Home /News /lifestyle /

பளபளக்கும் கூந்தல் வேண்டுமா.? அப்போ இதை ரிவர்ஸில் செய்யுங்கள்! 

பளபளக்கும் கூந்தல் வேண்டுமா.? அப்போ இதை ரிவர்ஸில் செய்யுங்கள்! 

Hair Wash

Hair Wash

Reverse Hair Wash Method | மந்தமான மற்றும் பொலிவற்ற கூந்தலுடன் போராடுபவர்கள் யாராக இருந்தாலும் ரிவர்ஸ் ஹேர் வாஷிங் முறைய முயற்சித்து பார்ப்பது நல்லது.

தலை முடியை மிருதுவாகவும், மென்மையாகவும், பளபளப்பாகவும், நீளமாகவும் வைக்க நீங்கள் நிறைய முயற்சித்துவிட்டீர்களா?. சில நேரங்களில் விலை உயர்ந்த ஹேர் கேர் பொருட்கள் பின்னாலும், சில சமயங்களில் ஆர்க்கானிக் முறையையும் கையாண்டு கூந்தலை பாதுகாக்க படாதபாடு படுகிறீர்களா? இவ்வளவு கஷ்டப்படுவதற்கு பதிலாக நீங்கள் ஏன் ‘ரிவர்ஸ் ஹேர் வாஷிங்’ (Reverse Hair Washing) எனப்படும் தலைகீழ் அலசல் முறையை முயற்சித்து பார்க்க கூடாது.

கூந்தலை அலசுவதில் இப்படியொரு முறையை கேள்விப்பட்டதில்லை என்றால் இது உங்களுக்கான செய்தி தான் கவனமாக படியுங்கள்...

ரிவர்ஸ் ஹேர் வாஷிங் என்றால் என்ன?

அட தலைக்கு குளிப்பதில் என்ன இருக்கிறது. அது தான் வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை குளிக்கிறோமே. எப்போதும் போல் வழக்கமாக தலை அலசுவதால் கிடைக்காத கூந்தல் பராமரிப்பா இந்த புதிய முறையில் வந்துவிடப்போகிறது என நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் சமீபகாலமாக ட்ரெண்டாகி வரும் இந்த ரிவர்ஸ் ஹேர் வாஷிங் முறையால் நல்ல பலன்கள் கிடைப்பது நிச்சயம். வழக்கமாக நாம் அனைவருமே தலைகுளியலில் கூந்தலை அலசுவதற்கு முதலில் ஷாம்புவையும், அதன் பிறகு முடி பளபளப்பாக இருக்க கண்டிஷனரையும் பயன்படுத்துவோம். இதற்கு பதிலாக ரிவர்ஸ் ஹேர் வாஷிங் முறையை பயன்படுத்தினால் கைமேல் பலன் கிடைக்கும் என்கிறார் பிரபல தோல் மருத்துவரான நூபூர் ஜெயின்.



“ஷாம்பு அதிகப்படியான எண்ணெய், இறந்த சரும செல்கள், வியர்வை, அழுக்கு ஆகியவற்றைக் கழுவ உதவுகிறது. ஷாம்பூ கூந்தலை சுத்தப்படுத்தவும், கண்டிஷனர் அதனை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவுகிறது. வழக்கமான தலைகுளியலில் முதலில் ஷாம்பூவை பயன்படுத்தி கூந்தலை கழுவ வேண்டும், அது முடியில் உள்ள அழுக்கை நீக்குவதோடு, வறட்சியை ஏற்படுத்துவதால் கண்டிஷன்ரை பயன்படுத்தி கூந்தலை மாய்ஸ்சுரைஸ் செய்து கொள்ளலாம் என்ற கருத்து நிலவுகிறது”

ஆனால் தலைகீழ் அலசல் முறையில் (Reverse Hair Washing) நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இந்த குளியல் முறையை அப்படியே தலைகீழாக செய்வது தான். அதாவது ஷாம்புவிற்கு பதிலாக முதலில் கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும். இது சரியான குளியல் முறையா? என்பதில் உங்களுக்கு குழப்பம் ஏற்படலாம். அதற்கான விரிவான விளக்கங்களை காணலாம்.

Also Read : முடி அதிகமாக கொட்டாமல் இருக்க இந்த 5 கெமிக்கல்ஸ் உள்ள ஷாம்பூவை வாங்காதீர்கள்!

