இந்த இரண்டு பொருட்கள் போதும்.. இயற்கையான ’Face Glow Pack’-ஐ வீட்டிலேயே தயார் செய்யலாம்..

இந்த இரண்டு பொருட்கள் போதும்.. இயற்கையான ’Face Glow Pack’-ஐ வீட்டிலேயே தயார் செய்யலாம்..

கஸ்தூரி மஞ்சள்

சிலர் பியூட்டி பார்லர் சென்று முக அழகை மெருகேற்றிக் கொள்வர். ஆனால் வெறும் 2 பொருட்களை இருந்தாலே போதும் வீட்டிலேயே இயற்கையான முறையில் முகப்பொலிவினை நீங்கள் பெறலாம்.

  • Share this:
பொதுவாக சருமம் பளபளக்க பல்வேறு கிரீம்களை பெண்கள் உபயோகப்படுத்துவர். சிலர் பியூட்டி பார்லர் சென்று முக அழகை மெருகேற்றிக் கொள்வர். ஆனால் வெறும் 2 பொருட்களை இருந்தாலே போதும் வீட்டிலேயே இயற்கையான முறையில் முகப்பொலிவினை நீங்கள் பெறலாம். இந்த பேஸ்பேக்கிற்கு தேவையான பொருட்கள் என்ன? மேலும் அவற்றை எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கஸ்தூரி மஞ்சள் - 1/2 தேக்கரண்டி
ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்

க்ளோ பேக்-கை எவ்வாறு செய்வது: ஒரு பாத்திரத்தில், 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரில் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமம் ரிலாக்ஸ் ஆவதுடன், சருமம் பொலிவுடன் காணப்படும். தேவைப்பட்டால், இந்த கலவையுடன் நீங்கள் 1/2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து தடவிக்கொள்ளலாம்.கஸ்தூரி மஞ்சளின் நன்மைகள்:

காட்டு மஞ்சள் என்றும் அழைக்கப்படும் கஸ்தூரி மஞ்சள் பல ஆண்டுகளாக இந்தியாவில் ஆயுர்வேத அழகு சாதனமாக பயன்படுத்தப்படுகிறது. கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. இது சருமத்திற்கு நிறைய நன்மைகளைக் தருகிறது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது.

* சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் தேய்த்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வராது.

தலைக்குக் குளித்ததும் தூங்கி விடுகிறீர்களா? அதனால் வரும் பிரச்னையும் தெரிந்துகொள்ளுங்கள்..

* கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்துவதன் மூலம் நம் சருமத்தின் ஏற்பட்டிருக்கும் வீக்கம் அழற்சி போன்றவை அழித்துவிடும்.

* கஸ்தூரி மஞ்சள் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்குகிறது. இப்போது கூட கிராமங்களில் உள்ளவர்கள் முகத்தில் உள்ள முடிகளை அகற்ற கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தி வருகின்றனர்.

* கஸ்தூரி மஞ்சள் முகத்தில் உள்ள கருமைகள், மங்கு போன்றவற்றை நீக்க உதவுகிறது. இதை தவறாமல் பயன்படுத்துவதால் உங்கள் சருமம் பிரகாசமாகிறது.* உங்களுக்கு கண்களை சுற்றி கருவளையம் இருந்தால் அந்த பகுதியை சுற்றி கஸ்தூரி மஞ்சளைப் பயன்படுத்தினால் கட்டாயம் அதனை குறைக்க உதவும்.

* இதில், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், மஞ்சள் முகப்பருவை எதிர்த்துப் போராட உதவும். கஸ்தூரி மஞ்சளை தனியாகவோ அல்லது தேன் அல்லது துளசி போன்ற பொருட்களுடன் கலந்து ஃபேஸ்பேக்காக பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தும் போது அவை முகப்பரு வடுக்களை அகற்ற உதவும்.

* கஸ்தூரி மஞ்சளைப் பயன்படுத்துவது வயதான அறிகுறிகளின் தோற்றத்தையம் முகத்தில் தெரியும் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது.

Published by:Sivaranjani E
First published: