Home /News /lifestyle /

கொரிய பெண்களின் இளஞ்சிவப்பு உதட்டின் சீக்ரெட் லிப் பாம் : வீட்டில் நீங்களே தயாரிக்க டிப்ஸ்..!

கொரிய பெண்களின் இளஞ்சிவப்பு உதட்டின் சீக்ரெட் லிப் பாம் : வீட்டில் நீங்களே தயாரிக்க டிப்ஸ்..!

 இளஞ்சிவப்பு உதட்டின் சீக்ரெட்

இளஞ்சிவப்பு உதட்டின் சீக்ரெட்

உதடுகள் சிவப்பாகவும், ஈரப்பதத்துடனும் காணப்படும். அதற்கு முழு காரணம் அவர்கள் பாரம்பரிய முறையுடன் லேட்டஸ்ட் குறிப்புகளை கலந்து வீட்டிலேயே தயாரிக்கும் மேனி பராமரிப்பு சாதனங்கள் ஆகும்.

சங்க காலம் தொட்டு நவீன ஆண்ட்ராய்டு காலம் வரை கவிதை என்று வந்துவிட்டாலே பெண்களின் உதட்டைப் பற்றி வர்ணிக்கும் போது கோவைப் பழம் போல் செக்கச் சிவந்திருப்பதாக வர்ணிப்பார்கள். அந்த அளவிற்கு பெண்ணின் முக அழகை மேம்படுத்திக் காட்டுவதில் உதடுகளின் பங்கு முக்கியமானது. ஆனால் இப்போது இருக்கும் பரபரப்பான வாழ்க்கை முறையில் சரும அழகை பராமரிக்கும் பலரும் உதட்டைப் பற்றி கவலைப்படுவதில்லை, மார்க்கெட்டுகளில் கிடைக்கும் விதவிதமான லிப் பாம் மற்றும் லிப்ஸ்டிக்குகளை வாங்கி பூசிக்கொள்கின்றனர்.

இதனால் உதடுகள் மேலும் பாதிப்படையும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பாரம்பரிய முறைகளை பின்பற்றாமல், கெமிக்கல் கலந்த அழகுசாதன பொருட்களை பயன்படுத்தும் முறை உலகம் முழுவதும் பல நாடுகளில் உள்ள பெண்களிடம் காணப்படுகிறது. ஆனால் கொரிய பெண்கள் எப்போதுமே தங்களது சரும அழகை பராமரிக்க பாரம்பரிய முறைகளையும் பின்பற்றி வருகிறார்கள். பார்ப்பதற்கு அவர்களது முகம், சருமம் கண்ணாடி போல் பளபளக்கும்.

உதடுகள் சிவப்பாகவும், ஈரப்பதத்துடனும் காணப்படும். அதற்கு முழு காரணம் அவர்கள் பாரம்பரிய முறையுடன் லேட்டஸ்ட் குறிப்புகளை கலந்து வீட்டிலேயே தயாரிக்கும் மேனி பராமரிப்பு சாதனங்கள் ஆகும். குறிப்பாக கொரிய பெண்கள் தங்களது உதடுகளை வசீகரமாக வைத்திருக்க வீட்டிலேயே உங்கள் பொருட்களை கொண்டு எளிமையான வழிமுறைகளில் தயாரிக்கும் லிப் பாம்களை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. உங்களுடைய மந்தமான உதடுகளை கொரிய பெண்களின் உதடுகள் போல் சிவப்பாக ஜொலிக்க வைக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிப் பாம் செய்முறை உங்களுக்கு கை கொடுக்கும்.

நீங்கள் வீட்டிலேயே தயாரிக்க கூடிய இந்த லிப் பாம், உதடுகளை மென்மையாகவும், காண்போர் பொறாமைப்படக்கூடிய இளஞ்சிவப்பு நிறமாகவும் மாற்றக்கூடிய கொரிய லிப் பாம்களில் ஒன்றாகும்.



தேவையான பொருட்கள்:

லிப் பாம் செய்ய முடிவெடுத்துவிட்டீர்கள் என்றால், முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

நன்றாக மசிக்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரிகள் - 2
ஜெலட்டின் பவுடர் - 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
லெமன் எசன்ஷியல் ஆயில் - 3 - 4 துளிகள்

செய்முறை:

தேங்காய் எண்ணெயை மைக்ரோவேவில் வைத்து சுமார் 30 வினாடிகள் சூடாக்கவும். அத்துடன் நன்றாக மசித்து எடுத்து வைக்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் ஜெலட்டின் பவுடரை சேர்த்து கலக்கவும். ஜெலட்டின் நன்றாக உருக வேண்டும் எனவே 50 விநாடிகள் வரை சூடாக்கவும். அத்துடன் லெமன் எசன்ஷியல் ஆயிலை 3 முதல் 4 துளிகள் வரை சேர்த்து நன்றாக கலக்கவும்.

ஒரே மாதிரி புடவைக்கட்டி போர் அடிக்குதா? இப்படி ட்ரை பண்ணுங்க சூப்பரா இருக்கும்..

சூடான இந்த கலவையை குளிர்வித்து ஒரு கண்ணாடி குடுவைக்குள் ஊற்றவும். இந்த லிப் பாமை பயன்படுத்தும் முன்பு உங்களுடைய உதடுகளை நன்றாக மசாஜ் செய்துவிட்டு, அதன் பின்னர் இதனை பூசிக் கொண்டால் செக்கச்சிவந்த உதடுகள் காண்போரை கவர்ந்திழுக்கும். மேலும் இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால் இந்த லிப் பாம் உங்கள் உதடுகளுக்கு மிகவும் பாதுகாப்பானது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Lipstick, Pink lip

அடுத்த செய்தி