Home /News /lifestyle /

பர்ப்பவர்கள் வியந்துபோகும் படி முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர இந்த ஒரு உருண்டையை தினம் சாப்பிடுங்க...

பர்ப்பவர்கள் வியந்துபோகும் படி முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர இந்த ஒரு உருண்டையை தினம் சாப்பிடுங்க...

கருப்பு எள் உருண்டை

கருப்பு எள் உருண்டை

இந்த உருண்டையை செய்து ஜாடியில் போட்டுக்கொள்ளுங்கள். பின் உங்கள் முடி கட்டுக்கடங்காமல் வளர்வதை யாராலும் தடுக்க முடியாது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    முடி அடர்த்தியாக வளர வேண்டும் என யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஆனால் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதுதான் யாருக்கும் தெரிவதில்லை. இனி கவலை வேண்டாம். இந்த உருண்டையை செய்து ஜாடியில் போட்டுக்கொள்ளுங்கள். பின் உங்கள் முடி கட்டுக்கடங்காமல் வளர்வதை யாராலும் தடுக்க முடியாது.

    தேவையான பொருட்கள் :

    கருப்பு எள் - 1 கப்
    ஆளி விதை - 1 கப்
    பூசணி விதை - 1/4 கப்
    கசகசா - 1/4 கப்
    வெல்லம் - 1 1/2 கப்
    ஏலக்காய் பொடி - 1 tsb
    நெய் - 3 tsb



    செய்முறை :

    முதலில் கடாய் வைத்து கருப்பு எள் வெடித்து நன்கு வறுபடும் வரை வறுத்து எடுக்க வேண்டும்.

    பின் அதேபோல் ஆளி விதைகளை வறுக்க வேண்டும். பின் பூசணி விதை , கசகசாவையும் தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    பின் அவை ஆறியதும் மிக்ஸியில் பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    ரோஜா இதழ்கள் போன்ற சருமம் வேண்டுமா.? வீட்டிலேயே ரேஸ் பேக் செய்து பயன்படுத்துங்கள்.!

    பின் அதை ஒரு கிண்ணத்தில் கொட்டிக்கொண்டு நன்கு தூள் செய்யப்பட்ட வெல்லம், நெய், ஏலக்காய் பொடி ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.

    பின் அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக நெல்லிக்காய் அளவிற்கு உருண்டை பிடித்துக்கொள்ளுங்கள்.

    பின் அதை ஒரு ஜாடியில் போட்டுக்கொண்டு தினம் ஒன்று சாப்பிடுங்கள்.

    நீங்கள் நினைத்ததை விடவும் முடி வளரலாம்.

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Hair growth

    அடுத்த செய்தி