• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஹேர் டை புற்றுநோயை உண்டாக்குமா..? வேறு என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என தெரிந்துகொள்ளுங்கள்...

ஹேர் டை புற்றுநோயை உண்டாக்குமா..? வேறு என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என தெரிந்துகொள்ளுங்கள்...

ஹேர் டை

ஹேர் டை

ஹேர் டை வாங்கும் முன் இந்த இரண்டு கெமிக்கல்களும் இருக்கிறதா என பார்த்து வாங்குங்கள். இல்லையெனில் சிறந்த வழியாக இயற்கையான முறையில் மருதாணி, கறிவேப்பிலை , காஃபி தூள் , டீ தூள் கொதிக்க வைத்த தண்ணீர் போன்ற வழிகளை பின்பற்றுங்கள்.

  • Share this:
    30 வயதிலேயே நரை முடிகள் வருவதால் பலரும் ஹேர் டையை இளம் வயதிலேயே பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். ஹேர் டை ஆபத்து இல்லை என்றாலும் செயற்கையான முறையில் கெமிக்கல் நிறைந்த ஹேர் டை பயன்படுத்துவது ஆபத்து என்கிறார் தோல் மருத்துவர் பைரவி.

    இந்த கெமிக்கல் நிறைந்த ஹேர் டை பல விதமான பாதிப்புகளை உண்டாக்கும் என்கிறார். ஏனெனில் இந்த பாக்கெட் ஹேர் டைகளில் அமோனியா மற்றும் பாராபெனிலெனிடமைன் (PPD ) என்னும் இரு வகையான ஆபத்து நிறைந்த கெமிக்கலை பயன்படுத்துகின்றனர். எனவே அதை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் நரை முடி கூடுதலாக உருவாகுதல், தலைமுடி உதிர்வு, தலைமுடி உடைதல், முடி வளர்ச்சி குறைதல் இப்படி தலைமுடி பிரச்னைகளை சந்திப்பீர்கள் என்கிறார்.

    அதுமட்டுமன்றி முகக் கருமை, இளமையிலேயே வயதான தோற்றம் ,சரும அலர்ஜி போன்ற சரும பாதிப்புகளையும் உண்டாக்கும் என்கிறார். ஒரு கட்டத்தில் இந்த கெமிக்கல்கள் உங்களுக்கு புற்றுநோயை கூட உண்டாக்கும் என்னும் அதிர்ச்சி தகவலையும் அளிக்கிறார் மருத்துவர் பைரவி.

    எனவே ஹேர் டை வாங்கும் முன் இந்த இரண்டு கெமிக்கல்களும் இருக்கிறதா என பார்த்து வாங்குங்கள். இல்லையெனில் சிறந்த வழியாக இயற்கையான முறையில் மருதாணி, கறிவேப்பிலை , காஃபி தூள் , டீ தூள் கொதிக்க வைத்த தண்ணீர் போன்ற வழிகளை பின்பற்றுங்கள்.

    மேக்அப் பொருட்கள் வாங்கும்போது பின் பக்கம் இதெல்லாம் போட்டுருக்கானு பாத்து வாங்குங்க..!

    முக்கியமாக அரைத்து விற்கப்படும் மருதாணி பொடிகளையும் வாங்காதீர்கள். அதிலும் பிபிடி கெமிக்கல் கலப்படம் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே நீங்களே அரைத்து பயன்படுத்துவது நல்லது என்கிறார்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: