கெமிக்கல் டை இல்லாமலேயே இந்த பொருட்களை வைத்து தலைமுடியை கருப்பாக்கலாம்..!
கெமிக்கல் டை இல்லாமலேயே இந்த பொருட்களை வைத்து தலைமுடியை கருப்பாக்கலாம்..!
நீண்ட நேரம் காய வைக்காதீர்கள் : பலரும் செய்யும் விஷயம் நீண்ட நேரம் முடியை காய வைப்பதுதான். இது சரும வேர்களை சிதைத்துவிடும். எரிச்சலை உண்டககும். வண்ணம் கூடுதல் அடர்த்தியாகிவிடும். பின் செயற்கை என்பது தெரிந்துவிடும். கலரிங் நிறங்களுக்கு 30 -35 நிமிடங்களே போதுமானது.
மெலனின் குறைபாட்டாலும் சிலருக்கு மரபணு காரணத்தாலும் தலைமுடி வெள்ளையாகலாம்.
இளமையிலேயே பலருக்கும் வெள்ளை முடி வளரத் துவங்குகிறது. இது மெலனின் குறைபாட்டாலும் சிலருக்கு மரபணு காரணத்தாலும் உண்டாகும். இது தவிற வயதானவர்களுக்கு தலைமுடி வெள்ளையாவது இயல்பு. இப்படி சில காரணங்களால் தலைமுடி வெள்ளையாவதை வீட்டுக் குறிப்புகளை பயன்படுத்தி கருமையாக்கலாம்.
பிளாக் டீ : டீ இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தலையில் உற்றி நனைத்து ஊற வைத்து தண்ணீரில் அலசுங்கள். ஷாம்பூ பயன்படுத்தக் கூடாது.
தேங்காய் எண்ணெய் : தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு பிழிந்து நன்குக் கலக்கிக்கொள்ளுங்கள். அதை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பூ பயன்படுத்தி அலசிவிடுங்கள்.
கறிவேப்பிலை : தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலையை கொதிக்க வைத்து அந்த எண்ணெய்யை தினமும் தலைக்குத் தேய்த்து வாருங்கள்.
மருதாணி பொடி : ஹென்னா பவுடர் , 3 ஸ்பூன் பெரிய நெல்லிக்காய் பொடி , 1 ஸ்பூன் காஃபி பவுடர் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தண்ணீர் ஊற்றி தலை முடியில் அப்ளை செய்து 2 மணி நேரம் கழித்து கழுவுங்கள்.
நெல்லிக்காய் : பெரிய நெல்லிக்காய் மற்றும் செம்பருத்தி இரண்டையும் மைய அரைத்து அதை தலையில் அப்ளை செய்து 2 மணி நேரம் கழித்து தலைக்குக் குளியுங்கள்.
குறிப்பு : மேலே குறிப்பிட்ட அனைத்தையும் வாரம் ஒரு முறை செய்ய முடியின் நிறம் கருமையாவதை உணரலாம்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.