Home /News /lifestyle /

மாட்சா சருமத்திற்கு செய்யும் அற்புதங்களை பற்றி தெரியுமா..? அதில் ஃபேஸ் மாஸ்க் அப்ளை செய்ய டிப்ஸ்

மாட்சா சருமத்திற்கு செய்யும் அற்புதங்களை பற்றி தெரியுமா..? அதில் ஃபேஸ் மாஸ்க் அப்ளை செய்ய டிப்ஸ்

மாட்சாவில்  ஃபேஸ் மாஸ்க்

மாட்சாவில் ஃபேஸ் மாஸ்க்

மாட்சா ஏன் இவ்வளவு அடர் பச்சை நிறத்தில் இருக்கிறது என்று தெரியுமா? ஏனெனில் இதில் அதிக அளவில் குளோரோபில் உள்ளது. குளோரோபில் நமது சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும்.

மாட்சா (Matcha) என்பது இயற்கையாகவே காய்ந்த கேமிலியா சினென்சிஸ் என்கிற செடியின் இலைகளை அரைத்து தயாரிக்கப்படும் ஒருவகை தேநீர் ஆகும். இது 12 ஆம் நூற்றாண்டிலிருந்து ஜப்பானிய கலாச்சாரத்தில் ஒரு முக்கிய பங்கை வகித்துள்ளது மற்றும் பாரம்பரிய ஜப்பானிய தேநீர் விழாக்களின் ஒரு பகுதியாகவும் இருந்து வருகிறது.

இது கிரீன் டீ அல்லது ஒயிட் டீ போன்ற வழக்கமான தேயிலைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது, ஏனெனில் மாட்சா ஒருபோதும் சூடாக்கப்படுவதில்லை மற்றும் இதில் உள்ள சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சிறப்பாகப் பாதுகாக்கவும் படுகிறது

இதே தூள் உங்கள் சருமத்திற்கான அதிசயங்களைச் செய்யும் என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? வாருங்கள். மாட்சா வழியாக நமக்கு என்னென்ன கிடைக்கிறது? இதை முகத்தில் பயன்படுத்துவது எப்படி? போன்ற விடயங்களை தெரிந்து கொள்வோம்.



உங்கள் சருமத்திற்கு மாட்சா வழியாக என்னென்ன பயன்கள் கிடைக்கும்?

1. உங்கள் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும்: மாட்சா ஏன் இவ்வளவு அடர் பச்சை நிறத்தில் இருக்கிறது என்று தெரியுமா? ஏனெனில் இதில் அதிக அளவில் குளோரோபில் உள்ளது. குளோரோபில் நமது சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும்.

2. முன்கூட்டிய முதுமையான முகத்தோற்றத்தை எதிர்த்துப் போராடும்: மாட்சாவில் கேட்டசின்கள் மற்றும் வைட்டமின்களான ஏ, பி-காம்ப்ளக்ஸ், சி மற்றும் கே போன்றவற்றின் ஆற்றல் உள்ளது. குறிப்பாக வைட்டமின் பி-2, உங்கள் சருமத்தை இளமையுடன் வைத்திருக்கும்.

மன அழுத்தத்தை குறைக்கும் அரோமா தெரபி : எப்படி செய்ய வேண்டும்..?

3. முகப்பருவை குறைக்க உதவும்: மாட்சாவில் எபிகல்லோகேட்டசின் கேலேட் (EGCG) அதிக அளவில் உள்ளது, இது ஒரு வகை கேட்டசின் ஆகும். இது வலுவான நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுகிறது.

4. உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது: மாட்சாவில் உள்ள பல வைட்டமின்களில் வைட்டமின் ஈ-யும் அடக்கம். இது சருமத்தை ஊட்டமளிக்கும் மற்றும் ஹைட்ரேட் செய்யும் திறனைக் கொண்டுள்ளது.



வீட்டிலேயே மாட்சா ஃபேஸ் மாஸ்க்குகளை செய்வது எப்படி?

இதற்கு உங்களிடம் இரண்டு வழிகள் உள்ளன.

01. மாட்சா மற்றும் பெண்டோனைட் க்ளே மாஸ்க்:

மாட்சா உடன் இணையும் பெண்டோனைட் க்ளே ஆனது முகப்பருவை குறைக்கவும், முகத்தில் உள்ள துளைகளை சுத்தப்படுத்தவும், முகப்பரு சார்ந்த வீக்கங்களை குறைக்கவும் வழிவகுக்கும்

செய்முறை:

2 டீஸ்பூன் மாட்சா பவுடர் எடுத்துக் கொள்ளவும்.
1 டீஸ்பூன் பெண்டோனைட் க்ளேவை (அல்லது உங்கள் விருப்பப்படி ஏதேனும் ஒரு க்ளே) சேர்க்கவும்.
1 டீஸ்பூன் வெதுவெதுப்பான நீரை சேர்க்கவும்.
உங்கள் தோல் வகைக்கு ஏற்ப 1 துளி டீ ட்ரீ எசென்ஷியல் ஆயில் அல்லது எந்தவொரு எண்ணெயையும் சேர்க்கலாம்.
இந்த கலவையை மேக்கப் இல்லாத, ஈரமான சருமத்தில் தடவவும்.
ஃபேஸ் மாஸ்க் முழுமையாக உலரும் வரை காத்திருக்கவும்
பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும்.
இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.



மாட்சா மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் மாஸ்க்:

ஓட்ஸ் ஒரு அற்புதமான நேச்சுரல் மாய்ஸ்சரைசராக கருதப்படுகிறது, உடன் மாட்சாவை சேர்க்க பலன் இரட்டிப்பாகும். சிரங்கு, சொறி, வெயிலினால் உண்டான சரும பாதிப்பு போன்றவைகளுக்கு சிகிச்சையளிக்க பொதுவாகப் பயன்படுத்தப்படும் சில தாவர இரசாயனங்களும் இதில் அடங்கும். இந்த கலவையில் சிறிது கெமோமைல் சேர்க்க மேலும் மென்மையான சருமத்தை அடையலாம்.

செய்முறை:

2 டீஸ்பூன் மாட்சா பவுடரை எடுத்துக் கொள்ளவும்.
2 டீஸ்பூன் ஓட் பேஸ்ட்டை எடுத்துக் கொள்ளுங்கள் (ஓட்ஸை வெதுவெதுப்பான நீரில் கலக்கவும்).
1 டீஸ்பூன் வெதுவெதுப்பான நீரை சேர்க்கவும்.
நீங்கள் கெமோமைல் எசென்ஷியல் ஆயிலின் 5 சொட்டுகளையும் சேர்க்கலாம்.
இந்த பொருட்களை கலந்து ஈரமான சருமத்தில் தடவவும்.
சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Face pack

அடுத்த செய்தி