத முறையில் அழகாக ஜொலிக்க விரும்புவோருக்கு முல்தானி மெட்டி அருமருந்தாக செயல்பட்டு வருகிறது.

எண்ணெய் பசையை உறிஞ்சி சருமத்திற்கு பொழிவு தர வேண்டும் என்றால், முல்தானி மெட்டியைக் கொண்டு தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக்குகள் சிறந்த பலனைத் தரும். முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை பயன்படுத்துவது, இறந்த சரும செல்கள், சருமத்தில் படிந்திருக்கும் அழுக்கு மற்றும் மாசுக்கள், கறைகள், கரும்புள்ளிகள் ஆகியவற்றை நீக்க உதவுகிறது. குறிப்பாக எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் முல்தானி மெட்டியைப் பயன்படுத்தும் போது, சருமத்தில் உற்பத்தியாகும் அதிக எண்ணெய்யைக் குறைத்து, இளமையான பளபளப்பான சருமத்தை பெற உதவுகிறது.

1. முல்தானி மெட்டி + ரோஸ் வாட்டர்:

ரோஸ் வாட்டர் சருமத்தில் உள்ள பி.எச். அளவை சமன் செய்யவும், அதிகப்படியான எண்ணெயை அகற்றவும் உதவுகிறது. மேலும் இது சருமத்தில் தோன்றும் சுருக்கங்கள், கோடுகள், கரும்புள்ளிகளையும் அகற்றக்கூடியது.

ஃபேஸ்பேக் செய்முறை:

ஒரு பவுலில் தேவையான அளவு முல்தானி மெட்டி, சிறிதளவு ரோஸ் வாட்டர் மற்றும் தண்ணீர் கலந்து சற்றே திக்கான பேஸ்ட்டை தயார் செய்து கொள்ளவும். இந்த கலவையை பிரஸ் மூலமாக முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் காய வைத்து. பின்னர் குளிர்ச்சியான தண்ணீரில் கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.



2. முல்தானி மெட்டி + தேன்:

தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினி பண்புகள் சருமத்தை எண்ணெய் பசையில் இருந்து காக்க உதவுகிறது.

ஃபேஸ்பேக் செய்முறை:

ஒரு கிண்ணத்தில் முல்தானி மெட்டியை சேர்த்து, அதனை மென்மையாகவும், சருமத்தில் எளிதாக தடவும் வகையிலும் தேவையான அளவிற்கு தேன் சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ளவும். இந்த கலவையை பிரஸ் மூலமாக முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் தடவி, 15 முதல் 20 நிமிடங்கள் வரை காய விடவும். அதன் பின்னர் இளம் சூடான தண்ணீரில் முகத்தை கழுவி சுத்தப்படுத்தலாம்.

புருவத்திலும் பொடுகு ஏற்படுமா? தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த முழு விபரம்!

3. முல்தானி மெட்டி + மஞ்சள்:

மஞ்சளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருவை குறைக்கவும், அதனால் உருவாகும் வடுக்களை மறைக்கவும் பயன்படுகிறது.

ஃபேஸ்பேக் செய்முறை:

ஒரு கிண்ணத்தில் முல்தானி மெட்டி மற்றும் மஞ்சளை சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீரைச் சேர்ந்து மென்மையான கலவையாக மாற்றிக் கொள்ளவும். இந்த கலவையை பிரஸ் மூலமாக முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் தடவி, 10 முதல் 15 நிமிடங்கள் வரை காய விடவும். அதன் பின்னர் இளம் சூடான தண்ணீரில் முகத்தை கழுவி சுத்தப்படுத்தலாம்.



4. முல்தானி மெட்டி + சந்தன பவுடர்:

ஒரு டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி, ஒரு டீஸ்பூன் சந்தன பவுடர், ஒரு டீஸ்பூன் கடலை மாவு, இரண்டு டீஸ்பூன் பால் ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை பிரஸ் மூலமாக முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் தடவி, 40 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரில் முகம் மற்றும் கழுத்துப்பகுதியை சுத்தப்படுத்தவும்.

முகப் பொலிவுடன் இளமைத் தோற்றம் பெற உதவும் ஆக்சிஜன் பேசியல்.! இதில் உள்ள நன்மைகள்?

5. முல்தானி மெட்டி + தயிர்:

தயிர் சருமத்தை மென்மையாக்கவும், நீரேற்றத்துடன் வைத்திருக்கவும் உதவுகிறது.

ஃபேஸ்பேக் செய்முறை:

முல்தானி மெட்டியுடன், சிறிதளவு தயிர் கலந்து மென்மையான பேஸ்ட்டை உருவாக்கிக்கொள்ளவும். இதனை பிரஸ் மூலமாக முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை காயவிடவும். பின்னர் குளிர்ச்சியான நீரால் முகத்தைக் கழுவினால், பளபளப்பான சருமத்தை கண்கூடாக காணலாம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Face pack, Oily Skin

அடுத்த செய்தி