ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஃபேஷியல் செய்து கொண்ட பிறகு இந்த 5 தவறுகளை செய்யவே செய்யாதீர்கள்.!

ஃபேஷியல் செய்து கொண்ட பிறகு இந்த 5 தவறுகளை செய்யவே செய்யாதீர்கள்.!

ஃபேஷியல்

ஃபேஷியல்

உங்கள் முகத்தில் உள்ள ரோமங்களையும் அல்லது இறந்த செல்களை நீக்குவதற்கு பீலிங் என்ற முறையை நீங்கள் செய்திருந்தால் சில நாட்கள் வரை ஃபேஷியல் செய்வது தவிர்க்க வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைய கால பெண்கள் பலரும் ஃபேஷியல் செய்வதை அதிகம் விரும்புகின்றனர். ஃபேஷியல் செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள மாசுக்கள் நீக்கப்பட்டு சருமம் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியோடவும் இருப்பதற்கு வழிவகை செய்கிறது. மிக அதிக படிநிலைகளை கொண்ட இந்த முறையை சரியாக செய்தால் முகம் இளமையாக காட்சியளிக்கும். ஆனால் ஃபேஷியல் செய்வது இதோடு முடிந்துவிடவில்லை. நீங்கள் ஃபேஷியல் செய்த பிறகு அதன் முழு பயனை நீண்ட நாட்களுக்கு அனுபவிக்க வேண்டுமெனில், சில விஷயங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். இந்த தவறுகளை செய்யாமல் இருந்தீர்கள் என்றால் உங்கள் முகம் மிக நீண்ட நாட்களுக்கு குழந்தை போல் மென்மையாகவும் பளபளவென்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

மேக்கப் போடக்கூடாது : பலர் ஃபேஷயல் செய்து முடித்த பின்பு முகத்தில் அதிக அளவு மேக்கப் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது மிகவும் தவறான ஒரு செயல். ஏனெனில் ஃபேஷியல் செய்து முடித்த பின்பு உங்கள் சருமத்தில் உள்ள நுண் துளைகள் திறக்கப்பட்டு அதன் மூலம் சருமத்திற்கு அதிக அளவு ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறது. ஆனால் நீங்கள் அதன் மீது மேக்கப் போடும்போது ஆக்ஸிஜன் செல்வது தடுக்கப்பட்டு ஃபேஷியல் செய்ததின் முழு பலன் உங்களுக்கு கிடைக்காமல் போகிறது. மேலும் சருமத்தில் உள்ள செல்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காததால் சரும பாதிப்பு உண்டாவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

அடிக்கடி முகத்தை தொட்டுப் பார்க்கக் கூடாது : பலர் ஃபேஷியல் செய்த பின்பு தங்கள் முகத்தை அடிக்கடி தடவி பார்த்துக் கொண்டிருப்பர். இதனால் சருமத்திற்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் பேஷியலுக்கு பின்பு சருமத்தில் உள்ள நுண்துளைகள் சிறிது திறந்து இருக்கும். அந்த நேரத்தில் நீங்கள் அடிக்கடி உங்கள் முகத்தை தொட்டுப் பார்த்தோ அல்லது தடவிக் கொண்டோ இருந்தால் உங்கள் கைகளில் உள்ள கிருமிகள் அல்லது மாசுக்கள் சருமத்தினுள் சென்று பாதிப்பு ஏற்படுத்தலாம்.

பீலிங் செய்திருந்தால் ஃபேஷியல் செய்வது தவிர்க்க வேண்டும் : உங்கள் முகத்தில் உள்ள ரோமங்களையும் அல்லது இறந்த செல்களை நீக்குவதற்கு பீலிங் என்ற முறையை நீங்கள் செய்திருந்தால் சில நாட்கள் வரை ஃபேஷியல் செய்வது தவிர்க்க வேண்டும். ஏனெனில் பீலிங் செய்யப்பட்ட சருமமானது மிக மென்மையாக இருக்கும். மேலும் உங்கள் அந்த நேரத்தில் உங்கள் சருமத்தில் உள்ள ரத்த ஓட்டமானது சரியாக இருந்தால் மட்டுமே ஃபீலிங் செய்ததின் முழு பலனை நீங்கள் அடைய முடியும். எனவே பீலிங் செய்ததும் ஃபேஷியல் செய்வது முற்றிலுமாக தவிர்ப்பது அவசியம்.

சருமத்தை சுத்தப்படுத்துதல் : சருமத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவது மிக முக்கியம். சருமத்தின் நுண்துளைகளில் உள்ள மாசுக்கள் மற்றும் கிருமிகள் ஆகியவற்றை சரியான “மாய்சுரைசிங் கிளன்சரை” பயன்படுத்தி நீக்க முடியும். ஃபேஷியல் செய்வதற்கு முன்பு இந்த “கிளன்சிங்” எனப்படும் முறையை பயன்படுத்தி முகத்தில் உள்ள நச்சுக்களை நீக்குவதன் மூலம் ஃபேஷியல் செய்யும் போது அதன் முழு பயனை நீங்கள் பெறுவீர்கள்.

சரியான ப்ராடெக்டுகளை பயன்படுத்த வேண்டும் : முடிந்த அளவு இயற்கையான மூலிகைகளை பயன்படுத்தி செய்யப்பட்ட ப்ராடெக்டுகளை பயன்படுத்த வேண்டும். ஏனெனில் வேதி பொருட்கள் அடங்கியப்ராடெக்டுகள் பயன்படுத்துவதால் முகத்தில் எரிச்சல், அரிப்பு மற்றும் ஒவ்வாமை ஆகியவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Beauty Tips, Facial, Skincare