நிச்சயம் பலரும் குளிக்கும்போது மற்ற பாகங்களுக்கு சோப்பு பயன்படுத்துவது போல்தான் கால் பாதங்களையும் சுத்தம் செய்வார்கள். ஆனால் இது தவறானது என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
என்றைக்காவது தினமும் கழுவி சுத்தமாக வைத்திருந்தாலும் கால் பாதங்கள் ஏன் துர்நாற்றம் வீசுகின்றன. பூஞ்சை உருவாகிறது என்று யோசித்தது உண்டா..?
இறந்த செல்களை அகற்ற நிச்சயம் அவசியம். அதற்கு தொடர்ச்சியான கழுவுதல் மூலம் ஸ்கிரப் செய்து இறந்த செல்களை நீக்க வேன்யும். ஆனால் பலரும் அதை செய்வதில்லை. இதனாலேயே பூஞ்சை தொற்று, துர்நாற்றம் வர காரணமாகிறது.
இதற்காக நீங்கள் தினமும் சோப்பு போட்டு சுத்தம் செய்வது மட்டும் தீர்வாகாது. அப்படி சோப்பு போடுவது தவறு என்கிறார் தொற்று நோய் நிபுணர் அமேஷ் ஏ. அடல்ஜா.
” உங்கள் பாதங்கள் எப்போதும் பாக்டீரியாக்கள் சூழ்ந்தது. அது விரல்களின் இடுக்குகளில் தங்கி பெருகவும் செய்யும். இந்த சமயத்தில் நீங்கள் பயன்படுத்தும் சோப்பு நீர் விரல் இடுக்குகளில் தேங்கி பூஞ்சையாக உருவாகி புண் வர தொடங்கும். எனவேதான் சோப்பு பயன்படுத்தக்கூடாது.
இதற்கு பதிலாக வினிகர் பயன்படுத்துங்கள். அதுவே பூஞ்சை தொற்றுக்கு சிறந்த மருந்து என்கிறார் மருத்துவர். இது பூஞ்சை மட்டுமன்றி துர்நாற்றம் , இறந்த செல் நீக்கம் போன்றவற்றிற்கும் உதவும் என்கிறார். கண்ணுக்குத் தெரியாத மைக்ரோ பாக்டீரியாக்களை கூட வினிகர் அழித்துவிடும். எனவே தண்ணீரில் ஒரு மூடி வினிகருக்கு இரண்டு ஜக் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கால்களை 15-20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
Also Read : பெண்களிடம் அதிகரிக்கும் இரும்புச்சத்துக் குறைபாடு... நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவுகள்..!
இதை தினமும் அல்லது உங்கள் பாத பிரச்சனை சரியாகும் வரை செய்து வாருங்கள். இப்படி செய்து வர நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள். ஹெர்பல் மற்றும் ஃப்ரூட் வினிகரை பயன்படுத்தாதீர்கள். அதில் கூடுதல் மூலக்கூறுகள் சேர்க்கப்பட்டிருக்கும்.
இந்த கால் பராமரிப்பை அதிக வியர்வை தரும் கோடைக்காலத்தில் நிச்சயம் இந்த டிப்ஸ் உதவும். நாள் முழுவதும் ஷூ அணிவோரும் துர்நாற்றம் வராமல் இருக்க முயற்சி செய்யலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.