• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • டிடர்ஜண்ட் பவுடர் முகத்தில் மட்டுமல்ல உடலிலும் பருக்களை உண்டாக்கும்?

டிடர்ஜண்ட் பவுடர் முகத்தில் மட்டுமல்ல உடலிலும் பருக்களை உண்டாக்கும்?

  • News18
  • Last Updated :
  • Share this:
    பெரும்பான்மையானவர்கள் முகத்தை மட்டும் பாதுகாப்பாக பருக்கள் இல்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள். மார்புப் பகுதியில் உண்டாகும் பருக்களை கண்டுகொள்வதில்லை. அது முகத்திற்கு பரவும் அபாயமும் இருக்கிறது என்பதை புரிந்துகொள்வதில்லை.

    மார்புப் பகுதியில் அதிகமான எண்ணெய் வடிதல், மூடிய சருமத்தால் அழுக்குகள் சேருதல், எண்ணெய் சருமத் துளைகளை மூடிக்கொள்ளுதல் போன்ற காரணங்களால்தான் பருக்கள் உண்டாகின்றன.

    மார்பில் உண்டாகும் பருக்கள் உடைந்தால் அவை அரிப்பு, வியர்வையால் எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இது உங்கள் அன்றாட செயல்களை பாதிக்கும். அவற்றைத் தடுக்க, பராமரிக்க என்னவெல்லம் செய்யலாம்?



    வியர்வை துணியை உடனே மாற்றுங்கள்: உங்களுக்கு மார்புப் பகுதியில் அதிகமாக வியர்வை வழியுமானால், அதை கட்டாயம் அணிந்திருக்கும் ஆடை உறிஞ்சிக்கொள்ளும். உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் சென்று திரும்பினால் உடனே ஆடையை மாற்றிவிட்டு குளித்துவிடுங்கள். கடுமையான வேலையாலும் வியர்வை அதிகம் வந்தால் வேலை முடிந்ததும் ஆடையை மாற்றிவிட்டு குளித்துவிடுங்கள். குளிக்க முடியாத சூழல் இருந்தால் அவ்வபோது உங்கள் மார்புப் பகுதியை துணியை தண்ணீரால் நனைத்து துடைத்துக்கொள்ளுங்கள்.

    பாடி ஸ்க்ரப் : முகத்தில் உள்ள இறந்த செல்களை ஸ்க்ரப் பயன்படுத்தி எவ்வாறு நீக்குகிறீர்களோ அதேபோல் மார்புப் பகுதியிலும் நீக்குங்கள். பாடி ஸ்கர்ப் பயன்படுத்தி முகத்தைப்போல் மார்பும் பகுதியிலும் மசாஜ் செய்து துடையுங்கள்.

    முகப்பருக்களை நீக்க வீட்டுக் குறிப்புகள்!

    பென்சோயில் பெராக்சைடு பாடி வாஷ் : நறுமணம் நிறைந்ததாக இருக்கிறதே என கண்ட கெமிக்கல் நிறைந்த பாடி வாஷ்களும் பருக்கள் வர முக்கியக் காரணம். எனவே பென்சோயில் பெராக்சைடு கொண்ட பாடி வாஷ் பயன்படுத்தலாம். அது மார்புப் பகுதியில் உள்ள கிருமிகளை அழித்து, சருமத்தை சுவாசம் பெற உதவும். பயன்படுத்திய பின் நீங்களே அதை உணர்வீர்கள்.



    துணி துவைக்க பயன்படுத்தும் டிடர்ஜண்டை கவனிக்கவும்: உமன்ஸ் ஹெல்த் மேகஸினில் டெர்மடாலஜிஸ்ட் ஏங்கல்மேன், “வாசனை கலந்த டிடர்ஜண்ட் மற்றும் அதில் கலந்துள்ள கெமிக்கல் பயன்பாடு உங்களுக்கு அலர்ஜியை உண்டாக்கும். மென்மையான சருமம் இருப்பின் கட்டாயம் அவை அலர்ஜியை உண்டாக்கும் “ என்று கூறியுள்ளார். எனவே குறைவான கெமிக்கல், ஆர்கானிக் டிடர்ஜண்டுகளைப் பயன்படுத்துவது நல்லது. வாங்கும் முன் அதன் பின் குறிப்பைப் படித்துவிட்டு வாங்குவது நல்லது.

    கரும்புள்ளிகள் நீங்க... முகப்பருக்கள் மறைய... கொத்தமல்லி!

    உணவில் கவனம்: அதிகமான புரோட்டின் உட்கொள்வதும் பருக்களுக்குக் காரணமாக வாய்ப்புள்ளது. அதேசமயம் வைட்டமின் சத்துகளையும் சீராக எடுத்துக்கொள்வது அவசியம். குறிப்பாக சருமத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் E-யை தினமும் எடுத்துக்கொள்ளுங்கள். அது உங்கள் பருக்களைக் குறைத்து மேனியைப் பாதுகாக்கும். எண்ணெய் உணவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது.

    மருத்துவரை அணுகலாம்: அளவுக்கு அதிகமான பருக்கள் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. அதேசமயம் அது பருக்கள்தானா என்பதை உறுதிசெய்து கொள்வதும் நல்லது.

    இதையும் படிக்க :

    முகப்பருக்களை நீக்க வீட்டுக் குறிப்புகள்!



    கரும்புள்ளிகள் நீங்க... முகப்பருக்கள் மறைய... கொத்தமல்லி!




    லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: