ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இளநரையை மறைக்க கெமிக்கல் டையா..? வீட்டிலேயே இயற்கையான முறையில் தயாரிக்க டிப்ஸ்

இளநரையை மறைக்க கெமிக்கல் டையா..? வீட்டிலேயே இயற்கையான முறையில் தயாரிக்க டிப்ஸ்

ஹேர் டை

ஹேர் டை

இளநரை தற்போது பெரும்பாலானோருக்கு பிரச்சனையாக இருக்கிறது. யூமெலனின், பயோ மெலனின் ஆகிய நிறமிகள் தான் நம்முடைய முடியின் கருமை நிறத்துக்குக் காரணமாகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

முந்தைய காலங்களில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தான் நரை முடி இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் தற்போது 20 வயது இளைஞர்களுக்கு கூட நரைமுடி வருவதை காண முடிகிறது. கருமையான முடி ஒருவரை இளமையாக காட்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இதனால் இளநரை தற்போது பெரும்பாலானோருக்கு பிரச்சனையாக இருக்கிறது. யூமெலனின், பயோ மெலனின் ஆகிய நிறமிகள் தான் நம்முடைய முடியின் கருமை நிறத்துக்குக் காரணமாகின்றன. இந்த நிறமிகளின் உற்பத்திக் குறைவதால், கருமையான முடிகள் நரைமுடிகளாக மாறுகின்றன.

அதுமட்டுமின்றி மரபியல் காரணங்கள், புகைபிடித்தல், மது அருந்துதல், பாஸ்ட் புட், புரதச்சத்துக் குறைபாடு, வைட்டமின் குறைபாடு போன்ற காரணங்களாலும் இளநரை ஏற்படுகிறது. இளநரைக்கு எவ்வித தீர்வும் இல்லாத நிலையில் டை அடிப்பதை தவிர வேறு வழியில்லை. ஆனால் கடைகளில் வாங்கி பயன்படுத்தப்படும் டைகளில் ரசாயனங்கள் இருப்பதால் வீட்டிலேயே இயற்கை பொருட்கள் கொண்டு தயார் செய்யப்படும் டைகளை பயன்படுத்துவது நல்லது. இதில் மருதாணி முக்கிய பங்காற்றுகிறது. மருதாணி கொண்டு தயார் செய்யப்படும் டை 100% பாதுகாப்பானது மற்றும் இயற்கையானது என்பதால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது

உங்கள் தலைமுடியில் மருதாணி விட்டுச்செல்லும் இயற்கையான பிரவுன் நிறம் உங்களுக்கு திருப்தி தரவில்லை என்றால் இதனுடன் நீங்கள் சில பொருட்களை சேர்த்தும் பயன்படுத்தலாம்.

* பிளாக் டீயை காய்ச்சி அதனுடன் ஒரு முட்டையின் மஞ்சள் கரு மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்க்கவும். இப்போது ஒரு டீஸ்பூன் காபி தூள், ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் பவுடரை இதனுடன் சேர்க்கவும்.இந்த கலவையை நன்கு கலந்து இரவு முழுவதும் வைத்து, மறுநாள் காலையில் முடியில் தடவவும். சுமார் 2 மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு உங்கள் ஷாம்பூ கொண்டு தலைமுடியை அலசலாம். உங்களுக்கு முட்டை பயன்படுத்த விருப்பம் இல்லை என்றால் அதற்கு பதிலாக தயிர் சேர்த்து கொள்ளலாம். இதனால் உங்கள் முடியில் உள்ள வெள்ளை நிறம் மறைந்து கருமையாகிவிடும்.

CBD அடங்கிய சரும தயாரிப்புகளை பயன்படுத்தலாமா? விளக்கங்களும்… உண்மைகளும்…

டை 2 செய்முறை :

ஒரு கைப்பிடி மருதாணி இலை, இரண்டு நெல்லிக்காய், காபிக் கொட்டை - 4 ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக அரைத்து இரவு முழுக்க ஊறவிடவும். காலையில் இந்த விழுதை முடியில் தடவி 30 நிமிடங்களுக்கு ஊறவைத்து, லேசாக சூடான நீரில் கூந்தலை அலசவும். உங்கள் முடி கருமை நிறம் பெறுவதை கண்கூடாக காண முடியும்.

டை 3 செய்முறை :

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி டீ தூள் போட்டு நன்றாக கொதிக்க விட்டு இந்த தண்ணீரை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். ஒரு பவுலில் நெல்லிக்காய் பொடி, அவுரி பொடி, மருதாணி பொடி சேர்த்து நன்றாக கலக்கவும். இதில் தயிர் மற்றும் தனியாக எடுத்து வைத்துள்ள டீ டிகாஷனையும் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை அப்படியே 1-2 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். அடுத்த நாள் இதனை உங்கள் முடியில் அப்ளை செய்து குளித்தால் இயற்கையான கருமை நிறம் கிடைக்கும்.

குறிப்பு : தினமும் இரவு சிறிது ஆமணக்கு எண்ணெயை தலைமுடியில் அப்ளை செய்து வந்தாலும் இளநரை படிப்படியாக மறையும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Hair care, Hair Dye