• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பியூட்டி பாலர் போக மாட்டேன்.. முடி சூப்பரா இருக்க இது தான் காரணம்- தமிழும் சரஸ்வதியும் கோதை அம்மா

பியூட்டி பாலர் போக மாட்டேன்.. முடி சூப்பரா இருக்க இது தான் காரணம்- தமிழும் சரஸ்வதியும் கோதை அம்மா

தமிழும் சரஸ்வதியும் மீரா கிருஷ்ணன்

தமிழும் சரஸ்வதியும் மீரா கிருஷ்ணன்

வாரத்திற்கு 3 முரை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது.

  • Share this:
    விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கோதையாக நடிக்கும் மீரா கிருஷ்ணனின் முடி ரகசியத்தை தெரிஞ்சிக்கலாமா?

    சின்னத்திரை சீரியல்களில் யங்க் அண்ட் பியூட்டி அம்மாவாக வலம் வரும், நடிகை மீரா கிருஷ்ணன் கேரளாவை சேர்ந்தவர். கடவுளின் தேசமான இங்கு பெண்கள் மிகவும் அழகாக இருப்பார்கள் காரணம், தேசத்தின் இயற்கை வளம் மற்றும் நீர்வளம் தான். கேரள பெண்களுக்கு இயற்கையிலே நீளமான முடி இருப்பதற்கு அந்த ஊர் தண்ணீர் தான் காரணம். அதற்கு அடுத்தது அவர்கள் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய். மீரா கிருஷ்ணனும் கேரளா என்பதால் அவரும் நீளமான முடியை பெற்றுள்ளார்.

    36 வயதில் முக அழகிலும், முடி அழகிலும் ஜொலிக்கும் மீரா பியூட்டி பாலர் பக்கம் கூட போகமாட்டாராம். கலருக்காக ஊசி போட்டு கொள்வது, சர்ஜரி செய்து கொள்வது எல்லாவற்றில் இருந்தும் ரொம்ப தூரமாம். சினிமாவில் 3 வயதில் இவரின் பயணம் தொடங்கியது. அதனால் மேக்கப் போடுவது அவரின் வாழ்க்கையிலேயே ஊறிவிட்டது. ஆனால் மேக்கப்பால் முகத்திற்கு எந்த பிரச்சனையும் வர கூடாது என்பதற்காகவே நேரம் எடுத்து சில விஷயங்களை முறையாக கடைப்பிடிப்பாராம்.

    மேக்கப் போடுபவர்கள் கட்டாயம் ஆவி பிடியுங்கள்... தேவயானி சொல்லும் சீக்ரெட்ஸ்!

    அதில் முக்கியமான ஒன்று, தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துவது.அலோவேரா ஜெல்லை முகத்திற்கு கட்டாயம் போடுவாராம். திருமணத்திற்கு பிறகு சென்னையில் செட்டில ஆனாலும் மீரா இப்போதும் கைப்பிடிக்கும் பழக்கம். வாரத்திற்கு 3 முரை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது. இதனால் தான் இவர் முடி கருகருவென நீளமாக இருக்கிறதாம். அதே போல் ஷூட்டிங்கில் விக் , ஜவுரி முடி பயன்படுத்தவே மாட்டாராம். இதை எல்லாம் தவிர்த்து அவரின் முடிக்கு கைக்கொடுக்கும் எண்ணெய் தான் தேங்காய் எண்ணெய்.



    சுத்தமான எண்ணெய்யை எடுத்து கொண்டு அதில் வெந்தயம், செம்பருத்தி இலை, பூ, கொய்யா இல்லை, கறிவேப்பை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்து அந்த எண்ணெய்யை தான் முடிக்கு யூஸ் பண்ணுவாராம். தலைமுடி உதிர்வு, இளம் நரை முடி பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் இதை பின்பற்றினால் முடி பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம் எனவும் மீரா குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: