முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உங்கள் உதட்டை ரோஜா இதழ் போல மென்மையாக மாற்ற உதவும் லிப் ஆயில் பற்றி தெரியுமா..?

உங்கள் உதட்டை ரோஜா இதழ் போல மென்மையாக மாற்ற உதவும் லிப் ஆயில் பற்றி தெரியுமா..?

லிப் ஆயில்

லிப் ஆயில்

லிப் எண்ணெய்கள் அடிப்படையில் சீரம் போன்றவை ஆனால் சீற்றத்தை விட அதிக செயல் திறன் கொண்டது. லிப் ஆயில் தயாரிப்பதற்கு அடிப்படை பொருட்கள் எண்ணெய். உங்கள் உதட்டை முறையாக பராமரிக்க உதவும் லிப் ஆயிலை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என இங்கே பார்க்கலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வறண்ட உதடுகளை ஹைட்ரேட் செய்யவும், குணப்படுத்தவும் லிப் ஆயில் ஒரு சிறந்த வழியாகும். இவற்றை, இயற்கையான பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே எளிமையாக தயாரிக்கலாம். வறண்ட உதடுகளை ஈரப்பதமாக்குவதற்கு உதவும் லிப் ஆயில்களில் தேவைப்பட்டால் உங்களுக்கு பிடித்த வாசனையையும் தேர்வு செய்யலாம்.

இதற்கு உங்களுக்கு தேவையானது சில பொதுவான வீட்டு பொருட்கள் மற்றும் உங்களுக்கென ஐந்து நிமிடங்கள் ஒதுக்கினால் போதும். வீட்டிலேயே ஒரு ஆரோக்கியமான லிப் ஆயில் தயாரித்துவிடலாம். வீட்டிலேயே லிப் ஆயில் எப்படி தயாரிக்கலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.

லிப் ஆயில் தயாரிக்க தேவையான பொருட்கள்:

2 தேக்கரண்டி பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய் (கேரியர் எண்ணெய்).

உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு எண்ணெயில் 10 சொட்டு.

அதாவது, உங்களுக்கு பிடித்த எண்ணெய் என்றால், உதட்டுக்கு பாதுகாப்பை வழங்கும் மிளகுக்கீரை எண்ணெய், லாவெண்டர் எண்ணெய் அல்லது திராட்சைப்பழம் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இல்லையெனில், யூகலிப்டஸ், ரோஸ்மேரி, தேயிலை மர எண்ணெய் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

லிப் ஆயில் செய்முறை :

படி 1: முதலில் லிப் ஆயில் தயாரிக்க ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக்கொள்ளவும். அதில், கேரியர் எண்ணெய் மற்றும் உங்களுக்கு பிடித்த எண்ணெயை 10 சொட்டு சேர்க்கவும்.

படி 2: இந்த இரண்டு எண்ணெயும் நன்றாக சேரும்வகையில் கலக்கவும்.

படி 3: இப்போது அந்த லிப் எண்ணெயை ஒரு சிறிய பாட்டில் அல்லது லிப்ஸ் ஸ்டிக் டப்பாவில் அடைக்கவும்.

படி 4: இதை குளிர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் வைக்கவும். இப்போது உதட்டு எண்ணெய் தயார்.

Also Read | உங்களுக்கு கரு கருனு அடர்த்தியான முடி வேண்டுமா..? அப்போ இதை செய்யுங்க!

படி 5: தயார் செய்த எண்ணெய்யை பருத்தி துணியில் எடுத்து, உங்கள் உதடுகளில் மெதுவாக தேய்க்கவும். உங்கள் விரல்களைப் பயன்படுத்தி உங்கள் வாயைச் சுற்றி எண்ணெயைப் பரப்பலாம். தேவைக்கேற்ப உதடுகளில் தடவலாம்.

இந்த என்னை உதடுக்கு மட்டும் என்பதால், கொஞ்சம் செய்தாலே நீண்ட நாட்களுக்கு வரும். தேவைப்பட்டால், இவற்றை சிறிய டப்பாவில் அடைத்து உங்கள் பையில் வைத்து கொள்ளலாம்.

இந்த எண்ணெய் உங்களின் உதட்டின் வறட்சியை நீக்கி ஈரப்பதமாக வைக்கும். அதுமட்டும் அல்ல, உங்கள் உதட்டை மென்மையாக்கும். உங்கள் உதட்டில் உள்ள கருமையுடன் போராடும். உதட்டு விரிசல், வெடிப்பு மற்றும் காயங்களை குணப்படுத்த உதவும்.

லிப் ஆயிலைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:

லிப் ஆயில் உங்கள் உதட்டை நீண்ட நேரம் ஈரப்பதமாக வைக்கும்.

லிப் ஆயில் உதட்டில் உள்ள கோடுகள் மற்றும் சுருக்கங்களை சரிசெய்யும்.

உதடு எண்ணெய் உதடுகளின் நிறத்தையும் அமைப்பையும் மேம்படுத்த உதவும்.

உதடுகளை மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க லிப் ஆயில் ஒரு சிறந்த வழியாகும்.

லிப் ஆயிலை லிப்ஸ்டிக்குக்கு மேலும் தடவலாம். இது மேலும் பளபளப்பான மற்றும் கவர்ச்சிகரமான தொடர்த்தை தரும்.

First published:

Tags: Beauty Hacks, Beauty Tips, Coconut oil, Lipstick