ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பிங்க் நிற உதடுகள் வேண்டுமா..? கருமையை அகற்ற எளிமையான 7 வழிமுறைகள் 

பிங்க் நிற உதடுகள் வேண்டுமா..? கருமையை அகற்ற எளிமையான 7 வழிமுறைகள் 

பிங்க் நிற உதடுகள்

பிங்க் நிற உதடுகள்

வைட்டமின் பி12 குறைபாடு, மரபியல் பிரச்சனைகள், அதிகமாக தேநீர் பருவதால் உண்டாகும் பித்தம், மலிவான மற்றும் தரமற்ற உதட்டுச் சாயங்களைப் பயன்படுத்துவது, புற ஊதாக்கதிர்களின் தாக்கம், போதுமான அளவு நீர் அருந்தாதது, புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவது, சரும அலர்ஜி, மருந்துகள் என பல்வேறு காரணங்களால் உதடுகள் கருமையாகின்றன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சருமம் பளபளப்பாக இருக்க வேண்டும் என நினைக்கும் பெண்கள், உதடுகள் கருமை நிறமாக மாறுவது குறித்து கவனம் செலுத்துவது கிடையாது. வைட்டமின் பி12 குறைபாடு, மரபியல் பிரச்சனைகள், அதிகமாக தேநீர் பருவதால் உண்டாகும் பித்தம், மலிவான மற்றும் தரமற்ற உதட்டுச் சாயங்களைப் பயன்படுத்துவது, புற ஊதாக்கதிர்களின் தாக்கம், போதுமான அளவு நீர் அருந்தாதது, புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவது, சரும அலர்ஜி, மருந்துகள் என பல்வேறு காரணங்களால் உதடுகள் கருமையாகின்றன.

சருமத்தைப் போலவே உதடுகளையும் பாதுகாக்க உதவும் 7 பயனுள்ள குறிப்புகள் பற்றி தற்போது காணலாம்...

உடலிலேயே மிகவும் மென்மையான தோல் உதடுகளில் அமைந்துள்ளது. இதனால் உதடுகளில் எண்ணெய் சுரப்பிகள் கிடையாது. இதனால் தான் குளிர், வெயில் போன்ற வறட்சியான பருவங்களில் உதடுகள் எளிதில் வறண்டு வெடிப்புகள் ஏற்படுகின்றன. அது நாளாடைவில் உதடுகளை கருமையாகவும் மாற்றுகிறது. மேலும் சில வகை லிப்ஸ்டிக்குகளில் வாசனைக்காக பயன்படுத்தப்படும், பெர்கமோட் போன்ற பொருட்கள் சூரிய ஒளியுடன் வினைபுரிந்து உதடுகளை கருமையாக்குவதும் கண்டறியப்பட்டுள்ளது.
உடல் இயக்கத்திற்கு எப்படி ஊட்டச்சத்து தேவையோ, அதேபோல் உதடுகள் கோவைப்பழம் போல செக்கச்சிவப்பாக இருக்க சில வைட்டமின்கள் உதவுகின்றன. உதராணமாக வைட்டமின்கள் பி, ஏ, பி12 ஆகியவை உதடுகளில் ஏற்படும் வறட்சி, வெடிப்புகள், கருமை ஆகியவற்றை சரி செய்ய உதவுகிறது. எனவே இந்த வைட்டமின்கள் நிறைந்த பப்பாளி, தக்காளி, கேரட், பச்சை இலைக் காய்கறிகள், பருப்புகள், முழு தானியங்கள், ஓட்ஸ் மற்றும் பால் பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சருமத்தில் தேங்கும் இறந்த செல்களை நீக்க இயற்கையான ஸ்க்ரப் வகைகளை பயன்படுத்துவதை போலவே உதடுகளையும் அவ்வப்போது ஸ்க்ரப் செய்ய வேண்டும். ஏற்கனவே கூறியது போல் சருமத்தை விட உதடுகளில் உள்ள தோல் மிகவும் மென்மையானது என்பதால் முழுக்க முழுக்க இயற்கையான பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சில துளி ஆலிவ் எண்ணெய் உடன் எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை கலந்த கலவையை விரலால் எடுத்து, உதடுகள் மீது மெதுவாக தேய்க்கவும். 5 நிமிடத்திற்கு நன்றாக தேய்த்த பிறகு தண்ணீரில் உதடுகளைக் கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளலாம். இதனால் இறந்த செல்கள் நீங்கி, இதழ்கள் புத்துயிர் பெறும். பாலாடை உடன் எலுமிச்சை சாறு கலந்து தினமும் உதடுகள் மீது தடவலாம் அல்லது இரவில் உறங்கச் செல்லும் முன்பு பாதாம் எண்ணெய் தடவலாம்.
உதடுகளை மாய்ஸ்சுரைஸ் செய்வது மிகவும் முக்கியமானது. எனவே தினமும் கற்றாழையை உதடுகளில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவவும்.
உதடுகளில் வறட்சியைப் போக்க தேங்காய் எண்ணெய், ஜோஜோபா எண்ணெய், ஆர்கன் எண்ணெய் ஆகியவற்றைத் தடவலாம். இவற்றில் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளதால் உதடுகளை மென்மையாக பராமரிக்க ஏற்றது.
சூரியனின் புற ஊதாக்கதிர்கள் உதடுகளில் கருமைக்கு முக்கியமான காரணியாக அமைகின்றன. எனவே முகத்திற்கு சன்ஸ்கிரீன் தடவுவது போல், உதடுகளுக்கு சன்ஸ்கிரீன் கொண்ட லிப் பாம்களைப் பயன்படுத்தலாம். லிப் பாம் வகைகளைப் பொறுத்தவரை ரசாயன கலப்பில்லாத மூலிகை அல்லது இயற்கை உட்பொருட்களைக் கொண்டவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்
உதடுகளில் பூசியுள்ள லிப்ஸ்டிக்கை அகற்றும் போது டிஸ்யூ பேப்பர் அல்லது துணி கொண்டு அகற்றக்கூடாது. அதற்கு பதிலாக கிளீனிங் ஜெல் அல்லது கிரீமைப் பயன்படுத்த வேண்டும். அதேபோல் எவ்வளவு காஸ்ட்லியான லிப்ஸ்டிக்காக இருந்தாலும், அதன் காலாவதி தேதி முடிந்துவிட்டால் எக்காரணம் கொண்டும் பயன்படுத்தாதீர்கள். அதேபோல் லிப்ஸ்டிக்கின் நிறம் மாறுவது, துர்நாற்றம் வீசுவது போல் தெரிந்தால் உடனடியாக அதனை தூக்கி எறிவது நல்லது.
Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Lip, Pink lip