Makeup Tips | பெண்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய லிப்ஸ்டிக் ரூல்ஸ்கள் இங்கே!
Makeup Tips | பெண்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய லிப்ஸ்டிக் ரூல்ஸ்கள் இங்கே!
லிப்ஸ்டிக்
எப்போதுமே லிப்ஸ்டிக் பயன்படுத்தும் முன் உங்கள் உதடுகளை அதற்கு ஏற்றவாறு தயார் செய்வதில் கவனம் செலுத்துங்கள். லிப்ஸ்டிக் பயன்படுத்தும் முன் உங்கள் உதடுகளை எக்ஸ்ஃபோலியேட் செய்வதையும் மற்றும் மாய்ஸ்சரைஸாக இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
சரியான லிப்ஸ்டிக் இல்லாமல் எந்த ஒரு மேக்கப் லுக்கும் நிறைவடையாது. போல்ட் ரெட், நியூட் பிங்க் அல்லது சாஸி பர்பிள் என எந்த கலராக இருந்தாலும், எப்போதும் பெண்களின் தோற்றத்தை மிகவும் அழகாக காட்டுவதில் லிப்ஸ்டிக் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனினும் பெண்கள் தங்கள் உதடுகளுக்கு லிப்ஸ்டிக் பூசும் போது லிப்ஸ்டிக்கால் முழுவதுமாக சரியாக மறைக்க முடியாமலோ அல்லது மேட்ச் ஆகாத தவறான ஷேட்ஸ்களை பயன்படுத்தி விடுவோமோ என்ற அச்சம் மற்றும் தயக்கத்தை எதிர்கொள்கிறார்கள். இது சரியானது தான், ஏனென்றால் லிப்ஸ்டிக் அப்ளை செய்வதில் பெண்கள் செய்யும் சில அடிப்படை தவறுகள் அவர்களின் லுக்கை மோசமாக பாதிக்கலாம்.
எனவே மேக்கப் போட்டு கொள்ளும் ஒவ்வொரு முறையும் அழகாக இருப்பதை உறுதி செய்ய விரும்பும் பெண்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய சில லிப்ஸ்டிக் ரூல்ஸ்களை இங்கே பார்க்கலாம்.
எப்போதும் லிப் லைனரை தேர்ந்தெடுக்க வேண்டும். இது தோல் மற்றும் பற்களில் ப்ளீட் ஆவது மற்றும் கறைகள் ஏற்படுவதை தவிர்க்க உதவும். ஒருவேளை நீங்கள் லைனர்களை இதுவரை பயன்படுத்தியதில்லை இனி தான் புதிதாக பயன்படுத்த போகிறீர்கள் என்றால், எந்த லிப்ஸ்டிக் ஷேடிற்கு என்ன லைனரை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும் வரை, உங்கள் அனைத்து லிப்ஸ்டிக் ஷேட்களின் கீழும் நியூட் லிப் லைனரை தேர்வு செய்யலாம்.
சரியான நேரத்தில் சரியான லிப்ஸ்டிக் போட்டு கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். காலை நேரங்களில் போட்டு கொள்ளும் மேக்கப்பின் போது வார்ம் கலர்ஸ்களை தேர்ந்தெடுத்து, ரெட் கலருக்கு மேல் பிங்க் அப்ளை செய்யலாம். இரவு நேரங்களில் நீங்கள் ஃபுச்சியா (fuchsia) மற்றும் ரெட் டோன்களை தேர்வு செய்யலாம்.
உங்கள் தோல் நிறத்திற்கு ஏற்ற சரியான லிப்ஸ்டிக் ஷேட்ஸ்களை தேர்வு செய்து பயன்படுத்துவது முக்கியம். எனவே எப்போது லிப்ஸ்டிக் போட்டாலும் அது உங்கள் சரும நிறத்திற்கு மேட்ச் ஆக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் பிளம் டோன்ஸ்களை விரும்புவதால், ஆழமான ஷேட்ஸ் உங்களுக்கு நன்றாக இருக்கும் என்று அர்த்தமல்ல. ஒரே கலர்களில் எப்போதும் பல ஷேட்ஸ்கள் கிடைக்கும். எனவே கவனமுடன் உங்கள் சரும நிறத்திற்கு சூட் ஆக கூடிய ஷேட்-ஐ தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும்.
எப்போதுமே லிப்ஸ்டிக் பயன்படுத்தும் முன் உங்கள் உதடுகளை அதற்கு ஏற்றவாறு தயார் செய்வதில் கவனம் செலுத்துங்கள். லிப்ஸ்டிக் பயன்படுத்தும் முன் உங்கள் உதடுகளை எக்ஸ்ஃபோலியேட் செய்வதையும் மற்றும் மாய்ஸ்சரைஸாக இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த டிப்ஸ் உங்கள் உதட்டிற்கு குறைபாடற்ற தோற்றத்தை கொடுப்பதோடு, உங்கள் லிப்ஸ்டிக் நீண்ட காலம் நீடிக்கவும் உதவும்.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.