HOME»NEWS»LIFESTYLE»beauty make face mist at home with simple ingredients esr

உங்கள் முகத்திற்கான ஃபேஸ் மிஸ்டை இனி நீங்களே தயாரிக்கலாம்..அதற்கு இந்த பொருள் மட்டும் இருந்தால் போதும்

சருமம் வறண்டு, சோர்வாக காணப்பட்டால் இந்த ஃபேஸ் மிஸ்டை அடித்தால் போதும் முகம் பிரகாசிக்கும் ஜொலிப்பை தரும்.

உங்கள் முகத்திற்கான ஃபேஸ் மிஸ்டை இனி நீங்களே தயாரிக்கலாம்..அதற்கு இந்த பொருள் மட்டும் இருந்தால் போதும்
மாதிரி படம்
  • Share this:

ஃபேஸ் மிஸ்ட் முகத்தின் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும், சருமத்தின் பிஹெச் அளவை பராமரிக்கவும் உதவுகிறது. அதேபோல் இது கைக்கு அடக்கமாக பையிலேயே வைத்துக்கொள்ளலாம்.

சருமம் வறண்டு, சோர்வாக காணப்பட்டால் இந்த ஃபேஸ் மிஸ்டை அடித்தால் போதும் முகம் பிரகாசிக்கும் ஜொலிப்பை தரும். எனவே இந்த ஃபேஸ் மிஸ்டை வெளியில் வாங்குவதைக் காட்டிலும் உங்கள் தேவையற்ற இரசாயணங்கள் இல்லாமல் நீங்களே தயாரிக்கலாம். எப்படி..?

தேவையான பொருட்கள் :



கிளிசரின் - 2 tbsp
ரோஸ் வாட்டர் - 60 ml
எலுமிச்சை சாறு - 1/2 tsp
வெள்ளரி - 1

செய்முறை :

வெள்ளரியை மிக்ஸியில் அரைத்து அதன் சாறை பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள். மற்ற பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்துவிட்டு ஸ்பிரே பாட்டிலில் நிரப்பி பயன்படுத்தலாம். இதௌ ஃபிரிட்ஜிலும் வைத்துக்கொள்ளலாம்.



கற்றாழை ஃபேஸ் மிஸ்ட்

தேவையான பொருட்கள் :

வெள்ளரி - 1
தண்ணீர் - 1/4 கப்
கற்றாழை சதை - 1 tsp
விட்ச் ஹசல் (Witch hazel) - 1/2 tsp

செய்முறை

வெள்ளரியை அரைத்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள். பின் மற்ற பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்துவிட்டு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி பயன்படுத்துங்கள்.

நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் மாஸ்கை புதுபிக்க நேரம் வந்துவிட்டதா..? காலாவதி நாளை கண்டறியும் வழிகள் இதோ...

அவ்வளவுதான் செலவே இல்லாமல் வீட்டிலேயே ஃபேஸ் மிஸ்ட் தயார்...!
Published by:Sivaranjani E
First published: