Home /News /lifestyle /

மழையில் நனைவது சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை பாதிக்குமா..? 

மழையில் நனைவது சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை பாதிக்குமா..? 

சரும ஆரோக்கியம்

சரும ஆரோக்கியம்

மழை பெய்யும் போது நாம் நனைந்து விடலாம் என்பதால் உளவியல் ரீதியாக மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கிறோம். ஆனால் மாசுபாடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு (H2S) போன்ற நச்சு இரசாயனங்கள், வாகன உமிழ்வுகள் மற்றும் தொழில்துறை புகை ஆகியவற்றின் தாக்கம் மழைத்துளிகளில் கலந்து சருமத்திற்கு சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது

மேலும் படிக்கவும் ...
சுட்டெரித்த கோடை காலத்திடம் இருந்து நம்மை காக்க குளுகுளு மழைக்காலம் வந்தாச்சு. துளியாய் தொடங்கி இடியின் பேரிரைச்சலுடன் ஜில்லென பெய்யும் மழையில் நனைவது என்பது யாருக்குத் தான் பிடிக்காது. மழை ஒவ்வொரு முறையும் நம்மை மகிழ்விக்கிறது. சூடான டீயுடன் புத்தகத்தை படிப்பது முதல், அதில் நனைந்து ஆட்டம் போடுவதை பல வகையிலும் மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் மழையில் நனைவது உங்கள் சருமத்திற்கும், தலை முடிக்கும் நல்லதா?

இதுகுறித்து டெல்லியில் உள்ள பிரபல தோல் மற்றும் முடி மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜாங்கிட் கூறுகையில், கோடை காலத்தை தொடர்ந்து பெய்யும் முதல் மழையானது வெப்பத்தை தணிக்க உதவுகிறது. மழை பெய்யும் போது நாம் நனைந்து விடலாம் என்பதால் உளவியல் ரீதியாக மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கிறோம். ஆனால் மாசுபாடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு (H2S) போன்ற நச்சு இரசாயனங்கள், வாகன உமிழ்வுகள் மற்றும் தொழில்துறை புகை ஆகியவற்றின் தாக்கம் மழைத்துளிகளில் கலந்து சருமத்திற்கு சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, மழைக்காலத்தில் நாம் பெறும் மழைநீரில் பெரும்பாலானவை அமிலத்தன்மை, அழுக்கு மற்றும் அசுத்தம் ஆகியவற்றை கொண்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.



மழையில் நனைவது சருமம், தலைமுடிக்கு நல்லதா ?

நீங்கள் சென்சிடிவ்வான சருமம் கொண்டவர் என்றால், அமில மழை உங்கள் சருமத்தை பாதிக்கும். எனவே மழைக்காலத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மழை நீரில் குளிப்பது தலைமுடியில் உள்ள பொடுகு, முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் என பலரும் நம்புகின்றனர். ஆனால் மழை நீரில் அதிக அளவிலான அமிலத்தன்மை கலந்திருக்கும் என்பதால் அது கடுமையான முகப்பரு, வெடிப்புகள் போன்ற சரும பிரச்சனைகளை தரக்கூடும்.

காஸ்மெடிக் விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டும் இளைஞர்கள்... மலைக்க வைக்கும் வளர்ச்சி...

மழையில் உள்ள பிஎச் அளவால், நீங்கள் மழையில் நனைந்த பிறகு, உங்கள் தோல் அரிப்பு ஏற்படுவது, முடி வறட்சியாகவும், கடினமாகவும் மாறுவது, தோலில் வெடிப்புக்கள் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் தோன்றலாம். அதேபோல் ஈரப்பதம் காரணமாக தலையில் பேன் போன்ற பிரச்சனைகளும் உருவாகலாம் என மருத்துவர் ஜாங்கிட் எச்சரிக்கிறார்.



மழையில் நனைவதை தவிர்க்க வேண்டுமா?

தற்போதைய பருவமழையில், மழையில் நனைய நினைத்தாலோ அல்லது மழையில் குளித்து மகிழ நினைத்தாலோ, வீட்டிற்கு வந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் மீண்டும் குளிக்க வேண்டும்.

லேசான ஃபேஸ் வாஷைப் பயன்படுத்தி முகத்தையும், சருமத்தையும் சுத்தப்படுத்த வேண்டும்.

சருமத்தில் வெண் புள்ளிகள் தோன்றுவதற்கு இந்த 3 பிரச்சனைகள்தான் காரணமா? 

தலைமுடியை ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் கொண்டு சுத்தப்படுத்த மறக்காதீர்கள். இது கூந்தலில் ஈரப்பதத்தைப் பாதுகாத்து, மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.

நோய்த்தொற்றுகளைத் தவிர்க்க ஆடைகளை அணிவதற்கு முன் உடலை நன்கு உலர்த்திக் கொள்ள வேண்டும்.

இவற்றை எல்லாம் செய்வதற்கு நீங்கள் தயார் என்றால் ஜாலியாக மழையில் நனையலாம் என்கிறார் மருத்துவர் ஜாங்கிரிட்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Hair care, Monsoon Beauty tips

அடுத்த செய்தி