முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / முகப்பருவை இரண்டே நாளில் சரி செய்ய இதை செய்யுங்க..!

முகப்பருவை இரண்டே நாளில் சரி செய்ய இதை செய்யுங்க..!

சாமந்தி - சந்தன பேஸ் பேக்.

சாமந்தி - சந்தன பேஸ் பேக்.

சருமத்தில் உள்ள பருக்களை குறைக்க உதவும் எளிய பேஸ்பேக் ஒன்றினை சாமந்திப்பூ, சந்தனம் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மனிதனாய் பிறந்த அனைவருக்கும் பொதுவாக இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று முகப்பரு. அனைவரும் பரு மற்றும் கரும்புள்ளி இல்லாத முகத்தை பெற நாம் செய்யாத விஷயங்களே இருக்காது. ஆனாலும், நமக்கு சரியான பலன் கிடைப்பதில்லை.

சருமத்தில் உள்ள பருக்களை குறைக்க உதவும் எளிய பேஸ்பேக் ஒன்றினை சாமந்திப்பூ, சந்தனம் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு தயார் செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சாமந்திப் பூ - 2.

சந்தனப் பொடி - 2 ஸ்பூன்.

எலுமிச்சை பழம் - 1.

செய்முறை :

பேஸ்பேக் செய்வதற்கு முன்னதாக, எடுத்துக்கொண்ட சாமந்திப் பூவினை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்யவும்.

பின்னர், பூவின் இதழ்களை மட்டும் தனியே பிய்த்து எடுதுக்கொள்ளவும்.

இதையடுத்து, எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி, சாறு புழிந்து தனியே எடுத்து தாயராக வைத்துக்கொள்ளவும்.

இப்போது, ஒரு கோப்பையில் சாமந்தி பூ இதழ்களை சேர்த்து மசித்துக்கொள்ளவும். இல்லையெனில், மிக்சியில் மைபோல அரைக்கலாம்.

அத்துடன், சந்தனப் பொடி மற்றும் எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் சேர்த்து குழைத்துக்கொள்ள பேஸ்பேக் ரெடி.

Also Read | உங்கள் உதட்டை ரோஜா இதழ் போல மென்மையாக மாற்ற உதவும் லிப் ஆயில் பற்றி தெரியுமா..?

எப்படி பயன்படுத்துவது?

முதலில், உங்கள் முகத்தை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

இப்போது, முறையாக தயார் செய்த அந்த பேஸ்பேக்கினை, முகம் மற்றும் கழுத்து பகுதிக்கு அப்ளை சேய்து 30 நிமிடங்களுக்கு உலர விடவும்.

பின்னர், குளிர்ந்த நீரில் சுத்தம் செய்துவிட நல்ல பலன் கிடைக்கும்.

சந்தனப்பொடி மற்றும் எலுமிச்சை சாறு கலவையானது சரும துளைகளை ஆழ்ந்து சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. அந்த வகையில் இந்த பேஸ்பேக், சருமத்தில் காணப்படும் பருக்களை குறைக்கிறது.

வைட்டமின் சி-யின் சிறந்த மூலமாக இருக்கும் எலுமிச்சை சாற்றினை சருமத்திற்கு பயன்படுத்த, சருமத்தின் இறந்த செல்கள் நீக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த பேஸ்பேக் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறைக்கிறது.

அழற்சி எதிர்ப்பு, ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்த சாமந்தி பூவில் சரும ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. அந்த வகையில் இந்த பேஸ்பேக் பிரகாசமான சருமம் பெற உதவுகிறது.

First published:

Tags: Acne, Beauty Tips, Nature Beauty, Pimple