ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஆண்களுக்கும் ஏன் சரும பராமரிப்பு அவசியம்...? தினமும் நீங்கள் பின்பற்ற வேண்டிய ஸ்கின்கேர் டிப்ஸ்

ஆண்களுக்கும் ஏன் சரும பராமரிப்பு அவசியம்...? தினமும் நீங்கள் பின்பற்ற வேண்டிய ஸ்கின்கேர் டிப்ஸ்

ஆண்களுக்கான பியூட்டி டிப்ஸ்

ஆண்களுக்கான பியூட்டி டிப்ஸ்

ஆண்களின் சருமத்தில் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் பெண்களை விட அதிகம் என்பதால் சருமம் தடிமனாக மற்றும் உறுதியாக இருக்கும். எனவே பெண்களை ஒப்பிடும் போதுஆண்களுக்கு வயதான அறிகுறிகள் மிகவும் தாமதமாக தோன்றும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சரும பராமரிப்பு என்பது பெண்களுக்கு மட்டும் தான் ஆண்களுக்கு அல்ல என்று ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. இதற்கேற்ப தற்போதும் கூட பெரும்பாலான ஆண்கள் தங்கள் முகத்தை தினமும் சுத்தம் செய்யவோ அல்லது சரும பராமரிப்பு நிபுணரைப் பார்க்கவோ தேவையில்லை என்று நினைக்கிறார்கள்.

ஆனால் பெண்களை போலவே ஆண்களும் தங்கள் சருமத்தை கவனித்து கொள்வது அவசியம். சருமத்தின் சமநிலையை பராமரிக்கும் அதே வேளையில் எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்துவதும் ஆண்களுக்கு முக்கியமானது. சமீப காலமாக அழகுத் துறையில் ஆண் சரும பராமரிப்பு (male skin care) வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த ட்ரெண்டுடன் ஆண்கள் தங்கள் சரும பராமரிப்பிற்கான வழிகளை நோக்கி செல்கிறார்கள்.

ஆண்களுக்கு ஏன் சரும பராமரிப்பு?

ஆண்களின் சருமத்தில் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் பெண்களை விட அதிகம் என்பதால் சருமம் தடிமனாக மற்றும் உறுதியாக இருக்கும். எனவே பெண்களை ஒப்பிடும் போதுஆண்களுக்கு வயதான அறிகுறிகள் மிகவும் தாமதமாக தோன்றும். எனினும் சரியான சரும பராமரிப்பு நடைமுறையை பின்பற்ற தவறுவதால் சரும சுருக்கம், முகப்பருக்கள் உள்ளிட்ட பல்வேறு அபாயங்களை எதிர்கொள்கின்றனர். எனவே ஆண்கள் தங்கள் சருமத்தை கவனித்து கொள்வது அவசியமாகிறது. பருக்கள் ஏற்பட கூடிய சருமம் இருந்தால்எண்ணெய் இல்லாத அல்லது காமெடோஜெனிக் அல்லாத தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும். சென்சிட்டிவான சருமம் என்றால் எரிச்சலைத் தவிர்க்க வாசனையற்ற மைல்டான தயாரிப்புகளை பயன்படுத்தலாம்.

ஆண்களுக்கான சில அத்தியாவசிய சரும பராமரிப்பு டிப்ஸ்கள் இங்கே:

க்ளென்சிங்:

மிகவும் எளிமையான சரும பராமரிப்பு வழி முகத்தை கழுவி சுத்தப்படுத்துவது. ஆண்களது சருமம் பொதுவாக தடிமனானது மற்றும் முகப்பருக்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதாலும், சரும துளைகளில் புகும் தூசி மற்றும் அழுக்குகளை சுத்தப்படுத்த நாளொன்றுக்கு2 முறையாவது தவறாமல் முகத்தை கழுவி சுத்தம் செய்வது அவசியம். முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி மென்மையான துணியால் துடைக்கவும்.

