Home /News /lifestyle /

நான் முகப்பருவுடன் போராடிய நாட்கள் மறக்க முடியாதவை... மீண்டு வந்த நினைவுகளை பகிர்ந்த பிரபலம்..!

நான் முகப்பருவுடன் போராடிய நாட்கள் மறக்க முடியாதவை... மீண்டு வந்த நினைவுகளை பகிர்ந்த பிரபலம்..!

மசாபா குப்தா

மசாபா குப்தா

12 வயதாக இருந்த போது முகப்பருக்களுடன் எடுக்கப்பட்ட பழைய போட்டோவை ஷேர் செய்து பல ஆண்டுகளாக கண்ணாடியைப் பார்க்க விரும்பவில்லை என்று கூறியுள்ள மசாபா குப்தா, தனது வாழ்க்கையின் இந்த கடினமான கட்டத்தை கடக்க உதவியது தனது தாயார், நடிகை நீனா குப்தா தான் என்றும் கூறி இருக்கிறார்.

மேலும் படிக்கவும் ...
டீன் ஏஜ் நெருங்கும் போது ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருவரும் சந்திக்கும் பொதுவான சரும பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பருக்கள். இதற்கு தற்போது பிரபலங்களாக இருப்பவர்கள் கூட விதிவிலக்காக இருந்திருக்க முடியாது.

இந்நிலையில் பிரபல ஃபேஷன் டிசைனரும், நடிகையுமான மசாபா குப்தா (Masaba Gupta), இளம் வயதில் முகப்பருவுடன் தனது போராட்டத்தை பற்றி மீண்டும் ஒருமுறை மனம் திறந்து கூறியுள்ளார். மசாபா குப்தா வேறு யாரும் இல்லை பழம்பெரும் இந்தி நடிகை நீனா குப்தாவிற்கும், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸிற்கும் பிறந்தவர் ஆவார்.

ஃபேஷன் டிசைனர் மசாபா குப்தாவின் இன்ஸ்டா ஸ்டோரி மற்றும் போஸ்ட்களை பார்ப்பது அவரது ஃபாலோயர்ஸுக்கு எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனென்றால் எதையும் நேர்மையாக வெளிப்படுத்த கூடியவராக இவர் இருப்பது தான். சமீபத்தில் தன்னை பற்றிய ஒரு த்ரோபேக் போட்டோவை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார் மசாபா. தனது 12 வயதில் எடுக்கப்பட்ட அந்த போட்டோ மூலம் அந்த வயதில் முகப்பருவால் தான் பட்ட அவதி மற்றும் போராட்டங்கள் பற்றிய நினைவலைகளை பகிர்ந்துள்ளார் மசாபா குப்தா.

பல மாதங்களாக கண்ணாடியை பார்க்க விரும்பாத 12 வயது சிறுமிக்கு என்ன சொல்வீர்கள்? ஒரே இரவில் என் முகத்தில் முகப்பருக்கள் அதிகரிக்கும்… ஆனால் எப்படியோ தப்பிப்பிழைத்தேன் என்று அவர் இன்ஸ்டா ஸ்டோரியில் தனது 12 வயது போட்டோவை ஷேர் செய்து கேப்ஷன் கொடுத்தார்.12 வயதாக இருந்த போது முகப்பருக்களுடன் எடுக்கப்பட்ட பழைய போட்டோவை ஷேர் செய்து பல ஆண்டுகளாக கண்ணாடியைப் பார்க்க விரும்பவில்லை என்று கூறியுள்ள மசாபா குப்தா, தனது வாழ்க்கையின் இந்த கடினமான கட்டத்தை கடக்க உதவியது தனது தாயார், நடிகை நீனா குப்தா தான் என்றும் கூறி இருக்கிறார். என் அம்மா அதை எப்படி செய்தார் என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் நான் ஒரு ராணி என்று நம்பும்படி என்னை வளர்த்தார் என்று தன் அம்மாவை பற்றி பெருமையாக குறிப்பிட்டு உள்ளார்.

முகப்பரு தொடர்பான தனது வாழ்க்கை அனுபவத்தை பற்றி மசாபா பேசுவது இது முதல் முறையல்ல. முன்னதாக கடந்த 2017-ஆம் ஆண்டில், அவர் ஒரு நீண்ட குறிப்பில் இதை பற்றி பேசிய போது முகப்பரு அடையாளங்களுடன் கூடிய தன்னைப் பற்றிய படங்களை ஷேர் செய்துள்ளார். 
View this post on Instagram

 

A post shared by Masaba (@masabagupta)


அப்போதைய பதிவில் மசாபா குப்தா கூறியிருந்ததாவது, “எனக்கு 14 வருடங்களாக பயங்கரமான முகப்பருக்கள் இருந்தது. எப்படியான பயங்கரம் என்றால் பெரும்பாலான நாட்களில் என் முகத்தில் ஒரு சிகரெட்டால் குத்தியது போல முகப்பருக்கள் இருந்தது. என் முகத்திலும் தலையிலும் கருமையான தழும்புகள் இருந்தன. முகத்தில் பவுடர் போடாமல் வீட்டை விட்டு வெளியே வர மறுத்த நாட்களும், அறையில் லைட்டைப் போட மறுத்த நாட்களும் உண்டு என்று உருக்கமுடன் கூறி இருந்தார்.

சாரா அலி கான் செய்யும் ஒர்க் அவுட் வீடியோ.. இதை பார்த்தால் உங்களுக்கே உற்சாகம் கிடைக்கும்..!

பால் பொருட்கள் அவருக்கு உடனடியாக முகப்பருவை ஏற்படுத்துவதாகவும், அதற்காக எந்த உணவையும் 100 சதவிகிதம் டயட்டில் இருந்து நீக்குவதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதையும், எப்போதாவது ஒருமுறை தயிர் சாப்பிடுவேன் என்றும் அவர் வெளிப்படுத்தினார். மசாபா சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவின் மாடர்ன் லவ் மும்பை சீரிஸில் நடித்தார். அடுத்ததாக அவரது நெட்ஃபிளிக்ஸ் சீரிஸான Masaba Masaba-வின் இரண்டாவது சீசனில் காணப்படுவார். இதில் இவரது தாயும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Acne, Beauty Tips, Pimple

அடுத்த செய்தி