• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உங்கள் சருமத்தில் மாயாஜாலம் செய்யும் தேன் மற்றும் எலுமிச்சை..

உங்கள் சருமத்தில் மாயாஜாலம் செய்யும் தேன் மற்றும் எலுமிச்சை..

தேன் மற்றும் எலுமிச்சை

தேன் மற்றும் எலுமிச்சை

சரும அழகை பாதுகாக்க இயற்கையில் கிடைக்கும் பொருள் வேண்டுமென்றால் அதில் முக்கிய இடத்தில் தேன் முதலிடத்தில் இருக்கும்

  • Share this:
சரும அழகை பாதுகாக்க இயற்கையில் கிடைக்கும் பொருள் வேண்டுமென்றால் அதில் முக்கிய இடத்தில் தேன் முதலிடத்தில் இருக்கும். அடர்த்தி நிறைந்த தேனில் ஆன்டி ஆக்சிடன்ட்டுகள் இருக்கிறது. கூந்தலில் தேன் பயன்படுத்தினால் அவை முடியை விரைவில் நரைமுடியாக்கிவிடும் என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால் கூந்தல் பராமரிப்பு முதல் சரும பராமரிப்பு வரை தேனை பயன்படுத்தலாம் என்கிறார்கள் அழகு கலை நிபுணர்கள். முகத்தில் முகப்பரு, பருக்களால் பள்ளம், சிறு சிறு குருக்கள், உஷ்ணகட்டிகள், தேமல் அனைத்தையும் தேனை பயன்படுத்தி சரிசெய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல எலுமிச்சை நமது சருமத்தை பொலிவாக்க துணை புரிகிறது. நம் உடலிற்கு குளிர்ச்சி அளிக்க எலுமிச்சை சாறு பருகுகிறோம். பின்பு அந்த தோலை தூக்கி எறிகிறோம். ஆனால் அந்த தோலை நன்கு காயவைத்து பொடியாக்கி கொண்டால் ஏராளமான அழகு குறிப்புகள் செய்து நம் முகத்திற்கு பொலிவு பெற செய்யலாம். எலுமிச்சையில் இருக்கும் ப்ளீச்சிங் தன்மை சருமத்தை அழகாக்குகிறது.

எலுமிச்சை மற்றும் தேன் கலந்து பயன்படுத்துவதால் கிடைக்கும் சரும நன்மைகள் குறித்து இங்கு தெரிந்துகொள்வோம்.,

*எலுமிச்சை பவுடரை, தேன் மற்றும் தயிருடன் நன்றாகக் சேர்த்து முகத்தில் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். இதனால் முகத்தில் உள்ள கருமை முழுவதும் நீங்கி முகம் பளிச்சிடும்.

* எலுமிச்சை பவுடர், தேன், சந்தனம் மற்றும் கற்றாழை நான்கையும் நன்கு சேர்த்து கெட்டியாக பேஸ்ட் போல் கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். இதனை வறண்ட சருமத்தினர் பயன்படுத்தினால் ஈரப்பதம் கிடைத்து சருமம் மென்மையாக மாறும்.

* முகத்தில் கரும்புள்ளிகள், பருக்களால் வந்த பள்ளங்கள். தழும்புகள் போன்ற பிரச்சனைகளுக்கு தேன் தினசரி பயன்படுத்துவதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும். உங்கள் முகம், கழுத்துக்கு தேவையான அளவு தேன் எடுத்து இரண்டு டீஸ்பூன் எலுமிச்சைசாறு சேர்த்து நன்றாக கலக்குங்கள். பிறகு முகத்தில் மசாஜ் செய்து தடவுங்கள். தேன் முகத்துக்கு தேவையான ஈரப்பதத்தை தருவதோடு வறட்சியிலிருந்து காத்து, பருக்கள் வராமல் தடுக்கும்.



* எலுமிச்சை சாறு, தேன் ஒன்றாக கலந்து, அந்த கலவையை விரல்களால் தொட்டு உதட்டின் மீது மசாஜ் செய்யவும். பத்து நிமிடங்கள் வரை ஊற வைத்தால் போதும். வெடிப்பு, தோல் உரிவு பிரச்சனை அனைத்தையும் வரவிடாமல் தடுக்கும்.

* தினமும் தேனை பயன்படுத்தி வந்தால் முகத்தில் வரக்கூடிய சுருக்கங்களை தள்ளிபோடும், வயதான தோற்றத்தை தள்ளி போடும். கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை இறுக்கமாக வைத்திருக்க உதவும்.

* இதேபோல எலுமிச்சை சருமத்தில் இருக்கும் அழுக்கை நீக்கி இறந்த செல்களை வெளியேற்றி சருமத்தை எப்போதும் பளிச் சென்று வைத்திருக்கும். எலுமிச்சையை, தேனுடன் கலந்து பயன்படுத்தும் போதும் சருமம் மினுமினுப்பாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: