Home /News /lifestyle /

‘பளிச்’ அழகைப் பெற ரைஸ் வாட்டரை பயன்படுத்தும் கொரிய பெண்கள்..ட்ரை பண்ணி பாருங்க...

‘பளிச்’ அழகைப் பெற ரைஸ் வாட்டரை பயன்படுத்தும் கொரிய பெண்கள்..ட்ரை பண்ணி பாருங்க...

அரிசி தண்ணீர்

அரிசி தண்ணீர்

Hair Care | கொரியர்கள் எப்போதுமே பாரம்பரியத்தை நேசிக்க கூடியவர்கள். எனவே தான் முன்னோர்களின் முறைப்படி அரிசி தண்ணீரை சரும ஆரோக்கியம் மற்றும் கூந்தல் பளபளப்பிற்கு பயன்படுத்துகின்றனர்.

கொரியாவில் உள்ள பெண்களில் பெரும்பாலானோர் நமது சருமத்தின் அழகு மற்றும் கூந்தல் பராமரிப்பு போன்றவற்றிற்கு ரைஸ் வாட்டர், அதாவது அரிசி தண்ணீரை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். கொரியர்கள் கண்ணாடி போல் ஜொலி, ஜொலிக்கும் சருமத்திற்கு சொந்தக்காரர்களாக உள்ளனர். அவர்கள் எப்போதும் தங்களது சருமத்தை பராமரிப்பதில் அதிக கவனம் கொண்டவர்கள். அதற்கு ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து காஸ்மெட்டிக் மற்றும் மேக்கப் பொருட்களை வாங்கி குவிப்பார்கள் என்று அர்த்தம் கிடையாது.

அரிசி தண்ணீரால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள்:

1. சருமத்தை மென்மையாக்கும்: சென்சிடிவ் சருமத்திற்கு அரிசி தண்ணீர் சிறப்பானது. இது முகப்பரு, எரிச்சல் மற்றும் பிற தோல் அழற்சிகளுக்கு சிகிச்சையளிப்பதாக கூறப்படுகிறது. எனவே தான் இது சென்சிடிவ் ஸ்கின் கொண்டவர்களுக்கு சரியான தீர்வாக உள்ளது.2. துளைகளைக் கட்டுப்படுத்தும்: முகத்தில் உள்ள சரும துளைகள் திறந்து கொள்வதை சரி செய்ய அரிசி தண்ணீர் டோனராக செயல்படுகிறது. இது திறந்துள்ள துளைகளில் படிந்திருக்கும் அழுக்கு, மாசுக்கள், இறந்த செல்களை நீக்குவது, புது செல்கள் உற்பத்தியாவதை ஊக்குவிப்பது போன்ற செயல்களைச் செய்கிறது.

3. பிரகாசிக்கும் சருமம்: முகப்பரு அல்லது சீரற்ற சரும நிறம் கொண்டவர்களுக்கு புளிக்கவைக்கப்பட்ட அரிசி தண்ணீர் மிகவும் பயனுள்ளது. து உங்கள் சருமத்தில் கொலாஜன் உருவாவதை அதிகரித்து, மிருதுவான, பொலிவான நிறத்தை உங்களுக்கு வழங்கும். தவிர, முகத்தில் படிந்துள்ள கறைகள், தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை அகற்ற உதவுகிறது.

Read More : பெண்கள் ஃபிட்னஸ் விஷயத்தில் தவறாக புரிந்து வைத்திருக்கும் 5 விஷயங்கள்..! 


4. வயதாகும் தோற்றத்தை எதிர்க்கும்: அரிசி தண்ணீரில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகமாக உள்ளன, எனவே அவை சருமத்தில் தோன்றும் மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் மீது செயல்பட்டு, வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது.

5. புற ஊதா கதிர்வீச்சில் இருந்து பாதுகாப்பு: கொரியர்களுக்கு சூரியனின் புற ஊதா கதிர்களின் தாக்குதலில் இருந்து சருமத்தை காக்கும் இயற்கையான சன்ஸ்கிரீனாக அரிசி தண்ணீர் பயன்படுகிறது. இது தவிர சூரிய வெப்பத்தால் சருமத்தில் ஏற்படும் கொப்புளங்கள், எரிச்சல், வெடிப்புகள் ஆகியவற்றை குணப்படுத்தவும் உதவுகிறது.

ரைஸ் வாட்டர் மிஸ்ட்:

ஆசியர்களின் உணவில் அரிசி மிகவும் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் கிடைக்க கூடிய அரிசி தண்ணீரானது புற ஊதாக்கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கவும், கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், ரத்த ஓட்டத்தை தூண்டவும், சருமத்தை மென்மையாகவும், சுருக்கங்கள் அற்றதாகவும் மாற்ற உதவுகிறது.
எனவே நாம் கையோடு எடுத்துச் செல்லக்கூடிய வகையில் அரிசி தண்ணீர் மிஸ்ட் ஸ்ப்ரே தயாரிப்பது எப்படி என பார்க்கலாம்...

நீங்கள் சமையலுக்குப் பயன்படுத்தும் அரிசியை சிறிதளவு வேகவைத்து, அதன் தண்ணீரை வடிகட்டி எடுத்து வைக்கவும். ஒரு நாள் இரவு முழுவதும் நன்றாக குளிர்விக்கப்பட்ட நீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தலாம். இல்லையெல் அரிசி தண்ணீரை புளிக்க வைக்க விரும்பினால் அரிசியை ஊறவைத்து வடிகட்டிய பின் அந்த நீரை அப்படியே ரூம் டெம்ப்ரேச்சரில் வைத்து 2 நாட்கள் புளிக்கவைத்து பயன்படுத்தலாம்.அரிசி தண்ணீரால் கூந்தலுக்கு கிடைக்கும் நன்மைகள்:

1. முடி ஆரோக்கியத்தை பராமரிப்பதில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. அரிசி நீரின் புரதம் ஒட்டுமொத்த முடியையும் மேம்படுத்த உதவுகிறது.

2. அரிசி நீரில் முடி மீளுருவாக்கம் செய்ய உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன, இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும். முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வைட்டமின் சி, பி மற்றும் ஈ ஆகியவையும் உள்ளன.

3. முடி ஆரோக்கியமாக இருக்க ஈரப்பதம் தேவை என்றாலும், அதிக ஈரப்பதம் நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்க கூடியது. எனவே அதிகப்படியான ஈரப்பதத்தை சீரமைக்க விரும்பினால் புரதம் நிறைந்த அரிசி நீர் அதற்கு கைகொடுக்கும்.

4. அரிசி தண்ணீர் முடி இழைகளை மென்மையாக்க கூடியது.

5. அரிசி தண்ணீரில் ஈரப்பதமூட்டும் புரதங்கள் உள்ளன, அவை உங்கள் தலைமுடியில் ஏற்படும் சேதங்களை சரி செய்யக்கூடியவை.கூந்தலுக்கு அரிசி தண்ணீரை பயன்படுத்துவது எப்படி?

கடைகளில் அதிக பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் கன்டிஷ்னரை விடவும் அரிசி தண்ணீர் சிறப்பாக செயல்படக்கூடியது. ஷாம்பு பயன்படுத்தி தலையை நன்றாக அலசிய பின்னர், இறுதியாக அரிசி தண்ணீர் கொண்டு தலையை நன்றாக அலச வேண்டும். உச்சந்தலையை நன்றாக மசாஜ் செய்து, 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டுவிட வேண்டும். இதன் மூலம் அரிசி தண்ணீர் உங்கள் உச்சந்தலைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்க முடியும். பிறகு வெறும் தண்ணீரால் தலையை அலசினால் மட்டும் போதும்.

இப்படித்தான் கொரிய மற்றும் ஜப்பானைச் சேர்ந்த பெண்கள் அழகான சருமம் மற்றும் ஆரோக்கியமான கூந்தலை அரிசி தண்ணீர் மூலம் பராமரிக்கின்றனர். இதேமுறையை நீங்கள் சில முறை பின்பற்றினாலே வித்தியாசத்தைக் காண முடியும்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Beauty Tips, Hair care

அடுத்த செய்தி