ரிவர்ஸ் ஹேர் வாஷிங் நன்மைகள்:

ரிவர்ஸ் ஹேர் வாஷிங் எனப்படும் தலைகீழ் அலசல் முறை அனைவருக்கும் பொருந்தாது என்றாலும், ஷாம்புக்கு முன் கண்டிஷனரைப் பயன்படுத்துவதன் மூலம் பல ஸ்கால்ப் வகைகள் பயனடையலாம் என்று ஸ்கின்செஸ்ட்டின் நிறுவனரும் ஆலோசகருமான தோல் மருத்துவரான டாக்டர் ஜெயின் கூறுகிறார்.



நிச்சயமாகவே ரிவர்ஸ் ஹேர் வாஷிங் முறை கைகொடுக்குமா? சில பலன்கள் இதோ உங்களுக்காக...

1. இது எண்ணெய் பசையை போக்க உதவும்:

உங்களுக்கு எண்ணெய் பசையுள்ள உச்சந்தலை இருந்தால் அல்லது கண்டிஷனிங் செய்த பிறகு உங்கள் தலைமுடி க்ரீஸாக இருப்பதை போல் உணர்ந்தால், நீங்கள் உங்களது முடியை அலசும் முறையை மாற்றி, வேறு வழியில் முயற்சித்துப் பாருங்கள், தலைகீழ் அலசல் முறை உங்களது முடிக்கு ஊட்டமளிப்பதற்கும் ஈரப்பதமாக்குவதற்கும் உதவும்.

Also Read : டாட்டூ போடப் போறீங்களா? அதற்கு முன் இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க...

2. இது உங்கள் தலைமுடியை ரசாயனங்களிலிருந்து பாதுகாக்கும்:

ஷாம்பு முடியில் உள்ள அதிகப்படியான எண்ணெய்களை அகற்றும், இதனால் உங்களது தலையில் இருக்கும் பி.எச் அளவு குறைந்து வறட்சி ஏற்படுவதால் முடி உதிரலாம். ஆனால் ஷாம்புவிற்கு முன்னதாக கண்டிஷ்னரைப் பயன்படுத்துவதால், அது ஒரு கவசம் போல் செயல்பட்டு ஷாம்புவின் ரசாயன தாக்குதலில் இருந்து முடியை பாதுகாக்கிறது.

3. இது கூந்தலை சிக்கில் இருந்து தவிர்க்க உதவுகிறது:

மேலும் உங்களது முடி கண்டிஷ்னரை கடைசியாக பயன்படுத்துவதால் கிரீஸ் போல் மாறுவதை தடுக்க உதவுகிறது.



4. இந்த முறையானது உங்கள் தலைமுடிக்கு புத்துயிர் கொடுக்கும்:

மந்தமான மற்றும் பொலிவற்ற கூந்தலுடன் போராடுபவர்கள் யாராக இருந்தாலும் ரிவர்ஸ் ஹேர் வாஷிங் முறைய முயற்சித்து பார்ப்பது நல்லது. இந்த செயல்முறையால் உங்களுடைய முடிக்கு ஒரு புது பொலிவு கிடைக்கலாம்.

பாரம்பரிய கூந்தல் அலசும் முறையில் ஏதாவது தவறு உள்ளதா?

“பாரம்பரிய கூந்தல் அலசும் முறையில் எவ்வித தவறும் இல்லை. சொல்லப்போனால் அது அனைத்து வகை கூந்தலுக்கும் ஏற்றது. இருப்பினும், தலைகீழ் அலசுதல் முறையில் கூந்தலை வாஷ் செய்வது எண்ணெய் பிசு, பிசுப்பு மற்றும் மெல்லிய கூந்தலை கொண்டவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்” என்கிறார் மருத்துவர் ஜெயின்.

Also Read : வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் 7 இன்றியமையாத நன்மைகள்.!

ரிவர்ஸில் கூந்தலை அலசுவது எப்படி?

முதலில் உங்களது தலைமுடியை ஈரப்படுத்தி, கண்டிஷனரைத் தடவி, நன்கு மசாஜ் செய்து 5-10 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதன் பின்னர் கண்டிஷனருக்கு மேல், ஷாம்புவைத் தடவி, இரண்டு பொருட்களையும் ஒன்றாகக் கழுவவும்.

அவ்வளவு தான் தலையை டவலால் துவட்டி விட்டு, நன்றாக உலர்த்தி விட்டு, உங்களுக்கு பிடித்தமான ஷேர் ஸ்டைலை செய்து கலக்குங்கள்...
Published by:Selvi M
First published:

Tags: Hair care, Hair Conditioner, Lifestyle, Shampoo

அடுத்த செய்தி