காலநிலை மாற்றத்தால் நமது சருமம் பாதிப்படைந்து பளபளப்பை இழக்கிறது. குறிப்பாக குளிர்காலத்தில் சரும வறட்சி, அரிப்பு, வெள்ளை திட்டுகள் போன்ற பிரச்னை ஏற்படுகிறது. எனவே நாம் பயன்படுத்தும் சோப்பு, க்ரீம், லோஷன் ஆகியவற்றில் கவனம் தேவை. கெமிக்கல் நிறைந்த பொருட்களுக்கு மாற்றாக இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்துவது நல்லது.
ஆயுர்வேத பொருளான குங்குமாதி தைலம் சரும பராமரிப்பில் முக்கிய பங்காற்றுகிறது. குங்குமாதி தைலம் என்பது குங்குமப்பூ, சிவப்பு சந்தனம், சந்தனத்தின் எண்ணெய் கொண்டு இதை தயாரிக்கிறார்கள். இவை எல்லாமே இயற்கை பொருள்கள் என்பதால் சருமத்துக்கு எப்போதும் தீங்கு உண்டாக்காது.
குங்குமாதி தைலத்தை சருமத்தில் பயன்படுத்துவதால் சருமம் தங்கம் போல் பளபளக்கும் என்று கூறப்படுகிறது. குங்குமாதி தைலம் சரும செல்களை புத்துணர்ச்சியூட்டி புதுப்பிப்பதற்கும், சருமத்தை பிரகாசமாக்குவதற்கும் உதவுகிறது. மேலும் வயதான தோற்றத்தை தடுத்து இளமை தோற்றத்தை தக்க வைத்து கொள்ள உதவுகிறது.
Also Read : அழகுசாதனப் பொருட்களை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 4 முக்கியமான விஷயங்கள்!
இதுகுறித்து இன்வேடாவின் நிறுவனர் மற்றும் CEO ஹர்ஷ்வர்தன் மோடி விளக்கியுள்ளார். அதுகுறித்து இங்கு காண்போம்.,
சரும பிரச்சனைகளை தவிர்க்க :
தோல் என்பது சில வகையான புரதங்களால் ஆனது. இந்த புரதங்கள் சருமத்தை மிருதுவாக வைத்திருக்க உதவுகிறது. குங்குமாதி தைலத்தை சருமத்தில் அப்ளை செய்தால் சரும அமைப்பை மேம்படுத்த முடியும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் உள்ள கோடுகள், சுருக்கங்கள் தோன்றுவதை தடுக்க முடியும்.
சருமத்திற்கு பொலிவை தருகிறது :
குங்குமாதி தைலம் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை தருகிறது. சரும செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும் அதே வேளையில், சருமத்தை இளமையாகவும், நீண்ட காலத்திற்கு புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதனால் முன்கூட்டிய வயதான தோற்றத்தை தடுத்து இளமையாக வைத்திருக்க உதவுகிறது. குங்குமாதி தைலம் சருமத்திற்கு இயற்கையான பொலிவை வழங்குவதாக பல நூற்றாண்டு காலமாக நம்பப்படுகிறது.
Also Read : உங்கள் முகத்தை பொலிவாக்க உதவும் இரவு நேர சருமப்பராமரிப்பு குறிப்புகள்..!
முகப்பருவை குறைக்கிறது :
குங்குமாதி தைலம் என்பது ஒரு பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவமாகும், இது பல்வேறு வகையான தோல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கிறது. முகப்பருக்கள் உள்ள சருமத்திற்கு குங்குமாதி தைலம் ஏற்றது. தொடர்ந்து சருமத்தில் அப்ளை செய்துவர முகப்பருவை சரி செய்வது மட்டுமின்றி, முகப்பருவால் ஏற்பட்ட தழும்புகளையும் குறைகிறது. வடுக்கள், கரும்புள்ளிகள், வயதான அறிகுறிகளை அகற்ற குங்குமாதி தைலம் உதவுகிறது.
பொதுவாக குங்குமாதி தைலத்தை தூங்க செல்வதற்கு முன்னர் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் இது ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தையும், தோற்றத்தையும் மேம்படுத்துகிறது.
Also Read : மாட்சா சருமத்திற்கு செய்யும் அற்புதங்களை பற்றி தெரியுமா..? அதில் ஃபேஸ் மாஸ்க் அப்ளை செய்ய டிப்ஸ்
சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்தை சரிசெய்ய :
குங்குமாதி தைலம் சூரிய ஒளியால் ஏற்படும் டேன்னை சரி செய்ய உதவுகிறது. குங்குமாதி தைலம் பயன்படுத்துவது ஒரு வகையான மூலிகை சிகிச்சையாகும், இது அனைத்துவிதமான சருமம் கொண்டவர்களுக்கும் ஏற்றது. குங்குமாதி தைலத்தை பயன்படுத்துவதால் ஃப்ரீ ரேடிக்கல்கள் எனப்படும் தோலில் உள்ள ரசாயனங்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ayurveda, Ayurvedhic skincare, Beauty Tips, Skin Care