Also Read : தலைக்கு எண்ணெய் வைத்தால் பொடுகு அதிகரிக்குமா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

மாய்ஸ்சரைஸர் :

ஆண்களின் சருமத்தில் காணப்படும் செபாசியஸ் சுரப்பிகள் பெண்களை விட அதிக எண்ணெய் உற்பத்தி செய்தாலும் மாய்ஸ்சரைஸர் பயன்படுத்துவது அவசியமாகிறது. சருமத்தை மாய்ஸ்சரைஸர் செய்வது ஹைட்ரேஷனை ரீஸ்டோர் செய்கிறது மற்றும் க்ளென்சிங்கின் போது சருமம் இழந்த ஊட்டச்சத்துக்கள் மற்றும் மாய்ஸ்ட்டரை ரீபிளேஸ் செய்கிறது.மேலும் மாய்ஸ்சரைஸர் சருமத்தின் மீது ஒரு பாதுகாப்பு தடையை உருவாக்கி அழுக்குகள் துளைகள் அடைப்பதை தடுக்கிறது. சரும வெடிப்புக்கு காரணமான பாக்டீரியாக்களுக்கு எதிரான பாதுகாப்பை உருவாக்குகிறது.

ஆஃப்டர் ஷேவ் பாம் பயன்படுத்தலாம்:

ஷேவிங் ரேசரை தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமம் எரிச்சல், வீக்கம், சிவந்த தோல், வறட்சி, ரேஸர் பம்ப்ஸ் உள்ளிட்ட சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே சரியான மற்றும் தரமான ஷேவிங் பொருட்களை பயன்படுத்துவதும், மிக முக்கியமாக ஷேவ் செய்த பிறகு ஆஃப்டர் ஷேவ் பாம் பயன்படுத்துவதும் முக்கியம். இது சருமம் கரடுமுரடாக மாறுவதை தடுத்து மென்மையாக்குகிறது.

சன்ஸ்கிரீன்:

சுருக்கங்கள், ஏஜ் ஸ்பாட்ஸ் மற்றும் பிற வயது தொடர்பான சேதங்களை சூரியனிலிருந்து வெளிப்படும் புறஊதா கதிர்கள் ஏற்படுத்துகின்றன. மேலும் தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் இந்த கதிர்கள் அதிகரிக்கின்றன. சில நேரங்களில் சரி செய்யமுடியாத சரும சேதமும் ஏற்படுகின்றன. எனவே எந்த சீசனிலும் எப்போது வெளியே சென்றாலும் மறக்காமல் சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். நாள் முழுவதும் வெயிலில் இருக்க நேர்ந்தால் குறிப்பிட்ட இடைவெளியில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்.

Also Read : குளிர்காலத்தில் கற்றாழை பயன்படுத்துவதால் இத்தனை நன்மைகளா..? தவறாமல் யூஸ் பண்ணுங்க..!

வைட்டமின் சி:

சருமத்திற்கு வயதாவதை தடுக்க சரும பராமரிப்பு வழக்கத்தில் வைட்டமின் சி அதிகம் சேர்க்க வேண்டும். வைட்டமின் சி தயாரிப்புகளில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், சருமத்தில் உள்ள நிலையற்ற ஆக்ஸிஜன் மூலக்கூறுகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தற்போது ஆண்களும் ஆன்டி-ஏஜிங் டேப்லெட்ஸ் அல்லது அன்டர்-ஐ ஜெல் சீரம் போன்ற தயாரிப்புகளை பயன்டுத்துகின்றனர். அன்டர்-ஐ ஜெல் சீரம் கண்களை சுற்றியுள்ள சருமத்தை மென்மையாக மற்றும் பிரகாசமாக வைக்க உதவும். சரும பிரச்சனைகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நிபுணர்களை சந்தித்து வருடாந்திர பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம்.

First published:

Tags: Men's Beauty, Skincare