லைஃப்பாய், லக்ஸ், டவ்.. சோப்புகளின் விலையைக் குறைக்கும் இந்துஸ்தான் யுனிலிவர்..!

இந்துஸ்தானின் ஃபேஸ் வாஷ், ஃபேர் அண்ட் லவ்லி என பியூட்டி பொருட்களின் விலைகளை 4 - 14 சதவீதமாக அதிகரிக்க முடிவு.

லைஃப்பாய், லக்ஸ், டவ்.. சோப்புகளின் விலையைக் குறைக்கும் இந்துஸ்தான் யுனிலிவர்..!
இந்துஸ்தான் யுனிலிவர்
  • News18
  • Last Updated: August 28, 2019, 6:04 PM IST
  • Share this:
இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் தன்னுடைய சோப்பு வகைகளின் விலையை 30 சதவீதமாக குறைத்துள்ளதாக மிண்ட் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுத்தர வர்க்கம் முதல் மேல்தட்டு வர்க்கம் வரை  இந்துஸ்தான் நிறுவனத்தின் பொருட்கள்தான் பரிட்சயம். அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்திய நிறுவனமான இந்துஸ்தான் வெளிநாட்டு நிறுவனங்களையே கலங்கடித்துவிடும்.

இந்தியாவில் குளியல் சோப்புகள் ஆண்டுக்கு 20,960 கோடி விற்பனை ஆகின்றன. அதில் லக்ஸ், லைஃப்பாய் ஆகிய இரண்டும் அதிகம் விற்பனை செய்யப்படும் சோப்புகளாக உள்ளன.


இந்துஸ்தானின் மற்ற சோப்புகளான பியர்ஸ், ஆயுஷ் , டவ் ஆகியவையும் ஐடிசி, விப்ரோ மற்றும் கோத்ரேஜ் போன்ற பெரிய இந்திய நிறுவனங்களுக்கு நல்ல போட்டியாக உள்ளன.இருப்பினும் சமீப காலமாக வீழ்ச்சியை நோக்கி நகர்வது போல் தெரிந்ததாலும், தொழில் போட்டி காரணங்களாலும் இந்த விலைக் குறைப்பு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Loading...

இதுபற்றி  இந்துஸ்தானின் தகவல் தொடர்பு அதிகாரி  மிண்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "இந்துஸ்தான் யுனிலிவர் தன்னுடைய உடல் பராமரிப்பு மற்றும் காஸ்மெடிக்ஸ் பொருட்களின் விலைகளை குறைக்க முடிவு செய்துள்ளது. இந்த குறைப்பு நான்கு முதல் ஆறு சதவீதமாக இருக்கும். அதோடு வாடிக்கையாளர்களின் நுகர்வுக்கு ஏற்ப மற்ற பொருட்களின் விலைகள் 20 -30 சதவீதம் குறைக்கப்படும்" என்றார்.

இந்த விலைக் குறைப்பு அறிக்கை ஜூலை மாதம் முதலீட்டாளர்கள் மாநாட்டிலேயே சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாகவும், அதன்படியே இந்த சோப்புகளின் விலை 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேசமயம் இந்துஸ்தானின் ஃபேஸ் வாஷ், ஃபேர் அண்ட் லவ்லி என பியூட்டி பொருட்களின் விலைகளை 4 - 14 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் மிண்ட் இதழ் அளித்த அறிக்கையில் எந்தெந்த பொருட்கள் எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளன என்பது விளக்கமாக இல்லை.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...